Wednesday, December 26, 2007

நவராத்திரி - இரண்டாம் நாள்

நவராத்திரி - இரண்டாம் நாள்
*************************************

மயிடத்தின்(எருமை) தலையுடனும், மனித உடலுடனும் இருந்த மகிடன்(மகிஷாசுரன்) எனும் அரக்கனை வதைத்த மகாலக்குமியின் அவதாரமான வராகியை(தேவியின் சேனைத் தலைவி) வழிபடல்வேண்டும். தேவி அவதாரத்தில் அவளின் தோற்றம்: சிவப்பு நிறத்தில் செந்தாமரையில் வீற்றிருக்கும் அம்மைக்கு 18 கைகள். அவைகளில், செபமாலை, கோடரி, கதை, அம்பு,வச்சிராயுதம், தாமரை, வில், கமண்டலம்,தண்டாயுதம், சக்தி ஆயுதம், கத்தி, கேடயம், சங்கு, மணி, மதுக்கலயம், சீலம், பாசம், சக்கரம் தாங்கியவள்.

இவளை,"இராச இராசேசுவரி"யாகத் துர்க்கயின் வடிவத்தில் பூசித்தல் நலம்; கரும்புவில், மலரம்பு, பாசாங்குசம் தாங்கிய வடிவத்தில் அலங்கரித்து வணங்குதல் நலமென்பார் சிலர்.

படையல்:வெண்பொங்கல், இனிப்புத் தீனி வகைகள்.
துதிக்கவேண்டிய இராகம்: கல்யாணி

10 Comments:

Anonymous said...

பதிவு மட்டுமில்லை, படங்களும் மிக அருமை.

அம்பாளை 'ராஜராஜேஸ்வரி'யாக துதிப்பதால் பலன்கள் கூடுமோ?

தினம் ஒரு பதிவுன்னு இந்த நவராத்திரி விழா அருமையாகப் போகப்போகுதுன்னு
'பட்சி' சொல்கிறது.

ரொம்பவே சந்தோஷமா இருக்கு அண்ணா.

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

Anonymous said...

அன்புத் தங்கையே,
யாவரும் நலமா?
//அம்பாளை 'ராஜராஜேஸ்வரி'யாக துதிப்பதால் பலன்கள் கூடுமோ?//

அன்னை ஒருவள்தான். நாம்தான் நம் மனநிலைகளுக்கேற்ப அவளை அலங்கரிக்கின்றோம். நம் குழந்தைக்கு அழகு செய்து, பார்த்து மகிழ்வது போல.

பலன்கள் கூடுவது குறைவதும் நாம் எவ்வளவு மனம் ஒருநிலைப்பட்டு ஆதிசக்தியைப் பூசிக்கிறோம் என்பதில்தான் உள்ளது. எந்த உருவைப் பூசிக்கிறோம் என்பதில் இல்லை.

பட்சி சொல்படி கேட்டுவிட்டால் போகிறது!

மிக்க நன்றி.

Anonymous said...

ஞானவெட்டியான் அய்யா
படங்கள் மிக அருமை. அன்னையின் சிரிப்பு கொள்ளை அழகு.

//விழா அருமையாகப் போகப்போகுதுன்னு 'பட்சி' சொல்கிறது//
டீச்சர் சொன்னதை மாணவன் நானும் வழி மொழிகிறேன்.

வாராகி, வராக அம்சம் ஆதலால், மாந்த்ரீக உபாசனையில் அவளுக்கு மிக்க சிறப்பு என்று சொல்லக் கேள்வி.

ஒரு வேண்டுகோள்.
படையல் குறிப்பு போலவே
ஒவ்வொரு நாளும் தேவியின் முன் சொல்ல எளிமையான குட்டிப் பாடல்களைக் கொடுத்தால், கத்துக்குட்டிகள் நாங்களும் பாடி மகிழ்வோம்!
(பிகு: எனக்குச் சுமாராக பிறரைப் பயமுறுத்தாமல் பாட வரும் :-) )

Anonymous said...

அன்பு கண்ணபிரான்,
"அம்மை ஆயிரம்" எனும் தலைப்பில் அம்மையைப்போற்றிப் பாட 1008 மந்திரங்கள் தந்துள்ளேன். அதையே பாடலாமே!
அனைத்து தேவியருக்கும் அது பொருந்தும்.

Anonymous said...

ஐயா!
அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டி; உலகில் இனியாவது அமைதி வரட்டும்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
மிக்க நன்றி

Anonymous said...

We are all benifited by your post and the pictures. We look fowrward to your continued service. Thank you .

Anonymous said...

படங்களும் பதிவும் நன்றாக உள்ளது சார்

Anonymous said...

My Dear Gopalan,
Thank you very much.

Anonymous said...

அன்பு என்னார்,
மிக்க நன்றி.