விவேக சிந்தாமணி
**********************
21.தாங்கொணா வறுமைவந்தால் சபைதனில் செல்லநாணும்
வேங்கைபோல் வீரங்குன்றும் விருந்தினர் காணநாணும்
பூங்கொடி மனையாட்கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும்
ஓங்கிய வறிவுகுன்றி முலகெலாம் பழிக்குந்தானே.
தாங்கமுடியாத வறுமை ஒருவனுக்கு வந்தால், நாலுபேர் கூடியிருக்குமிடம் செல்ல வெட்கம், வேங்கையைப் போலிருந்தவனின் வீரம் குறையும், விருந்தினரைப் பார்க்க வெட்கமுண்டாகும், மலர்க்கொடி போலிருக்கும் மனைவிக்கும் அஞ்சவேண்டியிருக்கும், அற்பர்களின் கூட்டுறவு அதிகரிக்கும், வளரத்தக்க அறிவு குறையும். உலகெலாம் பழிப்பதற்கு இடங்கொடுக்கும்.
Monday, December 31, 2007
21.தாங்கொணா வறுமைவந்தால்
Posted by ஞானவெட்டியான் at 6:49 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
எத்தனை காலங்கள் கடந்தாலும்
நூற்றாண்டுகள் சென்றாலும் மறுக்க இயலா உண்மை இது ஐயா.
அன்பு மது,
பட்டறிவால் எழுதிய நீதிப் பாடல்கள் இவை. எக்காலத்துக்கும் பொருந்தும்.
Post a Comment