Monday, December 31, 2007

118.ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்ற

விவேக சிந்தாமணி
*********************
118.ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்றவர்க்குள்

சூதினால் கபடஞ்செய்து துணைபிரிந்திடுவ ரென்றால்
வேதியன் பவளவாயில் வேசைதாய் பச்சைநாவி
யூதியகதை போலாகி யறுநர கெய்துவாரே.

முதலில், இரு நண்பர்கள் நட்பு மிகுதியால் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். சில நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் அவமதிக்க வேண்டுமென எண்ணி, அதற்காக சூது வஞ்சகங்கள் பல செய்தனர். அதனால் பகை நேர்ந்து ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிவது எவ்வாற் உள்ளதெனில்:

ஒரு விலைமாது, தன் மகளோடு இணைபிரியாது வாழ்ந்துவந்த வேதியனின் வாயில் கொடிய விடத்தை வைத்து ஊதிய கதை போலாகும்.

4 Comments:

Anonymous said...

// தன் மகளோடு இணைபிரியாது வாழ்ந்துவந்த வேதியனின் //

ஏன் வேதியருக்கு இந்த வேலை?...குறிப்பிட்டு அவரை ஏன் சொல்லப்பட்டிருக்கு? சற்று விளக்குங்கள் ஐயா.

Anonymous said...

அன்பு மடுரையம்பதி,
வேதித்துவம் = அறிவு
நன்கு கற்றறிந்த(வேதங்களையும் சேர்த்து) ஒருவனுக்கு வேதியன் என்று பொருள். மற்றபடி ஒன்றுமில்லை.

Anonymous said...

புரிந்தது ஐயா, நன்றி.

Anonymous said...

அன்பு மதுரையம்பதி,
நன்றி