Thursday, December 27, 2007

இஸ்லாத்தின் 11 கடமைகள்

இஸ்லாத்தின் 11 கடமைகள்
******************************
அஸ்ஸலாமு அலைக்கும். - வணக்கம்.

"எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை."

அந்த இறைவனின் தாளைச் சரணடைந்து, மனமுருகிக் கையேந்திப் பிச்சை கேட்டதால், என் மனமென்னும் நிலத்தில் அவன் போட்ட கருவென்னும் வித்து முளைத்து, நிலத்தைத் துளைத்துக் கொண்டு வெளிவரத்துடிக்கிறது.

எனக்கு முன் அநுபமின்மையால், எதை முதலில் கூறுவது, எதைப்பின் கூறுவது என்று அறியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

அவைகளையெல்லாம் நான்,

"சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னாக் கேட்டுங்க
கெட்டதுன்னா (என்னை)விட்டிடுங்க"

ஆறும் ஐந்தும் - பதினோரு கடமைகளே

மறலியாகிய எமன் கையில் தப்புவித்து ஞானத்தின் முடிவு பலனாகிய முத்திச் செயலாகிய பரிசுத்த ஜீவப் பிரயாணத்தின் பத்து அடையாளங்ஙளை எனக்குத் தந்தருளி என் தூல தேகத்தை மண் தீண்டாமல் இருக்கும் உன்னத நிலையைத் தந்தருளி ஆட்கொள்ளும் ஆதி பிதாவாகிய ஸ்ரீல ஸ்ரீ சாலை ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள்மறையை நான் படித்து, புரிந்து, அறிந்தவாறு :

ஒரு தனிக்கருணைப் பிரவாகத்தினாலே தனது நாட்டத்துள் புதையலாக கிடந்த அருள் கொழிக்கும் கன்சூல் மகபியாவென்கிற அரூப தெய்வநீதி நெறியைத் தமது தெரிசியர்கள் மூலமாக இறக்கி (வஹி) மாநுடனுக்கு விதியாக்கி வைத்திருக்கும் புனித குரானாகிய திருமறையில் இறைவன் அறிவிக்கிறான் (அறிவில் + உறுத்துகிறான்):

1.நான் உன்னிடத்தில் ஒரு தலைமுறை காலம் மட்டும் குடியேறி இருக்கிறேன்; நீ என்னை அறிய மாட்டாயா?

2.இங்கே நீ என்னைப் பார்க்காவிட்டால் அங்கே நீ விழி குருடனாகவே தானிருப்பாய்.

3.இதற்கன்றியே அல்லாது, மனிதனை நாம் வீணுக்காகப் படைக்கவில்லை.

4.மனிதனானவன், என்னுடைய இரகசியப் பெட்டகம்.

5.மனிதனுடைய இதையத்திலன்றி, நாம் வேறெங்கும் வெளியாகிறதில்லை.

6.நான், ஆதத்துடைய சூரத்தைக் (வாக்கு / வாய்மை / வாய்மெய்) கொண்டு வெளியாகி இருக்கிறேன்.

7.ஒன்னில் (உன்னில், ஒப்புயர்வற்ற ஒன்றில், ஒருகோடி ஜபவிரிவுகளைக் கொண்டுள்ள ஒன்றில்) இருக்கும் என்னை நீ பார்ப்பதற்காகவும், உன்னை நீ அறியாவிட்டால் உன்னை நான் மனிதன் என்று படைத்ததாகவும், என் முன்னால் நீ நிரூபிக்க முடியாது.

மேற்கூறியவற்றினுக்குச் சாட்சி சொல்லவே, முதற்பாட்டை விதியாக 6+5=11 காரியங்களையும் தன்னில் அறிந்து வணங்கவேண்டும் என்று கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி, 11 கடமைகளையும் தன்னுடய இதயலோகத்தின் கதவானது திறப்பிக்கப்பட்டு,
கல்பு என்னும் நெஞ்சில் (கல்பு என்பதற்குப் பல பொருள்கள் உண்டு) பிரம்மப் பிரகாச மனக்கண் திறந்து என்னாளும் நிலையாய வலிமை, புதுமை சிந்தும் கிரணக்கதிரிலங்க மனு எப்பொழுதும் தன்னை மட்டுமே வணங்கித் தொழவேண்டும் என்பதே ஏகாம்பரமாகிய (ஏக+அம்+பரம்) இறைவனின் கட்டளை.

இவ்வாறு தொழுபவறே, நிறை நிசவாச மனத்தினர்.

முப்பாட்டுக் கூட்டுறவு :

பசிப்பிணியின் சங்காரமும், உடல் பொருள் ஆவி என்னும் மனோ, வாக்கு, காயம் என்னும், உயிர், ஆத்துமாவென்னும், அசித்து, சித்து, ஈசுவரன் என்னும் அகது, உகது, வாகிது என்பனவே.

கடமைகள் பதினொன்று :

1. கலிமாவின் பொருளறிதல்.

2. ஓதும் கலிமாவை யெண்ணி யெண்ணி யோதுதல்.

3. ஜக்காத்து என்னும் தானம்.

4. உபவாச ஜபம்.

5. ஹஜ் யாத்திரை.

6. ஏகனாயகத் தத்துவம் - அல்லாஹ் ஒருவனே ஆண்டவன்.(ஒன்றே குலம் ஒருவனே தேவன்)

7. ஏகன்வழித்தோன்றல்களான மலக்குகளை மரியாதை செய்வது.

8. இறைவனிறக்கிய வேதங்களைப் படிப்பது.

9. இறைவனின் மார்க்கத்தில் உயிராய் நிலைப்பது.

10.இறுதி நாளாம் கியாமத்தில் பங்கேற்பது.

11.மஹதி அலைகிஸ்லாம் வந்து இறுதித் தீர்ப்பு நடத்தும் நாளில் கணக்கு கேட்டல்.

இப்படியாக 11 காரியக் கடமைகள் மநுவுக்கு இஸ்லாம் விதித்துள்ளது. இதை, இஸ்லாத்தின் 17 இமாம்களும், விரிவாக வகுத்துள்ளனர்.

இதில் 1 முதல் 6 வரை கூறப்பட்ட கடமைகள் ஈமான் என்னும் இறைநம்பிக்கையை வளர்ப்பதற்கும், 7 முதல் 11 வரை வகுக்கப்பட்ட கடமைகள் வணக்கதிற்கு.

மவுலானா ரூமியின் தத்துவங்கள், தற்கலை பீர்முகமது அப்பா அவர்களின் பிஸ்மில் குற்றம் முதலிய நூல்கள் விரிவாக விவாதித்துள்ளன. மேற்கூறியவற்றை ஆறு பாதை, ஐந்து வணக்கம் எனக்கொள்ளலாம்.

ஆறு பாதைகள் :

ஹரிகத்து, தரிகத்து, ஹக்கீகத்து, மஹரிபத்து, முகம்மத்து, அகமத்து.

ஐந்து வணக்கங்கள் : திக்ரூ, ஜல்லி, ரூஹி, சிர்ரி, கபி.

4 Comments:

Anonymous said...

ஐயா! பகவான் இராமகிருஷ்ணர்
இந்து , கிறித்தவம், இஸ்லாத் என்று மூன்று மதங்களின் நெறிகளை கடைபிடித்து வாழ்ந்து எப்பாதையில்
போனாலும் இறைவன் ஒருவனே
என்பதை அறிவித்ததாக என் தந்தை சொல்வார். மேற்சொன்ன இஸ்லாத் கோட்பாடுகளை படிக்கும் போது , அதையும் சிவமயமான நீங்கள்
விளக்கும் போது தங்களுக்கும் அந்த அனுபவம் உண்டோ என்று கேட்க
தோன்றுகிறது..கேட்டு விட்டேன்.

Anonymous said...

அன்பு இராமா,

செல்லும் வழி வேறாயினும் அடையும் இடம் ஒன்றே. அதுவே பரிபூரணம்.

மனிதன் பரிபூரணத்திலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு சிறிய துகள். மதம் உண்டாக்கப்பட்டதோ நன்மைக்கே. அந்தந்த இடங்களுக்குத் தகுந்தவாறு வேதங்கள் இறக்கப் பெற்றன.

அதே மனிதன், தான் சிந்திக்க ஆரம்பித்தவுடன், தான் நன்றாய் வசதியாய் வாழ மதங்களைப் பயன்படுத்தினான். தன் வாதத் திறமையால் மற்றவர்களையும்
கட்டாயப் படுத்தி, "என் மதம் உயர்ந்தது; அந்த மதம் தாழ்ந்தது" என சமயக் கலவரங்களைத் தூண்டுகிறான்.

எல்லா மதத்தின் கருவும் ஒன்றே. எல்லாம் மெய்ப்பொருள் காண்பதே. இதில் பேதம் பார்ப்பதும், பேசுவதும் ஏசுவதும் மன்னிக்கப் படக் கூடியது அல்ல.

ஞானவினைபுரிய வந்துவிட்டால் நமது குறிக்கோள் செயல் ஒன்றே. மற்றதெல்லாம் நமக்குஎச்சில் இலை.

dhinakaran said...

can refer in which book did read this messages,plz refer page
bleddy bull sit...,
one more thing remind u "sivan sotthu kulam nasam"....

ஞானவெட்டியான் said...

My dear Dhinakaran,

I need not Quote where it has been said to a man with full of anger who is making a comment "bleddy bull sit...,".

//"sivan sotthu kulam nasam"....//

Do you know the real meaning of this.
"sivan sotthu - சீ(சி)வனின் முதல்(சொத்து) - விந்து. அதை விரயம் செய்பவனின் குலம் அழியும். விந்தில்லாதவனுக்கு குழந்தை எப்படி உண்டாகும். எப்படிக் குலம் தழைக்கும்.