அரன் ஆயிரம் -1
*******************
"சிவசிவ என்கிலர் தீவினை யாளர்சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே."
*********************************
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நாதன்தாள் வாழ்க
ஓம் அக்கமணி பூண்டவனே போற்றி
ஓம் அக்கினி ஈசுவரா போற்றி
ஓம் அகத்துள்ள மலங்கள் அறுப்பாய் போற்றி
ஓம் அகப் பொருளே போற்றி
ஓம் அகிலமும் ஆனாய் போற்றி
ஓம் அகிலமும் ஆண்டாய் போற்றி
ஓம் அகிலாண்டேசுவரி மணாளா போற்றி
ஓம் அங்கைத் தீயோனே போற்றி
ஓம் அச்சனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்போய் போற்றி
ஓம் அசுரர்க்கு வரமளித்தோய் போற்றி
ஓம் அசுரரை வதைத்தோய் போற்றி
ஓம் அஞ்சனாட்சி மணாளா போற்றி
ஓம் அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சுமுக ஆதியே போற்றி
ஓம் அஞ்சைக் களத்தப்பா போற்றி
ஓம் அடக்கமே போற்றி
ஓம் அடல்விடைப் பாகா போற்றி
ஓம் அடலுளானே போற்றி
ஓம் அட்ட மூர்த்தியே போற்றி
ஓம் அடைக்கலம் தருவாய் போற்றி
ஓம் அடியாரை அமருலகு சேர்விப்போய் போற்றி
ஓம் அடியார் தீவினைகள் தீர்ப்போய் போற்றி
ஓம் அடியார்க்கன்பனே போற்றி
ஓம் அடியார்க்கு எளியோனே போற்றி
ஓம் அடியார்க்கு அணிமையானாய் போற்றி
ஓம் அடியார்க்கு அமுதானாய் போற்றி
ஓம் அண்டம் நடுங்க ஆடினாய் போற்றி
ஓம் அணியே போற்றி
ஓம் அணியும் அணிக்கழகே போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அணுவின் நுணுக்கமே போற்றி
ஓம் அண்ட வாணா போற்றி
ஓம் அண்டத்துக்கு அகம் புறம் திகழ்வோனே போற்றி
ஓம் அண்டமாய் விரிந்தாய் போற்றி
ஓம் அண்ணலே போற்றி
ஓம் அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளியே போற்றி
ஓம் அண்ணாமலையே போற்றி
ஓம் அணுகாதாருக்குப் பிணியே போற்றி
ஓம் அத்தனே போற்றி
ஓம் அதிகை வீரட்டனாரே போற்றி
ஓம் அதிகைநாயகி மணாளா போற்றி
ஓம் அந்தியாய் நின்ற அரனே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் அபிராமி மணாளா போற்றி
ஓம் அபயம் அருள்வோய் போற்றி
ஓம் அம்மைக்கு இடபுறம் ஈந்தாய் போற்றி
ஓம் அமரர் குலம் காத்தோய் போற்றி
ஓம் அமிர்தகரவல்லி மணாளா போற்றி
ஓம் அமுதகடேசா போற்றி
ஓம் அமுதத் தமிழ் தந்தோய் போற்றி
ஓம் அமைதி அளிப்போய் போற்றி
ஓம் அம்பலக் கூத்தா போற்றி
ஓம் அமிர்தமுகிழாம்பிகை மணாளா போற்றி
ஓம் அயன் மால் தொழ அருள் செய்தாய் போற்றி
ஓம் அரநெறியப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அரைமாத்திரையில் அடங்கும் மலரடியே போற்றி
ஓம் அரத்துறைநாதா போற்றி
ஓம் அரவாண்டியே போற்றி
ஓம் அருஞ்சொல் நாயகி மணாளா போற்றி
ஓம் அருட் கனலே போற்றி
ஓம் அருள் ஒளி ஆனாய் போற்றி
ஓம் அருள் மழையே போற்றி
ஓம் அருமருந்தே போற்றி
ஓம் அருமையே போற்றி
ஓம் அருமையின் பெருமையே போற்றி
ஓம் அல்லல் களைவோய் போற்றி
ஓம் அல்லியங்கோதை மணாளா போற்றி
ஓம் அலந்தாருக்குத் துணையே போற்றி
ஓம் அலைகடல் மீது நடந்தாய் போற்றி
ஓம் அலையா மனமருள்வோய் போற்றி
ஓம் அவனிவிடங்கா போற்றி
ஓம் அவிநாசியாரே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அழகம்மை மணாளா போற்றி
ஓம் அழகிய நாயகி மணாளா போற்றி
ஓம் அழகின் எழிலே போற்றி
ஓம் அழகெழுதலாகா அருட் சிவனடியே போற்றி
ஓம் அற்றாருக்கு உற்ற துணையே போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அறத்தின் பலனே போற்றி
ஓம் அறம் செழிக்க அருள்வோய் போற்றி
ஓம் அறம் வளர்த்த நாயகி மணாளா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அறிவில் உணர்வே போற்றி
ஓம் அறுமறைச் சிகரத்து அணியே போற்றி
ஓம் அன்பே போற்றி
ஓம் அன்புக்கு அடிமையே போற்றி
ஓம் அன்பருக்கு அணியே போற்றி
ஓம் அன்பொளி ஆனாய் போற்றி
ஓம் அனல்எரி ஏந்தினோய் போற்றி
ஓம் அனலே போற்றி
ஓம் அனைத்து ஆதாரமும் நீயே போற்றி
ஓம் ஆக்குவாய் போற்றி போற்றி
ஓம் ஆக்கியவை அழிப்பாய் போற்றி
ஓம் ஆசு நீக்கி அருள்வாய் போற்றி
ஓம் ஆடலரசே போற்றி
ஓம் ஆண்மையே போற்றி
ஓம் ஆணலாய் பெண்ணலாய் போற்றி
ஓம் ஆணியே சீவனே போற்றி
ஓம் ஆகம முடியே போற்றி
ஓம் ஆசாபாசம் அகற்றுவோய் போற்றி
ஓம் ஆதி பஞ்சாக்கரமே போற்றி
ஓம் ஆதிப் பரம்பொருளே போற்றி
ஓம் ஆதி மாதவத்துள்ளானே போற்றி
ஓம் ஆதி மூர்த்தியே போற்றி
ஓம் ஆதிபாதா போற்றி
ஓம் ஆதியே அந்தமே போற்றி
ஓம் ஆதிரை நாதா போற்றி
ஓம் ஆதிவிடங்கா போற்றி
ஓம் ஆமையோடு அணிந்தவா போற்றி
ஓம் ஆமாத்தூர் அரனே போற்றி
ஓம் ஆம்பல் அணிந்தவா போற்றி
ஓம் ஆரிருள் அண்டம் வைத்தாய் போற்றி
ஓம் ஆருயிர்க்கு அகரமே போற்றி
ஓம் ஆலவாய் அழகா போற்றி
ஓம் ஆலமர் அமலா போற்றி
ஓம் ஆலின்கீழ் அறமுரைத்தோய் போற்றி
ஓம் ஆவடுதுறைச் சோதியே போற்றி
ஓம் ஆவதும் அழிவதும் உன்செயலே போற்றி
ஓம் ஆவுடையப்பா போற்றி
ஓம் ஆவுடைநாயகி மணாளா போற்றி
ஓம் ஆழியும் காயமுமானாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னியுடையாய் போற்றி
ஓம் ஆறு அங்கம் னாய் போற்றி
ஓம் ஆறு சமயமும் கடந்தாய் போற்றி
ஓம் ஆறாதாரத்து ஒளியே போற்றி
ஓம் ஆறாய் விரிந்தாய் போற்றி
ஓம் ஆன்றோருக்கு அமுதே போற்றி
ஓம் ஆன்ம விளக்கமே போற்றி
ஓம் ஆனந்தநாயகி மணாளா போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் இகபரம் கடந்தாய் போற்றி
ஓம் இசையே போற்றி
ஓம் இசைக்கு அரசே போற்றி
ஓம் இசையின் இனிமையே போற்றி
ஓம் இமையாக் கண்ணா போற்றி
ஓம் இமையவர்தம் பெருமானே போற்றி
ஓம் இயக்கமே போற்றி
ஓம் இடைமருதா போற்றி
ஓம் இடையாற்றுநாதா போற்றி
ஓம் இடக்கண்ணாய் மதியைக் கொண்டோய் போற்றி
ஓம் இடப வாகனா போற்றி
ஓம் இடர்களையும் எந்தாய் போற்றி
ஓம் இதயத்தில் இருப்போய் போற்றி
ஓம் இமயம் உறைவாய் போற்றி
ஓம் இமவான் மருகா போற்றி
ஓம் இயங்கும் எழுத்தே போற்றி
ஓம் இயந்திர உருவே போற்றி
ஓம் இயந்திரத்து உட்பொருளே போற்றி
ஓம் இயந்திரத்தின் பலனே போற்றி
ஓம் இரதி மணாளனை எரித்தவா போற்றி
ஓம் இரவு பகலற்ற இடமே போற்றி
ஓம் இரப்போர்க்கு ஈவோனே போற்றி
ஓம் இரைகடல்வாய் அமுதே போற்றி
ஓம் இருநிதியே போற்றி
ஓம் இருபுலத்தாற் இன்புற்று ஏத்தும் தாளடியே போற்றி
ஓம் இருமூன்றெழுத்தே போற்றி
ஓம் இருள் புரை ஈசி மணாளா போற்றி
ஓம் இருள்மாயப் பிறப்பறுப்போய் போற்றி
ஓம் இலிங்கா போற்றி
ஓம் இளங்கொம்பன்னாள் மணாளா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் இறைஞ்சுவாரைக் காப்போய் போற்றி
ஓம் இன்மொழி அருள்வாய் போற்றி
ஓம் இன்பக் கடலே போற்றி
ஓம் இன்னருளில் இரண்டானாய் போற்றி
ஓம் ஈகையே போற்றி
ஓம் ஈசன்தாள் போற்றி
ஓம் ஈசானா போற்றி
ஓம் ஈடற்ற தலைவா போற்றி
ஓம் ஈரம் நிறைந்த நெஞ்சத்தவா போற்றி
ஓம் ஈரேழ் உலகும் காப்போய் போற்றி
ஓம் ஈறெழுத்தே போற்றி
ஓம் ஈன்ற தாயினும் இனியாய் போற்றி
0 Comments:
Post a Comment