Saturday, November 25, 2006

நண்பர் மாசிலாவுக்கு

நண்பர்"மாசிலா"வின் பின்னூட்டம்
*****************************************

தங்களின் பெயர் "மாசிலா" என வைத்துள்ளீர்கள்; ஆயினும் தங்களின் மின்னஞ்சலில் அது உள்ளதே!

//வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில் புத்தியிழந்து எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால் நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?//

"வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில்" என்பதை எப்படி ஒத்துக்கொள்வது. கண்ணால் காண்பதெல்லாம் மாயையே! சிவனைக் கண்ணால் பார்க்கவியலுமா? நான் எந்த இடத்திலும் "வந்தேறி......."
எனக் குறிக்கவில்லையே!

"எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால்"

எவனோ ஒருவன் அல்ல. அவன் உண்மையான சித்தன். அவன் பறையர்களைச் சாடவில்லை. உயர்த்தித்தான் எழுதியுள்ளான். அவன் சாதிவேறுபாடு காட்டி எழுதவில்லை. முழுவதையும் படிக்காமல், புரிந்துகொள்ளாது குற்றம் சுமத்தவேண்டாம். நம் உடலில் உள்ள வாயைப் "பறைச்சி" எனக் குறிப்பிடுள்ளான். வாயும் சொல்லும் இல்லையெனில் உடலும் உள்ளமும் படும்பாடு பட்டால்தான் தெரியும்.

"நட்டகல்லைத் தெய்வ மென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

இதுவும் சிவவாக்கியரின் பாடல்தான்.
இப்பாடலில் முதல் இரண்டுவரிகளை மட்டும் இறைமறுப்பாளர்கள் எடுத்துகொண்டு வசதியாக மற்றுமிரு வரிகளைப் புறக்கணித்து விடுவர்.

அதுபோலன்றி முழுவதையும் படித்துப்பின் தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்.

"நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?"

ஆம் ஐயா. நான் பதிக்கவில்லை. நான் பதிந்ததோ என் பதிவில். என் பதிவில் பதிப்பிக்க என்னைத்தவிற யாருக்கும் உரிமை இல்லை என்பதை யாரும் மறுக்கவியலாது. தமிழ்மணம் ஒரு திரட்டி என்பதை நினைவுகூருங்கள். அது தன்னாலே திரட்டித் தந்துவிட்டது. இதில் என் தவறொன்றுமில்லை.

மதச் சண்டைகளும், தனிமனிதச் சாடல்களும் மலிந்துவிட்ட தமிழ்மணத்தில் எனக்கு உரிமை இல்லை; வேண்டவும் வேண்டாம். நீங்களே வைத்துக்கொள்ளலாம்.

//நீங்கள் துதிபாடும் சைவர்களைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் சுவனப்பிரியனின் (http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html)"சமண பௌத்த மதங்களை அழித்த சைவம்" பதிப்பை படித்துவிட்டு வாருங்கள்.//

ஆமாம். அது ஒன்றுதான் பாக்கி. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்தால் அது தங்களின் அகராதியில் "துதிபாடுதல்" எனப்பொருள் என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மதமும் அடுத்த மதத்தைப் போட்டு மிதித்துத்தான் மேலே வந்துள்ளதென நானும் அறிவேன். இதற்கு அடுத்தவரின் பதிவைப் படிக்கவேண்டுமெனும் கட்டாயம் இல்லை. யார் என்ன எழுதினாலும் திருத்த நான் யார்? அவரவர் கொள்கையை அவரவர் சொல்கிறார்கள். நான் யார் அவர்களை மாற்ற? இல்லை அவர்கள் மாறித்தான் எனக்கு ஆகவேண்டியது என்ன?

ஞானம் எட்டியின் முதல் பகுதியிலேயே என் வேண்டுகோளை இட்டுவிட்டேன். அதையும் கொஞ்சம் படியுங்கள்.

"அன்புடையீர்.

"ஞானமெட்டி" நூல் முழுவதுமே சாதிப் பாகுபாடு உள்ளதைப் போல்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

கீழ்சாதிக்காரன் தன் ஆண்டையை நோக்கி, "ஞான விளக்கம்" கொடுப்பதாக உள்ளது.

"மதமென்னும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்"

"எம்மதமும் சம்மதமே"

"நாமத்தை நீக்கித் தத்துவங்கண்டு உணருவதுவே மனுவின் நோக்கம்"

"எப்பொருள் யார்.............மெய்ப்பொருள் காண்பதறிவு."

"மனுவை மனுவாக மதி."

இதுவே எமது கோட்பாடு.
நண்பர்கள் இதனால் மனம் நொந்து புறக்கணித்தால் பல அரிய ஞானக் கருத்துக்களைப் புறக்கணித்து விடுவர்.

ஆகவே, சுட்டும் விரல் நோக்காது, சுட்டும் பொருளை அறிந்து உணர்ந்து பலன் பெற வாருங்கள் என அழைக்கும்,

ஞானவெட்டியான்"

தங்களின் வினாக்களுக்கு விடையிறுக்கவேண்டியிருந்ததால்தான் இவ்விடுகை.

இன்னும் வலைப்பதிவர்களுக்கு ஆட்சேபம் இருப்பின் தெரியப்படுத்துங்கள். "சிவவாக்கியர் பாடல்களையும், ஞானம் எட்டி" ஆகிய இரு பதிவுகளையும் நீக்கிவிடுகிறேன்.

அதன் இழப்பு வரும் இளைய தலைமுறைக்கே! எனக்கல்ல.

எனக்கே காலம் போதவில்லை. என் நேரத்தையும், திறனையும் வீணடிக்க விரும்பாத்தால் முடித்துக்கொள்கிறேன்.

20 Comments:

ஓகை said...

நண்பர் மாசிலா செய்திருப்பது கருத்து வன்முறை. தனிமனித சாடல்களும், ஆபாச மொழி விமர்சனங்களும், மலிந்திருக்கும் பதிவுகளாக 'மனம்' பரப்பிக் கொண்டிருக்கும் தமிழ் வலையுலகில் பழந்தமிழ் பாடலுக்கு விளக்கம் சொல்லும் உங்கள் பதிவுக்கு இப்படி ஒரு விமர்சனமா?

எப்படி ஐயா கருத்து சகிப்பின்மை வலையுலகில் இந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது? நிஜ வாழ்வில் கூட இப்படி இல்லையே!

கல்வி அறிவும் கணினி அறிவும் உள்ளவர்களால் ஏன் நல்ல மொழியில் எழுதுவது கூட முடியாமல் போய்விடுகிறது?

அசாத்திய நன்னம்பிக்கை உடையவர்களைக்கூட அசைத்துப் பார்த்துவிடும் சோதனை இது!

ஜடாயு said...

ஞான வெட்டியான் அவர்களே,

சைவத்தின் மீது அபாண்டப் பழி சுமத்தும் பொய்யர்கள் பிரசாரம் தவறு என நிறூவும் இந்தப் பதிவைப் படியுங்கள் -

சம்பந்தரும் வள்ளலாரும் இந்து ஜிகாதிகளா?
http://arvindneela.blogspot.com/2006/11/blog-post_24.html

நன்றி.

Anonymous said...

ஞானவெட்டியான் ஐயா,
நீங்கள், உங்களுக்கு பிடித்த கருத்தை, நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் விஷயத்தை சுதந்திரமாக பதியுங்கள். உங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை. பிடிக்காதவர் படிக்காமல் இருந்து விட்டு போகட்டும். வலையுலகில் படிப்பவர் எல்லாம் குழந்தைகள் இல்லை, எது சரி, எது தவறு என்று பகுத்து பார்க்க தெரிந்தவர்கள் தான். தன்னை அதிமேதாவிகளாக கருதிக்கொண்டு அடுத்தவர் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று ஏவல் புரியும் மூடர்களை புறக்கணித்து விட்டு தங்கள் பணியை தொடருங்கள்.

ஞானவெட்டியான் said...

அன்பு ஓகை,
இதுதான் இப்போதைய உலகம்.
இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
தன்னைத் தானே நொந்துகொள்வதைத் தவிற ஒன்றும் செய்ய இயலாது.

ஞானவெட்டியான் said...

அன்பு ஜடாயு,
நான் உண்டு; என் வேலை உண்டு எனப் போய்க்கொண்டுள்ளேன்.
சாதி மதச் சண்டைக்கெல்லாம் நான் வரமாட்டேன்.

என் காலம் பொன்னானது.
காலன் வருவதற்குள் எனக்குத் தெரிந்தவற்றை ஆவணப்படுத்தி விடவேண்டும் என்னும் முனைப்புடந்தான் வலையுகம் வந்தேன்.

வாதத் திறமையுள்ளோர் அவ்விடுகையைப் படித்து வாதிட்டால் நல்லது.

ஞானவெட்டியான் said...

அன்பு பார்த்தா,

மிக்க நன்றி.
தொடருவோம்.

அரவிந்தன் நீலகண்டன் said...

ஐயா ஆன்மப்பயிர் செய்து அறுவடையை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பயிரினை சீர் கெடுக்க வரும் சக்திகளுக்கு வேலியாக அமைய எம் போன்றோர் உள்ளோம். எதுவாயினும் தவறான கோட்பாடுகளால் அனைத்தையும் இனவாத சாதீய பார்வையில் காண்போர் ஒருவேளை அதனை தவறாக சமூக நீதி என்று நினைப்பவராக இருக்கலாம். ஆனால் உண்மை ஒளி உள்ளத்தில் உதயமானால் அவர்களும் மனம் திருந்துவர் என்பதில் ஐயமில்லை. அந்த ஒளியினை ஊட்டும் ஆற்றல் தங்கள் எழுத்துகளுக்கு உள்ளன. ஒருகாலத்தில் சிவன் தான் ஒரிஜீனல் திராவிட கடவுள் என்று சொல்லி வந்தனர். ஆனால் இத்தகைய இனவாத பாகுபாடுகளை சிவன் ஏற்க மாட்டார் (மாணிக்கவாசகரே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே என்றுதானே கூறுகிறார்) என்றதும் அவரையும் வந்தேறி ஆக்கிவிட்டனர். இந்த வந்தேறி கதையே உண்மைக்கு புறம்பானது. அகழ்வாராய்ச்சியாளர்களும் மரபணுவியல் அறிஞர்களும் இதனை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். என்றாலும் முதலையும் மூர்க்கனும் கொண்டதுவிடா என்பது போல இவர்கள் இந்த வந்தேறி இனவாத கட்டுக்கதையை பிடித்துக்கொண்டு அந்த நரிவாலால் நம் ஆன்மிக பாரம்பரியமெனும் அளப் பெரும் கடலை அளக்க முற்படுகின்றனர். ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். நீங்கள் பெற்ற ஞான செல்வங்களை வாரி வாரி வழங்க வேண்டும். இவைகளை நூல் வடிவிலும் கொணரவேண்டும்.

ஞானவெட்டியான் said...

அன்பு நீலகண்டன்,
//ஐயா ஆன்மப்பயிர் செய்து அறுவடையை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

அதற்குத்தான் முயலுகிறேன்.

//பயிரினை சீர் கெடுக்க வரும் சக்திகளுக்கு வேலியாக அமைய எம் போன்றோர் உள்ளோம்.//
நன்றி.

//எதுவாயினும் தவறான கோட்பாடுகளால் அனைத்தையும் இனவாத சாதீய பார்வையில் காண்போர் ஒருவேளை அதனை தவறாக சமூக நீதி என்று நினைப்பவராக இருக்கலாம். ஆனால் உண்மை ஒளி உள்ளத்தில் உதயமானால் அவர்களும் மனம் திருந்துவர் என்பதில் ஐயமில்லை. அந்த ஒளியினை ஊட்டும் ஆற்றல் தங்கள் எழுத்துகளுக்கு உள்ளன. ஒருகாலத்தில் சிவன் தான் ஒரிஜீனல் திராவிட கடவுள் என்று சொல்லி வந்தனர். ஆனால் இத்தகைய இனவாத பாகுபாடுகளை சிவன் ஏற்க மாட்டார் (மாணிக்கவாசகரே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே என்றுதானே கூறுகிறார்) என்றதும் அவரையும் வந்தேறி ஆக்கிவிட்டனர். இந்த வந்தேறி கதையே உண்மைக்கு புறம்பானது. அகழ்வாராய்ச்சியாளர்களும் மரபணுவியல் அறிஞர்களும் இதனை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். என்றாலும் முதலையும் மூர்க்கனும் கொண்டதுவிடா என்பது போல இவர்கள் இந்த வந்தேறி இனவாத கட்டுக்கதையை பிடித்துக்கொண்டு அந்த நரிவாலால் நம் ஆன்மிக பாரம்பரியமெனும் அளப் பெரும் கடலை அளக்க முற்படுகின்றனர்.//

சொல்லக் கருத்து ஒன்றுமில்லை.

//ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.//

எமன் ஏமாந்தால் நடக்கலாம்!

//நீங்கள் பெற்ற ஞான செல்வங்களை வாரி வாரி வழங்க வேண்டும். //

முயன்றுகொண்டுள்ளேன்.

//இவைகளை நூல் வடிவிலும் கொணரவேண்டும்.//

பொருளதவி இல்லை. வந்தால் பார்க்கலாம்!!

குமரன் (Kumaran) said...

ஐயா. 'நீங்கள் எந்த உரிமையில் தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?' என்று நண்பர் மாசிலா கேட்டிருந்தால் அது மிகவும் நகைப்பிற்கிடமானது. தமிழ்மணம் இந்திய மெய்ஞானத்தைப் பற்றி பேசக்கூடாது என்று விதி இட்டிருக்கிறதா என்று தெரியவில்லையே. ஒரு வேளை மாசிலா அவர்கள் தான் தமிழ்மண உரிமையாளரோ? அவர் இப்படி ஒரு புதிய விதி தமிழ்மணத்தில் இட்டிருக்கிறாரோ? தமிழ்மண விதி என்று தெளிவாகச் சொல்லிவிட்டால் அதன்படி நடக்கலாமே. இல்லையேல் தமிழ்மணத்தில் ஏற்கனவே நாட்டாமை செய்பவர்கள் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். நண்பர் மாசிலாவையும் அந்தப் பட்டியலில் இட்டுவிடலாம்.

நண்பர் மாசிலாவோ வேறு யாரோ இப்படிப்பட்ட நாட்டாமைத்தனமான கருத்துகளை இட்டிருந்தால் அதற்கு நீங்கள் ஏன் ஐயா தனியாக பதிவெல்லாம் இடுகிறீர்கள். அது நேர விரயம் தான். அடியேனுக்கு இப்படிப்பட்ட அறிவுரைகள், கட்டளைகள் பல வந்ததுண்டு. சில நேரம் பின்னூட்டங்களில் வெளியிட்டு பதில் உரைத்துக் கொண்டிருந்தேன். பின்னர் அதுவும் செய்வதில்லை. இப்போது குறைந்துவிட்டது.

ஞானவெட்டியான் said...

அன்பு குமரா,

//நண்பர் மாசிலாவோ வேறு யாரோ இப்படிப்பட்ட நாட்டாமைத்தனமான கருத்துகளை இட்டிருந்தால் அதற்கு நீங்கள் ஏன் ஐயா தனியாக பதிவெல்லாம் இடுகிறீர்கள். அது நேர விரயம் தான்.//

இனி இடப்போவதில்லை. இது ஒரு தனிலை விளக்கமாக இருக்கட்டும் என்றுதான் இட்டேன்.

Hariharan # 03985177737685368452 said...

ஞானவெட்டியான் ஐயா,

மாசிலா எப்போதுமே அப்படித்தான் அத்துமீறல் அவர் செய்வதை உணராமல் அடுத்தவர்மீது பாய்வார்.

அரசியல் / சாதிய களத்தில் இது பெரிதாக வெளித்தெரியாது. சந்தைக்கடை சத்தத்தில் இவர் சத்தம் தனித்துத் தெரியாது.

மாசிலா தனது கோப தாபங்களை ஆன்மீகம் எழுதிவரும் தங்களிடம் காட்டியது அறியாமையைக் காட்டுகிறது.
ஆன்மீக வாயிலாய் மிகப்பெரும் தத்துவங்களை ந்மது முன்னோர்கள், சித்தர்கள் நமக்காக விட்டுச் சென்றதை படிக்காததே பாவம், குறைந்தபட்சம் நம் முன்னோர்கள் நம்மையே தாழ்த்தக்கூடிய எந்த ஒரு கருத்தையும் தத்துவமாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

கோவணம் கூட் சொந்தமாக இல்லாத தவநிலையில் இருப்பவனுக்குத் தத்துவம் எழுதும் போது சாதி உயர்வு தாழ்வு எழுதிவைக்க எண்ணம் வராது!

ஆன்மீகத் தடாகத்தில் ஓரமாக நீர் பருகினால் இந்த நிதர்சனம் புரியும்.
தங்கள் சேவை மிக அவசியம் ஐயா!

மாசிலா மாதிரி இளையர் தங்களை தங்கள் எழுத்தின் தளத்தைப் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் சாடியதற்கு வருந்துகிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்பு ஹரிகரன்,

//கோவணம் கூட் சொந்தமாக இல்லாத தவநிலையில் இருப்பவனுக்குத் தத்துவம் எழுதும் போது சாதி உயர்வு தாழ்வு எழுதிவைக்க எண்ணம் வராது!//

சரியாகச் சொன்னீர்கள்.

யார் எந்தச் சாதியாய் இருந்தால் எனக்கென்ன? அடுத்தவேளைக் (ஞானக்)கஞ்சிக்கு என்ன வழி?

nayanan said...

//வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில் புத்தியிழந்து எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால் நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?
//

மாசிலா போன்ற அறியாமை வாதிகள்
நிறைய பேர் உண்டு. அவர்களுக்கும்
சிவன், சிவம் என்றால் யார், யாருடையது
என்பதனைத் தெளிவாகத் தொடர்ந்து
எழுதுங்கள்.

எது பார்ப்பனம்/பார்ப்பனீயம் என்ற வகை தொகை இல்லாத அறியாமையும் தமிழ் மக்களிடம் பெருகிக் கிடக்கிறது.

இவர்களுக்கு வந்தேறிப் பார்ப்பனம்
சொந்த மண் பார்ப்பனம் என்பதை பிரித்தெடுக்கவும் அறியத் தரவேண்டும்.

இப்படியே, மொழி, இலக்கியம், என்று
ஒவ்வொன்றாக மாசிலா போல்
"வந்தேறிப் பார்ப்பனனிடம்" கொடுத்துவிட்டு
கடைசியாக சிவனையும் கொடுத்து விட்டு
தமிழர்கள் யாவரும் பரதேசியாகத்தான் போகவேண்டும்.

எனவே மாசிலா போன்ற கருத்துடையோருக்கும் புரியுமாறு
விளக்கமாக எழுதவும். கடிகள் வரத்தான்
செய்யும். இருப்பினும் அதனை பொருட்படுத்தாது மேலும் விளக்கம் எழுதுங்கள்.

வேப்பிலைக்கே காப்புரிமையை இழக்கும் தருவாய் ஏற்பட்டது போல சிவனுக்கும்
காப்புரிமையை காக்கும் நிலை வருமோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

ஞானவெட்டியான் said...

அன்புத் தம்பி இளங்கோ,

தங்களின் வருகைக்கு நன்றி.

குளத்திடம் கோவித்துக்கொண்டு புட்டம் கழுவாமல் போனால் யாருக்கு நாறும்.
இதற்கெல்லாம் பயந்துகொண்டு என் ஞானக்குவியலை கொட்டிவைக்காமல் காலனுடன் போய்விட்டால், "இவ்வாறான காவியங்கள் தமிழில் இருந்தனவா?" என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

எந்நிலை வரினும் எழுதுவதை நிறுத்தேன். இன்றே 5 இடுகைகள் இட்டுவிட்டேன். இனி வரும் சரமாரி(உடல்நலன் ஒத்துழைக்கின்).

ENNAR said...

சார் விடுங்கள்
மாசிலா அதைப்பார்த்ததும் என்னமோ என எழுதிவிட்டார் என நினைக்கிறேன்.
பறை என்றால் சொல்லுதல், தெரிவித்தல் அதைத்தான் வாய் செய்கிறது அதைத்தான் சித்தர் சொல்லியிருக்கார்.

Anonymous said...

//எந்நிலை வரினும் எழுதுவதை நிறுத்தேன். //

நல்ல தீர்மானம். நன்றி.

மாசு இல்லாதவர் என்று பெயரை வைத்துக் கொண்டு
ஏன் இப்படி அசுத்தமாக எழுதுகிறாரோ.
நாஸ்தீக கண்ணதாசனும் கந்தபுராணத்தை
திட்டுவதற்காக் ஆழ்ந்து படிக்க,
அதுவே அவரை ஆஸ்தீகனாக்கிய அல்லவா.
அது போல் இவர்களுக்கும் காலம் வர வேண்டும்.

ஞானவெட்டியான் said...

அன்பு என்னார்,
விட்டுவிட்டேனே!
சினத்தை மனதில் வைத்துக்கொண்டிருந்தால் இரத்தக் கொதிப்பு எனக்கல்லவா வரும்?

கருப்பு said...

தான் பிரம்மனின் முகத்தில் பிறந்தேன் என்று காலம் காலமாய் சொல்லிக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஆண்ட வந்தேறிப் பார்ப்பனர்களைக் குறை சொன்னால் பாப்பானுக்கும் செளராஸ்டிரனுக்கும் பார்ப்பன அடிவருடிகளுக்கும் பிடிக்காது என்பது இயற்கையே.

பாப்பாத்திக்கும் பறச்சிக்கும் நடந்த சண்டையைப் பற்றி ஒரு பெண்மணி எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்.

http://chennaipriya.blogspot.com/2006/10/blog-post_10.html

நண்பர் மாசிலாவைப் பிடித்து தர்ம அடி போட முனைந்திருப்பது வருந்தத் தக்கது. மற்றபடி தமிழ்மணம் வெறும் திரட்டி என்ற உங்கள் கருத்தினில் உடன்படுகிறேன்.

ENNAR said...

அப்படித்தான் திரு.கருதிருமகனும்
பெரியார் அண்ணதுரை இவர்கள் கம்பராமாயணத்தை ஏசுகிறார்களே அதில் என்னதான் உள்ளது என படித்தவர் அதில் ஈர்க்கப்பட்டு கோவை கம்பனாகிவிட்டார். அர்த்தமுள்ளது இந்து மதம்

ஞானவெட்டியான் said...

கால விரையம் செய்யும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி இடப்படமாட்டாது!!!!