ஞானவெட்டியான் வகையாக மாட்டிக்கிட்டான்!!
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ஒரு அறிவிப்பு.
இதனால் சகலபேர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் Blogger என்னை ஒழிப்பதற்கென்றே வேண்டுமென்றே எல்லா பதிவுகளையும் மாற்றிவிட்டது.
சந்திக்கும் இக்கட்டுகள்:
1.மிகவும் அல்லல்பட்டு இப்பொழுதுதான் பொங்கலுக்கு இருந்த கூரைவீட்டை(template) பழுதுபார்த்தேன். அந்த templateஐ Blogger ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறது.
2.ஒரே e-mail idல் 11 பதிவுகள் உள்ளன. அதற்குத் தனித்தனியாக e-mail id பதிந்து மாற்ற ஒரு பதிவில் இருந்துவரும் 92 இடுகைகளையும் பின்னூட்டத்துடன் export செய்வது எப்படி?
எல்லோரும் வந்து உதவிசெய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இல்லை எனில் njaanam@gmail.comக்கு தங்களின் மின்னஞ்சல் முகரி தந்தால் தனியாகத் தொடர்பு கொள்கிறேன்.
அப்பாடா! தொலைந்தான்!! என்றால் உதவி செய்யாமலும் இருக்கலாம்!!! (நகைச்சுவைக்காக மட்டும்) smily போடத் தெரியவில்லை!!
Friday, February 09, 2007
ஞானவெட்டியான் வகையாக மாட்டிக்கிட்டான்!!
Posted by ஞானவெட்டியான் at 5:21 PM
Labels: ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
17 Comments:
சோதனை மேல் சோதனை!!!
அடடா
அன்பு அனானி,
அவ்வளவுதானா? உதவி இல்லையா?
ஞானம் சார்,
யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு கூரையை மாற்றக்கூடாதோ.:-)
தனித்து வாழும் தவமுனி என்று நானும் இப்படி என்னுடையா 70 (ஏதொ என் பதிவாச்சே)
பதிவுகளையும் தொலைத்தேன்.
யாராவது வருவார்கள்.
சரியாகிவிடும்.
அய்யய்யோ!!!
போச்சி, போச்சி,
உள்ளதும் போச்சா?
எனக்கு உங்களுக்கு உதவி செய்யுனும்னுதான் ஆசை.
ஆனா, எப்படி?
நானே தத்தக்கா புத்தக்கா!
"கொடுப்பவன் கூரையைப் பிய்த்துக் கொடுப்பான்" என்பார்கள். இப்பொழுது கூரை முழுமையுமே காலி!
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!"
அன்பு மாசிலா,
நன்றி.
முடியவில்லை எனில் "தத்தக்கா புத்தக்கா நாலு காலு; தானே நடக்கையிலே ரெண்டு காலு" ன்னு பாடுவோமா?
உங்களது புதிய டெம்ப்ளேட் சன்னலுக்கு கீழே பழைய CLASSICAL MOODEL TEMPLATE சுட்டியை உபயோகித்து பார்த்தீரா?
அன்பு மாசிலா,
பயன்படுத்திப் பார்க்கிறேன்.
நன்றி.
அய்யா,
எனக்கு வலைப்பதிவு குறித்த விவரங்களை தனிமடலிடுங்கள். (vignesh [at] vicky [dot] in) முடிந்தளவுக்கு உதவுகிறேன்.
வருங்காலங்களில் ஏதேனும் தொழிற்நுட்பம் சார்ந்த உதவிக்கு tamilblogging-support [at] googlegroups [dot] com மின்னஞ்சல் செய்யுங்கள். எங்கள் குழுவில் யாரேனும் ஒருவர் நிச்சயம் உதவுவர்.
ஐயா,
தாங்களின் இடுகை இன்னும் முழுமையாக பீட்டாவுக்குள் மாறவில்லை... :(
இருந்தாலும் இது குறித்து உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன். :)
அன்பு விக்கி,
Templateஐ அனுப்பி வைக்கிறேன்.
மிக்க நன்றி.
தெரியாதே!!
பரவாயில்லை,விக்கி ஏதோ கொடுத்திருக்கார்,பாருங்க.
உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்.
அன்பு இராம்,
மிக்க நன்றி
அன்பு குமார்,
பரவாயில்லை.
விக்கிக்கு அனுப்பியுள்ளேன்.
நன்றி.
நான் வலைப்பதிவு உலகிற்கு புதியவள் என்பதால் ஒன்றும் இன்னும் புரியவில்லை.
முழுவதும் புரியாவிடில் மிக நல்லதே!
அரைகுறையாகப் புரிந்துகொணடு, "என்ன? பெரிய XHTML" என நினைத்து ஏதாகிலும் ஏடாகூடமாகச் செய்து என்மாதிரி வம்பில் மாட்டிக்கொள்வதுதான் வினை!
Post a Comment