Tuesday, December 26, 2006

கிறிஸ்துமஸ் பரிசு

எனக்குக் கிட்டியது போலக் கிறிஸ்துமஸ் பரிசு யாருக்கும் கிட்டியிருக்காது. காலையில் கணினியைத் திறந்ததும் ஒரே அதிர்ச்சி. 163 பரிசுகள் Antivermisஉடன் சேர்ந்து யாரோ ஒரு புண்ணியவான் அனுப்பியிருந்தார். அவருக்கு என்மேல்தான் எத்தனை ஆசை பாருங்களேன். ஒன்றா? இரண்டா? என்ன செய்வது?

தலையெழுத்தே! என Reformat செய்து கணினியை இயங்கச் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அந்த நல்லிதயத்துக்கு நன்றி பல.

பி.கு: ஐயா, தொழில்நுட்பம் தெரியாத என் போன்ற அறிவிலிகளுக்கு அனுப்பாதீர்களேன்.

6 Comments:

கரு.மூர்த்தி said...

இதென்னங்க தமாசா இருக்கு ? கண்ணியை பற்றி தெரிந்தவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் நோக்கம் எப்படி நிறைவேரும் ? நல்ல மென்பொருட்களால் பாதுகாத்துக்கொள்ளுங்கள் .

இராம்/Raam said...

ஐயா,

இத்தளத்திற்கு சென்று Free Antivirus'யை Install செய்து கொள்ளுங்கள். இது வீட்டு உபயோக கணினிக்கு முற்றிலும் இலவசம்.

இனி பின்வரும் நாட்களில் மீண்டும் இதுபோல் நடவாமால் இருக்க இச்சாப்ட்வேர் காத்தருளும்........ :)

ஞானவெட்டியான் said...

அன்பு மூர்த்தி,
இப்பொழுதுதான் Antispyware, Antimalware, AntiSpyware என்றால் என்ன எனக்கேட்டுத்தெரிந்துகொள்கிறேன்.
நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு இராம்,
Symantec Antivirusம் Spyware Doctorம் நிறுவிவிட்டேன்.
பார்ப்போம்.

ENNAR said...

தெரியாதவர்கள் அஞ்சல் செய்தால் அதைஸ்கேன் செய்து திறவுங்கள் நல்லவர் போல சில கள்ளரும் இருப்பாங்கள்

ஞானவெட்டியான் said...

ஆமாம் என்னார்,
தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி.