Thursday, December 14, 2006

கோவையில் ஒரு நாள்

"உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

"To realise the value of 1 year, ask a student who failed in his exam
To realise the value of 1 month, ask a mother who has given to a premature baby
To realise the value of 1 week, ask an editor of a weekly
To realise the value of 1 day, ask a daily wage labourer
To realise the value of 1 minute, ask a person who has missed the train
To realise the value of 1 second, ask a person who has survived an accident
To realise the value of 1 milli second, ask the person who has won a silver medal in Olympics.

மருத்துவர்களுக்கு எப்படி காலம் விலையில்லாததோ, அப்படியே நோயாளிகளுக்கும் என்பதை மறந்துவிடுகின்றனர். நேற்று முழுவதும் கோவை PSG மருத்துவ மனையில் காத்துக் கிடந்து அலுத்து விட்டது.

அத்தருணத்தேதான் உதவி கிட்டியது. வலையுலகால் கிட்டிய நண்பர் திரு.செல்லா, தானே முன்வந்து, தன் பணிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, கோவையிலேயே பெரிய மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர்தான் Dr.MOHAN RAM. அங்கும் சனத் திரள். இருப்பினும், செல்லா வந்திருக்கிறார் என்றவுடன், மருத்துவர் உள்ளே அழைத்து, எங்களின்மேல் தனி கவனம் செலுத்தினார். மருத்துவம் பார்த்து, இரவு 8மணியளவில் திண்டுக்கல் அனுப்பி வைத்தார்.

அங்கே அவருடன், எனக்காகக் காத்திருந்த, ஆன்மிகத் தேடலில் இரு முத்துக்கள். அவர்கள்தான், திரு.கதிரும், இரவியும். எங்களைப் பசியாற்றிவிட்டு, 30 மணித்தியாலங்கள் உரையாடியபொழுதுதான் கண்டேன், அவர்களின் வீரியத்தை. இளம் வயது. எப்படியாகிலும் மெய்யைக்(உடலுக்குள்) காணவேண்டும் என்னும் உறுதியான மனப்பக்குவம்.

இது வலையுலகால் ஏற்பட்ட நட்பாகிலும், காலத்தே செய்த உதவி. அது ஞாலத்தினும் பெரிதல்லவா?
அவர்களுக்கு என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் நன்றி ஒன்றே.

18 Comments:

வடுவூர் குமார் said...

வலை உலகம் பரவிப்பெருகுவதில் சந்தோஷம் தான்.

ஞானவெட்டியான் said...

அன்பின் குமார்,
"முகநக" நட்பாக இருக்கவில்லை.
"அகநக" நட்பாக இருப்பதுதான் விதப்பு(சிறப்பு).

மங்கை said...

ஐயா...

PSG யில தான் இதற்கு முன் நான் பணி புரிந்தேன்..:-)) அதனால் உங்களின் ஆதங்கம் புரிகிறது...

Dr.மோகன் ராம் மிக நல்ல மருத்துவர்...

ஞானவெட்டியான் said...

அன்பு மங்கை,
தங்களின் கரிசனத்துக்கு நன்றி.
தாங்கள் எங்கு உள்ளீர்கள்.
இயன்றால் தங்களின் மின்னஞ்சல் முகவரியை njaanam@gmail.comக்கு அனுப்பித் தரவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!!
வலையுலகமெனும் இப்புதுவுலகம்....பலவகையில்....உதவும் உலகமாக இருப்பது உண்மையே!! மிக நல்ல செய்தி.
உடல் நலம் எப்படி??
சுகம் பெறப் பிராத்திக்கிறேன்.
யோகன் பாரிஸ்

ஞானவெட்டியான் said...

அன்பு யோகன்,
நலம் விசாரித்தமைக்கு நன்றி.
பரவாயில்லை. தேவலை.

G.Ragavan said...

வலைப்பூ மக்களிடையே ஓரளவு நட்பும் உதவும் பண்பும் பரவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. காலத்தினால் அவர்கள் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது என்று நீங்கள் நன்றி கூறியதும் மிகப் பொருந்தும். வாழ்க வளர்க.

ஞானவெட்டியான் said...

எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி வாழ்வோம்! வளர்வோம்!
நன்றி; இராகவன்

வல்லிசிம்ஹன் said...

ஐயா உடல் நலம் எப்படி உள்ளது?

அகம் இனிக்கும் நட்பு வலையில் கிடைப்பதால் தான் மீண்டும் மீண்டும் படிக்க, எழுதத் தோன்றுகிறது.
நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு அம்மா,
நலம் பரவாயில்லை.
//அகம் இனிக்கும் நட்பு வலையில் கிடைப்பதால் தான் மீண்டும் மீண்டும் படிக்க, எழுதத் தோன்றுகிறது.//
ஆமாம். நன்றி.

Anonymous said...

தங்கள் உடல் நலம் சிறக்கவும், மற்றும் தங்களுக்கு உதவியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....

ஞானவெட்டியான் said...

அன்பு அனானி,
தங்களின் அன்புக்கு நன்றி.

Anonymous said...

Dear Mr Gnanavettiyan,

I am also from coimbatore. As far as my experience is concerned any big hospital especially the one attached with medical college are conducted only to train te students. They have big buildings, all facilities but untrained doctors. The expert doctors will never come to treat you. Hence I always goto small hospital where the senior doctor personally check and treats us.

ENNAR said...

கல்வி கற்றவருக்கு கண்டவிடமெல்லாம் சிறப்பு
வலைதளம் கற்றவருக்கும் அப்படியே அந்நண்பருக்கும் எனது நன்றி

ஞானவெட்டியான் said...

My Dear padippavan,
As you said, it is the condition prevailing in big hospitals. As my Doctor @ Dindigul refered a doctor @PSG, I went there.
But, with the influence of Mr.Chella, it was knife in butter @ Dr.Mohan Ram's clinic.
Thanks.

ஞானவெட்டியான் said...

ஆமாம், என்னார்,
மிக்க நன்றி.

Anonymous said...

one of my friend on seeing this post called me and asked "is it the same chella who wrote for Periyar and is it the same Gnana Vettiyaan who writes on Hinduism?" I said, " yes I am the same Chella and he is the same Gnanavettiyaan .. but we are all human beings .. Idealogy may vary but humanism should prevail!" lol! The name of the doctor is Dr.Mohankumar, Senior Pulmonologist and Chief of Pulmonology Dept, Ramakrishna Hospital. More info at his website

ஞானவெட்டியான் said...

My Dear Chella,

//but we are all human beings .. Idealogy may vary but humanism should prevail!"//

You are 200% correct. You preach what you practise.