அன்புடையீர்,
மீண்டும் ஞானவெட்டியான் வந்துவிட்டான்; அதுவும் புது BLOGGER அடைப்பலகையுடன்.
அது எப்படி? எல்லோரும் தடுமாறும்போது, இவன் மட்டும்?
அதுதான் நன்றி கூறப்போகிறேனே!
1. தீபா கோவிந்த்: சும்மா சொல்லக்கூடாது. மிகவும் பொருமையுடன் கூகுள் டாக்கில் டியூஷன் எடுத்து, 75% ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார்கள்.
2.பொன்ஸ்: மாட்டிக்கொண்டபோது ஓடிவந்து உதவி செய்தார்.
3.ஜகத்(ரட்சகன்): Recent comments, Recent Posts widget சேர்க்கமுடியாது புலம்பியபோது வந்து உதவியவர்.
4.ஹான்ஸ்: அவர்தான். Beautiful Beta Blogன் படைப்பாளி. என்னென்னமோ எழுதியிருக்கிறார். இந்த மரமண்டையில் ஏறவில்லை. கொஞ்சம் புரிந்துகொள்ள உதவியது.
இந்த நாலுபேருக்கும் நன்றி! நன்றி!!
என்ன வரினும் வருக! என்று முட்டி மோதி காலநேரம் பாராது செய்து முடித்ததில் எனக்கும் மன திருப்தி.
எல்லோரும் வந்து பார்த்து எப்படி இருக்கிறதென கூறுங்களேன். அப்பொழுதுதானே மற்றவற்றையும் மாற்றமுடியும்.
Thursday, February 15, 2007
அந்த நாலுபேருக்கு நன்றி!
Posted by ஞானவெட்டியான் at 8:19 PM
Labels: ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
என்னென்னவோ அலங்காரங்கள். ம்...ம்ம்..அது அதுக்கு கொடுப்பினை வேணுமாமே! ஜமாய்ங்க ... அந்த நாலு பேத்துல ஒரு மூணு பேரையாவது நம்ம வீட்டுப் பக்கம் வரச்சொல்லக் கூடாதா?
ஐயா
நான் பார்த்ததில் எனது மானிட்டரில் இப்படி தெரிகிறது.
வலது பக்க 3ம் காலம் பார்டர் லயன் மேலும் கீழும் மாத்திரம் தெரிகிறது,நடுவில் காணவில்லை.
உங்கள் பாடி பாக்ஸ் அகலம் கூட்டினால் நல்லது,ஏனென்றால் வலது பக்கத்தில் உபயோகப்படுத்தாத நிலம் இருக்கிறது.
மற்றபடி படிக்க சிரமம் இல்லாமல் இருப்பதால்.. OK
நமக்குத் தேவை என்றால் நாமல்லவோ அவர்களை நாடிப் போகவேண்டும்?
அவர்களை வரச்சொல்வது நியாயமல்ல.
தீபாவுக்கு link இருக்கிறது. மற்ற இருவரும் நமக்குத் தெரிந்தவர்களே!
அத்தோடு நாமும் முயலவேண்டுமே!
எல்லோருமே "கேட்டதும் கொடுப்பவர்களே."
முயலுங்கள்.
ரொம்ப சந்தோசம். இனி தமிழ்மணம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பீங்க.
வாழ்த்துக்கள்
அன்பு செல்லி,
மிக்க நன்றி.
கலக்கலா இருக்கு...!!! வகைப்படுத்தி தூள் கிளப்புங்க...!!!
அன்பு இரவி,
மிக்க நன்றி.
அன்பு குமார்,
இதுதான் நான் வேண்டுவது.
குறைகளைச் சுட்டினால்தான் திருத்திக்கொள்ள இயலும்.
மிக்க நன்றி.
ஜகத்தைப் பிடிக்கவேண்டியதுதான்.வேறு வழி ஏது?
இப்போது நன்றாக உள்ளது.
அன்பு குமார்,
வலது புறத்திலும் இடுகையின் கீழும் Ad-sense உள்ளது. அது தெரியமாட்டேன் என அடம் பிடிக்கிறது. சரி செய்ய சண்டையிட்டுக்கொண்டுள்ளேன்.
ஐயா!
நமக்கு இருப்பது நல்ல தாக இருந்தால் தான் அடுத்தவர்களைப் பார்த்து நன்மை தீமை கூறமுடியும்!
நமதோ ஓட்டைக் குடிசை;தங்கள் மாளிகை "14 ம் லூயி மன்னர் அரண்மனை" போல் உள்ளது எனக்கு!
ஜமாக்கிறீங்க! உங்களுக்குதவிய அன்புள்ளங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
உள்ளதையும் கெடுத்து விடுவேனேன ,என் வீட்டில் கைவைக்கப் பயமாக உள்ளது.
அப்பாடா!
வந்துட்டீங்களா!
பக்கம் அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
உங்கள் நண்பர்களுக்கு என் சார்பாகவும் நன்றிகள்.
உங்களது தமிழ்சேவை தொடரட்டும். கையில் நிறைய வேலைகள் இருக்கும் என நினைக்கிறேன்.
அன்புடன் மாசிலா.
அன்பு யோகன்,
நான் கேட்க வெட்கப்படுவதில்லை. கேட்டவுடன் உதவி கிடைக்கிறது. நம் தீபா கோவிந் கட்டாயம் உதவுவார். பிடித்துக்கொள்ளுங்கள். அவருடைய தொடுப்பு என் இடுகையில் உள்ளது.
அன்பு மாசிலா,
நன்றி. ஏகப்பட்ட வேலைகள் கிடக்கிறது.
அடைப்பலகை கொஞ்சம் மக்கர் பண்ணுகிறது. அதை சரிசெய்தபின்தான் தொடரவேண்டும்.
Post a Comment