Wednesday, December 26, 2007

நவராத்திரி - ஒன்பதாம் நாள்

நவராத்திரி - ஒன்பதாம் நாள்
*************************************

பராசக்தியை ஒன்பதாம் நாள் பிரமி(பெருமி - ப்ரம்மி)யாகக் கருதி வழிபாடு செய்யவேண்டும். பிரமி பிரமனின்(படைப்புக் கடவுள்) சக்தி. சரசுவதியும் (சரசு=குளம்; வதி=வசிப்பவள்) இவளே. அன்னமிழுக்கும் விமானத்தில் பயணிக்கும் இவள் வெள்ளைத் தாமரைப்பூவில் ஞானத்தின் உருவமாக இருப்பவள். இவளுக்குப் பிடித்த ஆசனம் தர்ப்பைப் புல்.


பவுத்த மதத்தில் சரசுவதிக்கு சிம்ம வாகனம். வேதாரண்யத்தில் "யாழைப் பழித்த மொழியாள்" என்னும் பெயருடன் அம்மை வீற்றுள்ளாள்.

"கல்விக்கதிபதியான சரசுவதியை முறையுடன் மனமாற வேண்டுபவருக்கு, தேன்,பால்,திராட்சை போன்ற இனிய சொற்கள் சித்தியாகும்; காவியம் போற்றும் நாயகனாகத் திகழ்வார்;" என சவுந்தரிய லகரி 15ம் செய்யுள் கூறும்.

தஞ்சை மாவட்டம் கூத்தனூரில் இவ்வம்மைக்குத் தனிக் கோயில் உண்டு.

படையல்: கொண்டைக் கடலை சுண்டல்
துதிக்கவேண்டிய இராகம்: வசந்தா


நவராத்திரி தொடர் முற்றிற்று.

0 Comments: