விவேக சிந்தாமணி
**********************
36.மூப்பிலாக் குமரிவாழ்க்கை முனையிலா வரசன் வீரங்
காப்பிலா விளைந்தபூமி கரையிலா திருந்தவேரி
கோப்பிலான் கொண்டகோலங் குருவிலான் கொண்டஞானம்
ஆப்பிலா கசடுபோலே யழியுமென் றுரைக்கலாமே.
மூத்தவர் துணையில்லாக் குமரியின் வாழ்க்கையும், கோபமற்ற அரசனின் வீரமும், பாதுகாப்பற்ற விளைந்த நிலமும், கரையில்லாத ஏரியும், செல்வம் இல்லாதவனின் ஆடம்பரமும், குரு இல்லாத மாணாக்கனின் ஞானமும், அச்சாணியில்லா வண்டி போல் அழிந்துபோகும்.
Monday, December 31, 2007
36.மூப்பிலாக் குமரிவாழ்க்கை முனையிலா
Posted by ஞானவெட்டியான் at 7:50 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//குரு இல்லாத மாணாக்கனின் ஞானமும்,//
அதான் ஏகலைவன் ஆச்சாரியரை குருவாக ஏற்றுக் கொண்டானோ.
அன்பு என்னார்,
ஆமாம்.
Post a Comment