பூந்தியும் (இ)லட்டும்
**********************
நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு மாலை வேளையில் அவரைக்காணச் சென்றபோது, அங்கே இருவகை இனிப்புக்கள்,காரப் பணியாரம், தேனீர் கொடுத்தார்கள். அந்தப் பண்டங்களை உண்டுவிட்டு உரையாடத் தொடங்கியபோது, அவ்வில்லத்தரசி,"என்ன? எல்லாம் சுவையாக இருந்தனவா?" எனக் கேட்டார்கள். "ஆம், அம்மணி; ஆயினும் இனிப்பில் சுவை வேறுபாடு ஒன்றுமே தெரியவில்லையே" என்றேன். அதற்கு அவர்கள்,"எங்கள் இல்லத்திற்கு வருபவர்களுக்கு ஒரு இனிப்பு வைப்பது பழக்கமல்ல; இருந்ததோ பூந்தி ஒன்றுதான்; அதையே உருண்டையாகப் பிடித்து வைத்தேன்" என்றார்கள்.
இந்நிலைதான் இப்பொழுது.
சங்கதமா? தமிழா?
பூந்தியா? இலட்டா?
இதற்கு எத்தனை போராட்டம்? வழக்காடல்?
"வித்திலிருந்து மரமா? இல்லை மரத்திலிருந்து வித்தா?
கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா?
பூந்தியிலிருந்து இலட்டா? அல்லது இலட்டிலிருந்து பூந்தியா?"
சற்றே சிந்தியுங்கள் நண்பர்களே!
சரி. வழக்கின் மூல காரணங்களுக்கு வருவோம்.
சங்கதத்திலிருந்து தமிழ் வந்தது; இல்லையில்லை, சங்கதம் தமிழிலிருந்து வந்தது."
எதிலிருந்து எது வந்தால் என்ன?
"பூந்தியும் இனிப்பே;உருட்டிவைத்த இலட்டும் இனிப்பே!"
உங்களுக்குப் பூந்திதான் பிடிக்குமெனின் அதையே வைத்துக்கொள்ளுங்கள். மற்றதை ஒதுக்கிவிடவேண்டியதுதானே!
இல்லை; இலட்டுதான் பிடிக்குமெனின் அதையே வைத்துக்கொள்ளுங்கள். பூந்தியை ஒதுக்கிவிடுங்கள்!
மற்றுமொன்று, கட்டாயப்படுத்தல்.
யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
"தமிழ் என் வீடு; எனக்குப்பிடித்த மாற்றங்களை என்வீட்டில் செய்கிறேன். இதனால் அடுத்தவீட்டில் இருக்கும் சங்கதத்திற்கு என்ன நட்டம்?"
மாற்றங்கள் கண்டு, "நன்றாக உள்ளதே!" என வியந்து மற்றொருவர் அவர் வீட்டில் மாற்றம் செய்யும்பொழுது, இதேபோல் செய்துகொள்கிறார். அவ்வளவுதானே!
மாற்றம் என்பது தமிழ்ச்சொற்களை மீட்டெடுத்து சொற்குவையை இற்றைப்படுத்தலாம். வழக்கிழந்தவற்றை அகழ்ந்தெடுத்தலாம்.
மாற்றம் நன்றாக இருப்பின், விருப்பம் உள்ள மற்றவர்களும் புழங்குகின்றனர்.
விரும்பவில்லையெனில், உங்களுக்கு விரும்பியபடி எழுதிவிட்டுப்போகலாமே!
அவரவர் இல்லத்தினை அவரவர் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே!
ஒருவரை மற்றவர் கட்டாயப்படுத்துவதும், அங்கதம் பேசுவதுமேன்?
இதுவும் தங்களின் சிந்தனைக்கு.
"சிந்தித்தால் சிரிப்பு வரும்; மனம் நொந்தால் அழுகை வரும்"
Sunday, March 04, 2007
பூந்தியா? இலட்டா?
Posted by ஞானவெட்டியான் at 9:19 AM
Labels: தமிழ், மொழிச்சண்டை
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
சரியாகச் சொன்னீர், ஞான வெட்டியான் !
நீண்ட நாட்களின் பின் உங்களைத் தமிழ்மணத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.
நல்ல பதிவு.
அன்பு பனித்துளி,வெற்றி,
மிக்க நன்றி
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்மணத்தில் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால் தொடர்புகொள்ள இயலவில்லை...
ஊருக்கு திரும்பியதும் தொடர்புகொள்கிறேன்...
உடல்நிலையை கவனமாக பார்த்துவாருங்கள்...!!!
மிக அருமையான கருத்தொன்றைச் சொன்னீர்கள் ஐயா.
குமரன் பதிவிலிருந்து வந்தேன்....
அருமையான கருத்து....உங்களைப் போன்ற பெரியோர்கள் சொன்னாலாவது கேட்கிறார்களா பார்ப்போம்...
அன்பு மதுரையம்பதி,
மிக்க நன்றி.
அன்பு செந்தழல் இரவி, குமரன்,
தங்களின் கரிசனத்துக்கு நன்றி. முழு வீச்சில் ஈடுபடக் கொஞ்சம் நாட்களாகும்.
முழு வீச்சில் வருகிறீர்களா?
வாருங்கள் ஐயா,வாருங்கள்.
அன்பு குமார்,
முழு வீச்சு என்றால் பழைய நிலை எனும் பொருளில் கூறினேன்.
இப்போதைய நிலையில் எங்களுக்குத் தேவையான அறிவுரைதான் ஐயா..
"உதிர்த்து வைத்தால் பூந்தி.. உருண்டை பிடித்துக் கொடுத்தால் லட்டு.. இரண்டுமே இனிப்புதான்.. ஒரு சுவையைக் கொடுப்பவைதான்.." - எளிய அறிமுகம் வாயிலாக வலிந்த பிரச்சினைகளை மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை இன்னும் மிகையாக்காமல் இருக்க வேண்டும்..
போதும் இந்த தெருச்சண்டை போல் நடக்கும் மொழிச் சண்டை.. அவரவர் மொழி அவரவருக்கு என்பது அனைவருக்குமே தெரியும் என்றாலும் இங்கே சண்டைக்காரர்கள் அதிகம். தங்களைப் போன்றவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் அறிவுரைகளும் எப்போதோ ஒரு முறைதான் கிடைக்கிறது.
நன்றி ஐயா..
மிக்க நன்றி அனானி.
ஏதோ, என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்!
//"பூந்தியா? இலட்டா?" //
தலைப்பிலேயே இருக்கிறது சுவை...
லட்டா ? என்று கேட்காமல் இலட்டா ? என்று கேட்பதிலிருந்தே எந்த சுவையாக இருந்தாலும் நமது விருப்பத்திற் கேற்றவாறு மாற்றினால் தான் சுவைக்கவே முடியும்.
:)
நம் வீட்டுப் பலகாரம் சுவையில்லாத குப்பை பண்டம் என்று சொல்லி ஒருவன் அவன் கடை விற்காத சரக்கை நம் தலையில் திணிக்க முயன்றால் நாம் என்ன இழிச்சவாயர்களா ?
ஐயா,
வடமொழி தேவபாடை என்பதெல்லாம் பித்தலாட்டம் என்று சென்ற நூற்றாண்டிலேயே தெரிந்துவிட்டது. சமஸ்கிரதம் தேவபாடை தமிழ் சூத்திரபாசை என்று சொல்பவர்களின் மொழியை நாம் இரு கண்ணில் ஒன்றாக பாவிக்க வேண்டும் ?
நம் இரண்டு கண்ணான மொழியும் அதன் வளமும் நன்றாகத்தானே இருக்கிறது. ஒரு கண் புறையோடிப் போனவர்கள் வேண்டுமானால் வடமொழி என் மற்றொரு கண் என்று சொல்லட்டுமே. நன்றாக இருக்கும் நம் கண்ணில் ஒன்றை பிடுங்கி எரிந்துவிட்டு மாற்றான் கண்ணை புகழ்ந்து பேசுவது எதற்கு ?
நடுநிலைமை என்ற பெயரில் நமது மொழியை விட்டுக் கொடுப்பதுதான் நடுநிலையா ?
நமது கண்ணில் விழுந்த தூசியை போய் இரண்டாவது கண் என்று சொல்வது அறியாமை. அதே மனது மாற்றானுக்கும் இருந்தால் போற்றலாம், இல்லை என்று நன்கு தெரிந்தும் இது போன்று எழுதுவதால் என்ன பயன் ?
தூசியை அகற்றி தூய்மை படுத்த முயல்வதற்கே அவர்களுக்கு ஆகவில்லை என்பதும் தாங்கள் அறியததல்ல.
இவை என்கருத்து மட்டுமே.
//மாற்றம் என்பது தமிழ்ச்சொற்களை மீட்டெடுத்து சொற்குவையை இற்றைப்படுத்தலாம். வழக்கிழந்தவற்றை அகழ்ந்தெடுத்தலாம்.//
ஐயா!
நன்று சொன்னீர் செய்யவேண்டியதிதே!!
காலத்தை வீணடிக்காமல்.
அன்பு கோவிகண்ணன்,
தங்களின் கருத்துக்கு நன்றி.
அன்பு யோகன்,
மிக்க நன்றி.
Post a Comment