Thursday, December 27, 2007

ஓங்காரம்

ஓங்காரம்
**************
ஓங்காரம் = பிரணவம்


பிரணவம் இரு வகை. தூலம், சூக்குமம்.(அதிசூக்குமம் நீங்கலாக)


அ,உ,ம எனுமெழுத்துக்களானது பிரணவமாகிய ஓம்.

இதுவே தூலம்.
விந்து நாதமாக உணர்த்துவதே சூக்குமப் பிரணவமான பராசத்தி. சீவன் ஒளிமயமான சிவத்தினிடமாகும். இதை உணர்த்துவதே பிரணவம்.

தூலப் பிரணவம் பருவுடலுக்கு இன்பத்தையும், சூக்குமப் பிரணவம் சூக்கும
உடலுக்கு ஆநந்தத்தையும் அளிக்கும். காரணப் பிரணவம் அருட்சக்தியை நிலைக்கச் செய்யும். மகாப் பிரணவம் வேதாந்த வீட்டில் சேர்ப்பதாகவும் உள்ளது.

ஓங்காரம் ஓரெழுத்து மந்திரம்.

ஓமென்பது முதல்நிலைத் தொழிற் பெயர் - ஒப்புதல், காத்தல்.
ஆகாரம், ஊகாரம் போல ஓம்காரம் பெற்றது சாரியை.ஓங்காரத்திலிருந்து ஐந்து பூதங்களும் தோன்றின. அவைகளை இயக்கும் தெய்வங்கள் (ஆண்டவன் அல்ல) அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அதிலிருந்தே தோன்றினர்.

சரம் (அசைவது), அசரம் (அசைவில்லாதது),
(இவையிரண்டும் சேர்ந்ததே சராசரம்) ஆகிய இயங்குதிணை, நிலைத்திணைப் பொருட்கள் யாவையும் அதிலிருந்தே தோன்றின. மூவகை உயிர்களும் [ ஒருமலமுடைய (ஆணவம் மட்டுமுடைய விஞ்ஞான கலர்), இருமலமுடைய (ஆணவம்,கன்மம் ஆகியவற்றை உடைய பிரளய கலர்), மும்மலமுடைய (ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை உடைய சகலர்) ] பிரணவத்திலிருந்தே தோன்றின.

ஓங்காரத்தின் உட்பொருளைக் குறிக்கவே கணேசப் பெருமானின் உருவத்தைக்
கீழ்க்கண்டவாறு அமைத்துள்ளனர். ஓமே தலையாகவும், சுழி இரண்டும் கண்களாகவும், துதிக்கை சிரத்தினுள்ளே ஊறும் அமிர்தத்தை உறிஞ்சிப் பருகவும், மகாரமே வாயாகவும் விளங்கும்.



ஓங்கார விளக்கம் ஒரு கடல். ஒரு சிறிய தோணியிலே பயணித்த எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.

0 Comments: