கந்தர் கலிவெண்பா
**********************
ஊழ்வி னையைப்போக்கி யுடலறுபத் தெட்டுநிலம்
ஏழும்அத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக
ஆணவ மான படலங் கிழித்தறிவிற்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்
அடிஞானத் தாற்பொருளு மான்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்
ஊழ்வினை = முன்வினை
உடல் 68 = வெளியுடம்பில் உள்ள கருவிகள் 60, நுண்ணுடம்பிஉல் உள்ள கருவிகள் 8 ஆக 68.
நிலம் ஏழு = ஆறாதரமும், ஆகாயமும் ( சூக்கும ஆதரம் சேர்த்து ஏழாதாரம் என்போரும் உளர்)
ஆணவம் = அறியாமை விளவிக்கும் மலம்
படலம் = மறைக்கும் திரை, மறைப்பு நோய்
காணரிய = காணமுடியாத
மெய்ஞானக்கண் = பதி ஞான ஒளி
அடிஞானம் = இறையின் திருவடிகளை அறியும் அறிவால்
பொருள் = கடவுள்
ஆன்மா = உயிர்
கடியார் = காவல் பொருந்திய
முடியாது = அழியாது
தேக்கு = நிறைந்த
போக்கு = இறப்பு
உயிர்களின் வெளியுடம்பில் உள்ள கருவிகள் அறுபதையும், உள்ளுடம்பில் உள்ள கருவிகள் எட்டையும், மூலம் - மூலாதாரம், கொப்பூழ் -சுவாதிட்டானம், மேல்வயிறு - மணிபூரகம், நெஞ்சம் - அநாகதம், மிடறு - விசுத்தம்(விசுத்தி), புருவநடு - ஆக்ஞேயம், ஆகிய ஆறு ஆதாரங்களையும், அதற்குமேல் உள்ள சூனிய ஆகாயம் ஒன்றையும், மந்திர முதலிய ஆறு வழிகளையும் ஒழியும்படி செய்பவனே!
அறியாமைப் பாசமாகிய திரையை நீக்கி, உயிரின் அறிவால் காணமுடியாத கடவுளை அறியக்கூடிய ஞானக் கண்ணைக் கொடுத்து, இறைவனின் திருவடியையே (கண்களை) பற்றிக் கிடப்பதால் அறியக்கூடிய மெய்ப் பொருளையும், உயிர்த் தன்மையையும் அறிவித்து, தனது காவல் அமைந்த உலகு முழுவதும் காண்பித்து, எல்லை இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரின்பமான சுத்தமான அமிர்தமாய் உள்ள தமது தன்மையையுங் காட்டி, இறத்தல்.....
Thursday, December 07, 2006
கந்தர் கலிவெண்பா-11
Posted by ஞானவெட்டியான் at 11:58 AM
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
உங்களின் பல நல்ல பதிவுகள் ஒரு சிலரே பார்பது/படிப்பது போல் தெரிகிறது.
அவர்களை சொல்லி குற்றமில்லை.
தமிழை வளர்க்க இந்த மாதிரி பதிவுகளை படித்து நாலு பேருக்கு சொல்லவேண்டும்,இவை அத்தனையும் நமது முன்னோர்கள் விட்டுப்போன தமிழ்ச்சொத்து.இதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றாலே போதும்.
அதை விட்டு விட்டு தமிழில் பாடுவதால் மட்டும்..
சரி வேண்டாம்..
இதற்கு விளக்க உரையில்லாவிட்டால் எனக்கும் புரிந்திருக்காது.
தயவு செய்து தொடருங்கள்.
அன்பு குமார்,
நன்றி.
//நமது முன்னோர்கள் விட்டுப்போன தமிழ்ச்சொத்து.இதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றாலே போதும்.//
அதைத்தான் செய்துகொண்டுள்ளேன். படித்தாலும் படிக்காவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆவணப்படுத்திவிட்டேன். என் பணி முடிந்துவிட்டது.
"என் கடன் பணிசெய்து கிடப்பதே!"
ஏழாவது என்பது புதியதாக தெரிந்தது. நன்றி.
அன்பு அன்னனி,
ஆமாம்.
அநுபவம் தந்த உண்மை.
படித்துப்பாருங்கள்:
http://njaanamuththukkal.blogspot.com/2006/04/40.html
Post a Comment