Monday, December 31, 2007

40.அரவினை யாட்டுவாரு மருங்களி

விவேக சிந்தாமணி
**********************

40.அரவினை யாட்டுவாரு மருங்களி றூட்டுவாரும்
இரவினிற் றனிப்போவாரு மேரிநீர் நீந்துவாரும்
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரு மாருயிர் இழப்பர்தாமே.

பாம்பைப் பிடித்து ஆட்டும் பிடாரன்களும், யானைக்கு உணவு ஊட்டுபவர்களும், இரவினில் தனியே செல்வாரும், ஏரிநீரில் நீந்துபவர்களும், நறுமணம் கமழும் கூந்தலையுடைய விலைமாதரை விரும்புவாரும்,அரசனைப் பகைத்துக் கொண்டவரும் தன் இனிய உயிரை இழப்பார்கள்.

6 Comments:

Anonymous said...

இந்த சொல் அந்த காலத்திற்கு பயன் தரும் இப்பொழுது இது சரியாக இருக்காது என நினைக்கிறேன்

Anonymous said...

இன்று முழுதமிழ்மணத்தையும் ஆட்கொண்டுவிட்டீர்களே! ஒரேநாளில் மிகவும் இடுகைகள் இட்ட சாதனையை நிகழ்த்தியிருக்கிறீர்கள் !! பாராட்டுக்கள்!

நீதிநூல்கள் கற்க இனிமைதான். அதற்கு தக நிற்பதுதான் கடினம்.

Anonymous said...

அன்பு என்னார்,
ஏன்? இக்காலத்தேயும் நிலைமை மாறவில்லை.

Anonymous said...

சாதனை நிகழ்த்தியதற்குப் பாராட்டுக்களா?
வேண்டாமையா! வேண்டாம்.
தனியே சேமித்து வைத்திருந்த 20 பாடல்களை வலைப்பூவில் போட்டு வைக்கலாம்; பின்னர் தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுக்கலாம்; என எண்ணினேன். அதுதான் தவறு.
தமிழ்மணம் அவ்வளவையும் இழுத்துக்கொண்டுவிட்டது.

சிரமங்களுக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.

Anonymous said...

ஆயிரம் அரவத்துடன் அறையில் அவன் இருக்கிறான் தீண்டவில்லை தீண்டினால் உடனே மருந்து.
இரவினில் இவனைக்கண்டால் அது ஓடி விடுகிறது
நீச்சல் வீரர்கள்உள்ள நாடு
தடுப்புண்டு கவசமும் உண்டு
பணம் தான் தேவை
அரசன் இல்லை நமே இன்னாட்டு மன்னர்கள்

Anonymous said...

அன்பு என்னார்,

// ஆயிரம் அரவத்துடன் அறையில் அவன் இருக்கிறான் தீண்டவில்லை தீண்டினால் உடனே மருந்து.
இரவினில் இவனைக்கண்டால் அது ஓடி விடுகிறது//

ஏதோ ஒரு நடப்பை வைத்து மொத்தத்தில் இது இப்படித்தான் என்பதை ஆங்கிலத்தில்" wrong generalisation. Here you are committing the fallacy of illicit middle(LOGICல் வரும்)

//நீச்சல் வீரர்கள்உள்ள நாடு. தடுப்புண்டு கவசமும் உண்டு
பணம் தான் தேவை//

எத்தனை பேர் வெள்ளத்தில் அண்மையில் சென்றனர்?

//அரசன் இல்லை நமே இன்னாட்டு மன்னர்கள்//

ஆமாம். அங்குதான் கோளாறே. அரச பீடத்திலிருப்பவர்தான் அரசன். முடியாட்சியில் ஒரே ஒருவன். தற்போது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். ஒரு வட்டத்தைப் பகைத்தால் போதும் அடுத்த நாள் காவல் நிலயத்தில் அல்லது பிணக் கிட்டங்கியில்.