Friday, March 26, 2010

தங்களின் பின்னூட்டம் தேவை

என்னை 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் 14 நண்பர்களே,
வணக்கம்.

என் வலைப்பூவில் வரும் இடுகைகளைத் தவறாது படித்துப் பின்னூட்டமிட்ட தங்களின் மேலான கருத்து தேவை.

வழக்கிழந்த நூல்களைச் சேமிக்கும் பணியில் இதுவரை BLOGSPOTல் "சிவசிவ" என்னும் வலைப்பூவில் முயன்று வந்தேன். தற்பொழுது காசுகொடுத்துத் தனியாக DOMAIN "சித்தன்" வாங்கியுள்ளேன். இலவசம் எத்தனை நாள் நீடிக்குமோ தெரியாது. ஆகவே இந்த மாற்றம். இனி என் இடுகைகள் "சித்தன்" வலைப்பூவில் தொடர்ந்து வரும். "சிவசிவ" என்னும் வலைப்பூவை மூடிவிடலாமென நினைக்கிறேன். தங்களின் கருத்து என்னவோ?

Rss feed - http://siththan.com/feed

10 Comments:

ராம்ஜி_யாஹூ said...

good work sir, My support will be there for you always

நாமக்கல் சிபி said...

இதில் இடப்பட்ட அனைத்து இடுகைகளையும் பத்திரப்படுத்தி வேறு தளத்தில் கொண்டு வந்து விடுவீர்கள்தானே!

dondu(#11168674346665545885) said...

பிளாக்கர் சேவையையா சொல்கிறீர்கள்? அதை நிறுத்தப் போவதாகவோ, பணம் சார்ஜ் பண்ணப்போவதாகவோ எங்கும் கேள்விப்படவில்லையே? திடீரென ஏன் இந்த முடிவு?

அன்புன்,
டோண்டு ராகவன்

ஞானவெட்டியான் said...

அன்பு ராம்ஜி, சிபி,
நன்றி.
அன்பு என்.ஆர்.சிபி,
"சிவசிவ" தளத்தில் உள்ள அத்துணை இடுகைகளும் "சித்தன்" தளத்தில் பாதுகாப்பாக உள்ளது.

தருமி said...

ஞானவெட்டி
யான்
திண்டுக்கல்
தமிழகம்

-------- இப்படி முகப்புப் பக்கத்தில் வருகிறது. கொஞ்சம் மாற்றி விடுங்களேன்.

நல்லா இருக்கீங்களா? நம்மூரு பக்கம் தாண்டிப் போறதுண்டா?

ஞானவெட்டியான் said...

அன்பு தருமி,
சரியாகத்தான் உள்ளது.
//நல்லா இருக்கீங்களா? //

ஏதோ வண்டி ஓடுது.

//நம்மூரு பக்கம் தாண்டிப் போறதுண்டா?//

வந்தால்தானே போக

தருமி said...

ஞானவெட்டி
யான் --- என்று பெயர் இரண்டாகப் பிரிந்துள்ளதே

ஞானவெட்டியான் said...

//பிளாக்கர் சேவையையா சொல்கிறீர்கள்? அதை நிறுத்தப் போவதாகவோ, பணம் சார்ஜ் பண்ணப்போவதாகவோ எங்கும் கேள்விப்படவில்லையே?//

அம்மாதிரி ஒன்றும் வரவில்லை.

//திடீரென ஏன் இந்த முடிவு?//

சிறு குச்சாக இருந்தாலும் சொந்த வீடு ஆயிற்றே!

என் மறைவுக்குப் பின்னும் பாதுகாக்கப்படவேண்டிய ஆக்கங்கள் உள்ளதால்தான் இந்த முடிவு.

Dr.Srishiv said...

ஐயா
வணக்கம், மிக்க அருமையான ஒரு தளத்தினை நிறுவி உள்ளீர்கள், அருமை அருமை, அருமை, நீண்ட நாட்களாகவே உங்களின் இந்த தேடல் தொடர்ந்துகொண்டே வருகின்றது, கோவை சிவாவின் உதவியில் ஆரம்பித்து இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது, தொடரட்டும் உங்கள் சேவை, வாழ்க வளமுடன்,
உங்கள் சித்தத்தின் சிவா...திருவருணையில் இருந்து ( முன்பு அசாமில் இருந்து ) :)

ஞானவெட்டியான் said...

அன்பு சிவா,

ஆமாம். தொழில்நுட்ப உதவிக்கு தமிழ்பயணி சிவா இல்லையெனில் சித்தன் தளம் உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே!