சிவவாக்கியர் - 19
*******************
யோக நிலை
**************
19.சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன
..............லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே.
சங்கு = இயங்கு
தாரை = கண்மணி, நாக்கு, வழி,எக்காளம்.
இயங்குதளமாகிய கண்கள் இரண்டு.
அதன் பார்வை உள்ளே புகும் வழி ஒன்று.
கண்கள் பார்க்க, பார்வை காமத்தில் திளைத்து, அது தாரைவழி ஓட, புத்தி தடுமாறி, மழுங்கி மாளும் மானிடர்கள்எத்தனை பேர்.
கண்கள் (சூரிய, சந்திர கலைகள்) வெளிமுகப் பார்வையைத் தவிர்த்து, உள்முகமாகத் திருப்பி அக்கினி கலையுடன் இணையவிட்டு, நாக்கு வழியாக மேலேற்ற உள்நாக்குத் துளையிலிருந்து எக்காளம் ஊதுவது போல் சத்தம் கேட்கும். அப்படிச் செய்ய முடியுமானால் உமையொருபாகனோடு இணையலாம்.
Tuesday, January 01, 2008
19.சங்கிரண்டு தாரையொன்று
Posted by ஞானவெட்டியான் at 5:36 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
////19.சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே.//
இப்பாடலுக்குத் தங்களின் விளக்கம் படித்தேன். இதற்கு எனக்குத் தோன்றிய வேறொரு பார்வையை இங்கு தருகிறேன், தங்களின் கருத்தினை எதிர்நோக்கி;
இடகலை, பிங்கலை எனும் இரண்டு சங்கும், சுழுமுனை எனும் தாரையும் தங்களுக்குள் பின்னிப் பினைந்து, சுவாசமாக நடந்துகொண்டுள்ளது. அந்தப் போக்கிலேயே சுவாசித்து, அதன் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக மங்கவைத்து, ஆயுள் கழிந்து இறப்பது, பெரும்பான்மை மக்களின் வழக்கமாய் உள்ளது. அப்படியல்லாமல், தீவிர யோக சாதகத்தால், இடகலை, பிங்கலைகளின் காலத்தைக் குறுக்கி, சுழுமுனையின் காலத்தைப் பெருக்கி, குண்டலியினை எழுப்பி, சிரசில் இருக்கும் அம்பலத்தில் சேர்த்து, இறையுடன் கலந்து, இறவா நிலைபெறலாம்.
தங்களின் மேலான கருத்துக்காகக் காத்திருக்கும்,
ஹரன்.//
அன்பு ஹரன்,
//அப்படியல்லாமல், தீவிர யோக சாதகத்தால், இடகலை, பிங்கலைகளின் காலத்தைக் குறுக்கி, சுழுமுனையின் காலத்தைப் பெருக்கி, குண்டலியினை எழுப்பி, சிரசில் இருக்கும் அம்பலத்தில் சேர்த்து, இறையுடன் கலந்து, இறவா நிலைபெறலாம்.//
கண்கள் இரண்டு = அவை சூரிட கலை, சந்திரகலை. தாங்கள் சொல்வது "இடகலை, பிங்கலை."
குண்டலினியிலிருந்து எழும்பும் அக்கினி மேலே ஏறும். முக்கலையுடன் ஒன்றத் தொடங்கியவுடனே தன்னாலேயே தாங்கள் கூறியபடி கலைகளின் மாத்திரை(நேரம்) கூடுவதும் குறைவதும் நடக்கும்.
சரி ஏற்றி எதன் வழி மேலேக வேண்டும். தமர்த் துளையாம் உள்நாக்கின் மேற்புறத்தே சங்கைப்போல் வளைந்துள்ள துளைவழியே. பிறகு தான் இறையுடன் (சீவனாகிய சிவனுடன்)கலக்கிறோமா? இல்லையா? என்பது.
தங்களின் கருத்துக்கு நன்றி.
Post a Comment