ஞானம் எட்டி
***************
54.சோதிமதிசுடரொளியாய் தரித்தவாறுஞ்
............சுடருருவாய்நாதவிந்து தோன்றும்வாறும்
நீதியில்லாப்பாழ்வீட்டி னிலைத்தவாறும்
...........நெல்லியதின்கனியதுபோல் திரண்டவாறும்
கோதிலாக்கனியெனவே பழுத்தவாறுங்
...........குழவியெனப்புவிதனிலே பிறந்தவாறும்
ஆதியிலேகருவூரில் குடியிருந்துஅறிவாலே
.............புவியினில்வந் தமைந்தேனாண்டே.
என் ஆண்டையே கேளும்!
ஒளிபொருந்திய கதிரவனும் சந்திரனும் தங்களின் ஒளியோடு நாதமும் விந்துவுமாய், சுடரின் உருவாய், தோன்றிய வகையும், உடல் (மெய்யாம் நீதி) என்னும் பாழ்வீட்டில் குடியேறி நிலைத்த விதத்தையும், அங்ஙனம் நிலைத்த அவ்விரண்டும் நெல்லிக்கனி போலுருண்டு திரண்டு கருவாய் உருண்டு திரண்ட விதத்தையும், அக்கருப்பையில் குற்றமற்ற(கோதிலா) கனியாய்ப் பழுத்த முறையும், பின்னர் குழந்தையாய் அகிலத்தில் பிறந்த விதத்தையும், அப்படிபிறந்த குழந்தை முதலிலே கருவூரில் (கருப்பையில்) குடியிருந்து அங்கே அறிவைப் பெருக்கிச் சேமித்துக்கொண்டு அவனியில் பிறந்த வரலாறையும், அப்படிப் பிறந்த நான் சொல்லுகிறேன்.
Saturday, December 29, 2007
54.சோதிமதிசுடரொளியாய்
Posted by ஞானவெட்டியான் at 5:22 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment