Thursday, October 19, 2006

அரன் ஆயிரம் - 2

அரன் ஆயிரம் - 2
**********************
ஓம் உச்சி நாதா போற்றி

ஓம் உடலே போற்றி

ஓம் உடலின்உயிரே போற்றி

ஓம் உடுக்கைக் கையனே போற்றி

ஓம் உண்ணாமுலை நாயகா போற்றி

ஓம் உணர்வே போற்றி

ஓம் உணர்வில் கருத்தே போற்றி

ஓம் உணவினும் இனியாய் போற்றி

ஓம் உத்தமா போற்றி

ஓம் உந்தியில் உறைவாய் போற்றி

ஓம் உந்தும் சக்தியே போற்றி

ஓம் உமாபதியே போற்றி

ஓம் உமையொருபாகா போற்றி

ஓம் உயர் ஞானம் ஊட்டுவோய் போற்றி

ஓம் உயர்நெறி தருவோய் போற்றி

ஓம் உயர்பல அண்டம் ஆக்கினோய் போற்றி

ஓம் உயிரே போற்றி

ஓம் உயிர்களுக்கு உடலானாய் போற்றி

ஓம் உராசத்தி மணாளா போற்றி

ஓம் உரையால் உணரப்படாத சிவனடி போற்றி

ஓம் உருத்திரா போற்றி

ஓம் உருவே போற்றி

ஓம் உருவுமாய் அருவுமாய் நின்றோய் போற்றி

ஓம் உருவென்று உணரப்படாத மலரடி போற்றி

ஓம் உலகநாதா போற்றி

ஓம் உலகநாயகி மணாளா போற்றி

ஓம் உலகுக்கோர் கண்ணானாய் போற்றி

ஓம் உலகுக்கு உயிரானாய் போற்றி

ஓம் உலகெலாம் படைத்தாய் போற்றி

ஓம் உலகெலாம் காத்து அருள்வோய் போற்றி

ஓம் உலப்பிலா ஒன்றே போற்றி

ஓம் உவமை இலானே போற்றி

ஓம் உள்ளதினுள் எழும் கருவே போற்றி

ஓம் உள்ளத்து ஊறும் தெள்ளமுதே போற்றி

ஓம் உள்ளுமாய்ப் புறமுமாய் நின்றோய் போற்றி

ஓம் உள் உயிர்க்கும் உணவே போற்றி

ஓம் உள்ளொளியே போற்றி

ஓம் உள்ளொளி பெருக்கும் உத்தமா போற்றி

ஓம் உள்ளுயிர்ப்பே போற்றி

ஓம் உன்னாமம் என்னாவில் என்றும் துலங்கிட போற்றி

ஓம் ஊர்த்துவத் தாண்டவ ஈசா போற்றி

ஓம் ஊழியே போற்றி

ஓம் ஊழித் தொல்வினை அகற்றுவாய் போற்றி

ஓம் ஊழிதோறும் உயர்ந்த சிவனடி போற்றி

ஓம் ஊழியில் அழியா உத்தமா போற்றி

ஓம் ஊனே போற்றி

ஓம் ஊனம் நீக்குவோய் போற்றி

ஓம் ஊனின் உள்ளமே போற்றி

ஓம் ஊனினை உருக்கும் உள்ளொளியே போற்றி

ஓம் எக்கணமும் எம்மை ஆள்வோய் போற்றி

ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி

ஓம் எட்டெழுத்தே போற்றி

ஓம் எண்குணனே போற்றி

ஓம் எண்ணானாய் போற்றி

ஓம் எண் திசைக்கு அரசே போற்றி

ஓம் எத்திக்கும் தித்திக்கும் இன்பமே போற்றி

ஓம் எம் உளம் குடி கொண்டாய் போற்றி

ஓம் எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

ஓம் எரி அழல் கையாய் போற்றி

ஓம் எல்லா உயிரும் ஆனாய் போற்றி

ஓம் எல்லா உள்ளத்தும் உறைவாய் போற்றி

ஓம் எல்லா நலமும் தரவல்லோய் போற்றி

ஓம் எல்லா வடிவும் எடுத்தோய் போற்றி

ஓம் எல்லாம் அறிந்தாய் போற்றி

ஓம் எல்லாம் சிவனென நின்றாய் போற்றி

ஓம் எல்லைநிறை குணத்தாய் போற்றி

ஓம் எல்லை கடந்த எந்தாய் போற்றி

ஓம் எலிக்கருள்செய்து மாவலியாக்கினாய் போற்றி

ஓம் எவ்வுயிரின் இயக்கமும் நீயே போற்றி

ஓம் எழுத்தறிநாதா போற்றி

ஓம் எழுத்தானாய் போற்றி

ஓம் எழுதாச் சொல்லின் எழிலே போற்றி

ஓம் எழுதா மறையின் உச்சியே போற்றி

ஓம் எறும்பீசுவரா போற்றி

ஓம் என் வைப்பே போற்றி

ஓம் என் தாதாய் போற்றி

ஓம் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் என்றும் இன்பம் தழைக்க அருள்வோய் போற்றி

ஓம் ஏகத்துவனே போற்றி

ஓம் ஏகபாதா போற்றி

ஓம் ஏகமே அனேகமே போற்றி

ஓம் ஏகாம்பரனே போற்றி

ஓம் ஏடகத்தரசே போற்றி

ஓம் ஏடங்கையாள் மணாளா போற்றி

ஓம் ஏணியே போற்றி

ஓம் ஏத்துவார் இடர் தீர்ப்போய் போற்றி

ஓம் ஏந்தி அருள் தருவோய் போற்றி

ஓம் ஏழ் இருக்கை இறைவா போற்றி

ஓம் ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி

ஓம் ஏற்றிய ஞான விளக்கே போற்றி

ஓம் ஏறுடைக் கொடியானே போற்றி

ஓம் ஏறேறி ஏழுலகும் வலம் வருவாய் போற்றி

ஓம் ஐந்தெழுத்தே போற்றி

ஓம் ஐந்தும் வென்றாய் போற்றி

ஓம் ஐயா போற்றி

ஓம் ஐயனாரே போற்றி

ஓம் ஐயாரப்பனே போற்றி

ஓம் ஐராவதீசுவரா போற்றி

ஓம் ஒத்த சங்காரா போற்றி

ஓம் ஒப்பிலா மணியே போற்றி

ஓம் ஒப்பிலாவம்மை மணாளா போற்றி

ஓம் ஒப்புயர்வற்ற ஒளியே போற்றி

ஓம் ஒருகாலத் தொன்றாக நின்ற சிவனடி போற்றி

ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி

ஓம் ஒளிக்கு முதலே போற்றி

ஓம் ஒளிப்பிழம்பாய் உள்ளே திழும் மலரடி போற்றி

ஓம் ஒளியில் ஐந்தானவா போற்றி

ஓம் ஒளியின் சுடரே போற்றி

ஓம் ஒன்றுமிலா பெருவெளியே போற்றி

ஓம் ஒழிவற நின்றவனே போற்றி

ஓம் ஒன்றானாய் போற்றி

ஓம் ஒன்றா நெஞ்சில் உறையாய் போற்றி

ஓம் ஒன்றிலிருந்து இரண்டானாய் போற்றி

ஓம் ஓங்காரத்து ஒருவனே போற்றி

ஓம் ஓங்கார நாதமேபோற்றி

ஓம் ஓங்கொளி வண்ணா போற்றி

ஓம் ஓசைகொடுத்த நாயகி மணாளா போற்றி

ஓம் ஓசையில் ஏழானவனே போற்றி

ஓம் ஓணேசுவரா போற்றி

ஓம் ஓதரிய பொருளே போற்றி

ஓம் ஓதாவேதம் உணர்வித்தாய் போற்றி

ஓம் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்றவா போற்றி

ஓம் ஓரெழுத்து மந்திரமே போற்றி

ஓம் ஒலிக்கும் நாதமே போற்றி

ஓம் ஓவாப்பிணி ஒழிப்பாய் போற்றி

ஓம் கங்காளா போற்றி

ஓம் கங்கை நாயகா போற்றி

ஓம் கச்சி ஏகம்பா போற்றி

ஓம் கஞ்சனூராண்ட கோவே போற்றி

ஓம் கடந்தை நாயகி மணாளா போற்றி

ஓம் கடம்பவனநாதா போற்றி

ஓம் கடலின் நஞ்சமுதுண்டாய் போற்றி

ஓம் கட்டங்கம் ஏந்தியோனே போற்றி

ஓம் கணக்கு வழக்கைக் கடந்தாய் போற்றி

ஓம் கணபதீசுவரா போற்றி

ஓம் கண்ணன் பணிந்த கழலே போற்றி

ஓம் கண்ணிற் பாவையே போற்றி

ஓம் கண்ணார் அமுதா போற்றி

ஓம் கதிரின் ஒளியே போற்றி

ஓம் கதியே விதியே போற்றி

ஓம் கதி விதி அமைத்தோய் போற்றி

ஓம் கதிர் மண்டல நடுவே போற்றி

ஓம் கதிரவனும் தொழும் ஒளிப்பிழம்பே போற்றி

ஓம் கபாலக் கலனுடையோய் போற்றி

ஓம் கபாலீ போற்றி

ஓம் கமலன் பணிந்த கழலே போற்றி

ஓம் கமலாம்பிகை மணாளா போற்றி

ஓம் கயிலை மலையானே போற்றி

ஓம் கரக்கோவிலா போற்றி

ஓம் கரியுரி உடுத்தவனே போற்றி

ஓம் கருதரிய மாயை களைவோய் போற்றி

ஓம் கருந்தார்க் குழலி மணாளா போற்றி

ஓம் கருநாகக் கண்டா போற்றி

ஓம் கரும்பன்ன சொல்லியம்மை மணாளா போற்றி

ஓம் கருவே போற்றி

ஓம் கருவில் உயிரே போற்றி

ஓம் கருணைக் கடலே போற்றி

ஓம் கருணை மலையே போற்றி

ஓம் கரும்பனையாளம்மை மணாளா போற்றி

ஓம் கரும வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் கருமையின் வெளியே போற்றி

ஓம் கருமணியே போற்றி

ஓம் கருதுவார் கருதும் உருவே போற்றி

ஓம் கருத்தே போற்றி

ஓம் கருத்தின் அருத்தமே போற்றி

ஓம் கருத்தில் நினைவே போற்றி

ஓம் கருத்தாழ் குழலியம்மை மணாளா போற்றி

ஓம் கருத்தறிந்து அருள்வோய் போற்றி

ஓம் கருவழிப் பிறப்பு அறுப்போய் போற்றி

ஓம் கல் தூணே போற்றி

ஓம் கல்நார் உரித்த கனியே போற்றி

ஓம் கல்லாய் ஆனவனே போற்றி

ஓம் கல்யானைக்குக் கரும்பு ஊட்டியவனே போற்றி

ஓம் கல்யாண சுந்தரா போற்றி

ஓம் கல்யாணசுந்தரி மணாளா போற்றி

ஓம் கலகம் தவிர்ப்போய் போற்றி

ஓம் கலையே போற்றி

ஓம் கலையின் ஒளியே போற்றி

ஓம் கவலை, பிணி தீர்ப்பவனே போற்றி

ஓம் கழலும் சிலம்பும் ஆர்க்கும் தாளடி போற்றி

ஓம் கழல் பணிந்தோரைக் காப்போய் போற்றி

ஓம் கற்பக நாயகி மணாளா போற்றி

ஓம் கற்பனை கடந்த சோதி போற்றி

ஓம் கற்றோர் ஏத்தும் கழலே போற்றி

ஓம் கற்றோர் உள்ளத்து உறைவோய் போற்றி

ஓம் கனலே போற்றி

ஓம் கனவிலும் தேவர்க்கு அரியவனே போற்றி

ஓம் கனியே போற்றி

ஓம் கனியினில் இனிமையே போற்றி

ஓம் கனிந்த முக அழகே போற்றி

ஓம் கனிவாய்மொழி அம்மை மணாளா போற்றி


ஓம் காட்சிப் பொருளே போற்றி

ஓம் காடுறைவோய் போற்றி

ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி

ஓம் காந்தேசுவரா போற்றி

ஓம் காம்பன தோளியம்மை மணாளா போற்றி

ஓம் காமனை எரித்தவனே போற்றி

ஓம் காமம் களைவோய் போற்றி

ஓம் காமாட்சி மணாளா போற்றி

ஓம் காரண காரிய வித்தே போற்றி

ஓம் காரண காரியம் வகுத்தோய் போற்றி

ஓம் காரண காரியம் கடந்தோய் போற்றி

ஓம் காரண பஞ்சாக்கரமே போற்றி

ஓம் காரோணத்தாரே போற்றி

ஓம் காலடி பட்டவனே போற்றி

ஓம் காலமே போற்றி

ஓம் காலத்தின் தலைவா போற்றி

ஓம் காலத்தை வென்றாய் போற்றி

ஓம் காலத்தை வகுத்தாய் போற்றி

ஓம் காலனைக் காலால் உதைத்தவனே போற்றி

ஓம் காலகாலா போற்றி

ஓம் காலங்கள் மூன்றாய் ஆனவனே போற்றி

ஓம் காவதேசுவரா போற்றி

ஓம் காவியங் கண்ணியம்மை மணாளா போற்றி

ஓம் காவியமே போற்றி

ஓம் காவியச் சுவையே போற்றி

ஓம் காளத்திநாதா போற்றி

ஓம் காளையப்பா போற்றி

ஓம் காற்றே போற்றி

ஓம் காற்றில் இரண்டானாய் போற்றி

ஓம் கானக வேடா போற்றி

ஓம் கானார் குழலியம்மை மணாளா போற்றி

ஓம் கிரிகுசாம்பிகை மணாளா போற்றி

ஓம் கிழிதுகில் கோவணமுடையானே போற்றி

ஓம் கீழ்வேளூர் ஆளும் கோவே போற்றி

ஓம் குடந்தைக் கோவே போற்றி

ஓம் குண்டலி எழுப்புவோய் போற்றி

ஓம் குணமே போற்றி

ஓம் குணக்குன்றே போற்றி

ஓம் குந்தளநாயகி மணாளா போற்றி

ஓம் கும்பலிங்கா போற்றி

ஓம் குமரன் தந்தையே போற்றி

ஓம் குயிலினு நன்மொழியம்மை மணாளா போற்றி

ஓம் குரவா போற்றி

ஓம் குருவே போற்றி

ஓம் குரோதம் ஒழிப்போய் போற்றி

ஓம் குவளைத் திருவாயே போற்றி

ஓம் குவித்த கரத்துள் வளரும் கருத்தே போற்றி

ஓம் குழவியாம் எமைக் காப்போய் போற்றி

ஓம் குற்றமில் குணத்தோனே போற்றி

ஓம் குற்றம் பொறுத்த நாதா போற்றி

ஓம் குறிகுணம் கடந்தோய் போற்றி

ஓம் குறியற்ற இடமே போற்றி

ஓம் குறைவிலா நிறையே போற்றி

ஓம் குன்றலில் மோகினி மணாளா போற்றி

ஓம் கூத்தா போற்றி

ஓம் கூத்தின் தலைவா போற்றி

ஓம் கூற்றுக்குக் கூற்றானாய் போற்றி

ஓம் கேடிலியப்பா போற்றி

ஓம் கேதாரநாதா போற்றி

ஓம் கொடுமுடிநாதா போற்றி

ஓம் கொற்றவை மணாளா போற்றி

ஓம் கோகிலேசுவரா போற்றி

ஓம் கோடியே போற்றி

ஓம் கோடிநாதா போற்றி

ஓம் கோடிக்கா வாழ் குழகா போற்றி

ஓம் கோணப்பிரானே போற்றி

ஓம் கோதிலா அமுதே போற்றி

ஓம் கோதிலாத் தவமே போற்றி

ஓம் கோல்வளைநாயகி மணாளா போற்றி

ஓம் கோழம்பத்து வாழ் கூத்தா போற்றி

ஓம் கோளரவம் ஆட்டும் குழகா போற்றி

ஓம் கௌரி மணாளா போற்றி

ஓம் சக்கரமே போற்றி

ஓம் சங்கரா போற்றி

ஓம் சங்கத்தமிழ் காத்தோய் போற்றி

ஓம் சங்கக் குழைக் காதுடையோய் போற்றி

ஓம் சங்கொலியே போற்றி

ஓம் சசிகண்டா போற்றி

ஓம் சண்டிகை மணாளா போற்றி

ஓம் சண்பக வனநாதா போற்றி

ஓம் சட்டைநாதா போற்றி

ஓம் சடாமகுடா போற்றி

ஓம் சத்திய வடிவே போற்றி

ஓம் சத்திய வாகீசா போற்றி

ஓம் சத்தியம் காத்தருள்வோய் போற்றி

ஓம் சதாசிவா போற்றி

ஓம் சந்தியாய் நின்ற சதுரா போற்றி

ஓம் சம்புநாதா போற்றி

ஓம் சர்வாங்க நாயகி மணாளா போற்றி

ஓம் சற்குணநாதா போற்றி


0 Comments: