Thursday, October 19, 2006

தமிழில் குடமுழுக்கு செய்ய

தமிழில் குடமுழுக்கு செய்ய
*******************************





தனித் தமிழில் உரையாட

தனித் தமிழில் உரையாடத்
*******************************
தவிர்க்கவேண்டிய சொற்கள்
*********************************

உத்தியோகம் *** அலுவல்
உற்சாகம் *** ஊக்கம்
உற்சவங்கள் *** திருவிழாக்கள், விழாக்கள்
உற்சவம் *** திருவிழா
ஒஸ்தி *** உசத்தி
காஷாயம் *** காவி
கார்த்திகை *** ஆரல், அறுமீன்
காவியம் *** தொடர்நிலைச் செய்யுள், வனப்பு
காரியஸ்தர் *** கருமத் தலைவர்
கலெக்டர் *** தண்டுவார்
கஷாயம் *** கருக்கு
கவுன் *** மெய்ப்பை
கர்வம் *** செருக்கு
கர்ப்பகிரகம் *** கருவரை, உண்ணாழிகை
கிராமம் *** சிற்றூர், பட்டி
கிரகம் *** கோள்
கிரீடம் *** முடி
கிருபை *** அருள், இரக்கம்
கிருகபிரப்வேசம் *** புதுமனை புகுதல், புதுவீடு புகல்
கிருஷிகம் *** உழவு
கிஸ்தி *** பகுதி
கீதவாத்யநிருத்தம் *** கொட்டாட்டுப் பாட்டு
கஜேந்திர மோக்ஷம் *** வேழவேந்த வீடு
கஷ்டம் *** வருத்தம்
கவி *** பா,செய்யுள்
கபிலை *** குரால்
கரகோஷம் *** கைதட்டல்
கவசம் *** அந்தளகம்
கனகசபை *** பொன்னம்பலம்
கஜானா *** கருவூலம்
கங்கண விஸர்ஜனம் *** சிலம்பு கழி நோன்பு
கங்கணம் *** வளையல், காப்பு
கச்சேரி *** மன்றம், அரங்கு
கருணை *** அருள்
கருடன் *** கழுலன்
கஸ்தூரி *** காசறை
நாஸம் *** அழிவு
நாதம் *** ஒலி
நாமம் *** பெயர்
நாட்டக *** நாடகம்
நாடி *** நாழி
நானா *** நாலா
நிர்வாக அதிகாரி *** செயல் அலுவலர், ஆள்வினைஞர்
நிர்வாக அதிகாரி *** கருமத்தலைவர்
நியாயம் *** நயன், முறை
நியதி *** யாப்புறவு
நியமி *** அமர்த்து
நிபந்தனை *** அக்குத்து
நிஜம் *** மெய்
நிச்சயம் *** தேற்றம்
நித்திரை *** தூக்கம்
நித்ய *** நித்தம்
நீதி *** நயன், முறை
நக்ஷத்திரம் *** வெள்ளி, நாண்மீன்
நஷ்டம் *** இழப்பு
நடராஜர் *** நடவரசு,ஆடலரசு,அம்பலவாணன்
நதி *** ஆறு
நவராத்திரி *** தொள்ளிரவு
நமஸ்காரம் *** வணக்கம்
ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி *** திருமாலியப் பதினொரமை
ஸ்ரீதேவசேனா *** திருத்தெய்வயானை
ஸ்ரீதனம் *** சிறுதனம்
ஸ்ரீமத் *** திருமான்
ஸ்ரீஜயந்தி *** பிறப்புத் திருநாள்
ஷஷ்டி *** அறமி
எஜமான் *** ஆண்டை
அர்ச்சனை *** தொழுகை,வழிபாடு
அர்ச்சகன் *** உவச்சன், வழிபாட்டாசான்
அர்த்தநாரீஸ்வரர் *** மாதொருபாகன்
அர்த்தம் *** பொருள்
அநேக *** பல
அக்ஷ *** அச்சு
அக்ஷயன், அச்சுதன் *** கேடிலி
அஷ்டோத்ரம் *** நூற்றெட்டு
அதிர்ஷ்டம் *** பொங்கு
அமாவாஸ்யை *** காருவா
அபாயம் *** ஏதம்
அபூர்வம் *** அரிது,அருமை
அபி§க்ஷகம் *** திருமுழுக்கு
அபிவிர்த்தி *** மிகுவளர்ச்சி
அமவாசை *** காருவா
அபராதம் *** குற்றம்,தண்டம்
அவயவம், அங்கம் *** உறுப்பு
அவசியம் *** வேண்டியது, தேவை
அவசரம் *** விரைவு,பரபரப்பு
அனாவசியம் *** வேண்டாதது
அக்கினி நட்சத்திரம் *** கத்தரி, எரிநாள்
அங்கவஸ்திரம் *** மேலாடை
அங்ஙண *** அங்கணம்
அச்சாரம் *** உளவாடம்
அத்தியாவசியம் *** இன்றியமையாமை
அந்தரங்கம் *** மறைமுகம்
அந்தம் *** முடிவு
அப்பியாசம் *** பயிற்ச்சி
அப்பியங்கன ஸ்நானம் *** தலைமுழுக்கு
அசங்கியம் *** அருவருப்பு
அப்பு *** நீர்
அஸ்திவாரம், அஸ்திபாரம் *** அடிப்படை
அனுஷ்டி *** கைக்கொள்
அனுபவி *** நுகர்
அற்புதம் *** புதுமை, இறும்பூது
அன்னாபிஷேகம் *** சோற்றுத் திருமுழுக்கு
அன்னியம் *** அயல்
அன்னவஸ்திரம் *** ஊணுடை
அன்னம் *** உண்டி, எகினம், ஓதிமம்
ஞாபகம் *** நினைவு, ஞாவகம், நினைப்பு
ஞானம் *** அறிவு
கோர்ட் *** அறமன்றம்
கோரோசனை *** ஆமணத்தி
கோஷ்டி *** குழாம்
கோட்டு *** குப்பாயம்
கேதாரகெளரி விரதம் *** மலைமகள் நோன்பு
கேசு *** வழக்கு
ஷோக்கு *** தளுக்கு
§க்ஷமம் *** ஏமம், நல்வாழ்வு, காப்பு
டேரா *** கூடாரம்
தோஷம் *** சீர், குற்றம்
தேகம் *** உடல், யாக்கை
தேவஸ்தானம் *** தேவகம், திருக்கோவில்
தேயு *** தீ
லோக *** உலகு,உலகம்
போகிப் பண்டிகை *** வேந்தன் திருநாள்
போஷி *** ஊட்டு
மோக்ஷம் *** வீடு, பேரின்பம்
போதி *** கற்பி, நுவல்
லோபி *** இவறி, கஞ்சன், பிசிரி
போலீஸ் *** ஊர்க்காவல், பாடிகாவல்
லோபம் *** இவறன்மை
ரோமம் *** மயிர்
போஜனம் *** சாப்பாடு
ரோடு *** சாலை
யோக்கியதை *** தகுதி
யோக்கியன் *** தக்கோன்
யோசி *** எண்ணு
மோசம் *** கேடு
மேகம் *** முகில்
பேஷ்கார், மணியம் *** செயல் பணியார்
வேஷ்டி *** வேட்டி
வேதாரண்யம் *** மறைக்காடு
வேதம் *** மறை
பேனா *** தூவல்
வேசி *** விலைமகள்
பேப்பர் *** தாள்
ஜோதி *** சுடர்
ஜோதிடன், ஜோஸ்யன் *** கணியன்
சோதி *** நோடு
சேவை *** ஊழியம்
சேவை *** தொண்டு, ஊழியம்
சேஷ்டை *** குறும்பு
சேவகன் *** இளையன்
சேனாவீரன் *** பொருநன்
சேனாபதி *** படைத்தலைவன்
ஆணை *** கட்டளை, சூள்
ஆகாயம் *** வெளி
ஆகாரம் *** உணவு
ஆ§க்ஷபி *** தடு
ஆ§க்ஷபசமாதானம் *** தடைவிடை
ஆமோதி *** வழிமொழி
ஆரோக்கியம் *** நலம், நோயின்மை
ஆலோசி *** சூழ்
ஆதி *** முதல்
ஆதியந்தம் *** முதலீறு
ஆதரி *** தாங்கு, அரவணை
ஆலயநிர்வாகிகள் *** கோவில் கருமத் தலைவர்கள்
ஆலயம் *** கோவில்
ஆரம்பம் *** துவக்கம், தொடக்கம்
ஆபத்து *** அல்லல்
ஆட்சேபணை *** தடை
ஆனந்தம் *** உவகை, களிப்பு
ஆக்கினை *** கட்டளை
ஆச்சாரம் *** ஒழுக்கம்
ஆச்சர்யம் *** வியப்பு
ஆக்ருதி *** பன்முகப் பேராற்றல்
ஆசீர்வதி, ஆசீர்வாதம் *** வாழ்த்து
ஆயுதம் *** கருவி
ஆத்மா *** ஆன்மா
ஆயுள் *** வாழ்நாள்
ஆஸ்தி *** செல்வம்
ஆஸ்பத்திரி *** மருத்துவசாலை
ஈவினிங் பஜார் *** அல்லங்காடி
ஈஸ்வரன் *** இறைவன்
ஹாஸ்யரசம் *** நகைச்சுவை
ஹிதம் *** நன்மை, நட்பு
க்ஷ£ணம் *** மங்கல்
க்ஷணம் *** நொடி
க்ஷவரம் *** மழிப்பு
ஸாயம் *** சாயுங்காலம்
ஸ¤வர்க்கம் *** துறக்கம், உவணை
ஸ¤ப்ரமண்யன் *** முருகன்
தாஸி *** தேவரடியாள்
தாஸன் *** அடியான்
தானியம் *** கூலம், தவசம்
தர்மார்த்தா காமமோக்ஷம் *** அறம் பொருள் இன்பம் வீடு
திரோபல அநுக்ரகம் *** மறைப்பருளல்
தினம் *** நாள்
திண்டிவனம் *** புளியங்காடு
திருப்தி *** பொந்திகை
தீர்த்தம் *** தூநீர்
தீபம் *** விளக்கு
தல *** தளம்
தயார் *** அணியம்
தயவு *** இரக்கம்
தரிசனம் *** காட்சி, காண்பு
தந்தம் *** மருப்பு
தம்பதிகள் *** மணமக்கள்
தருமம் *** அறம்
தனுர் *** சிலை
லஜ்ஜை *** வெட்கம்
பாஷை *** மொழி
ராகம் *** பண்
யாகம் *** வேள்வி
ராகத்துவேஷம் *** விருப்பு வெறுப்பு
பாஷாணஸ்தாபனம் *** கல்நடுதல்
பார்வதி *** மலைமகள்
மார்க்கம் *** வழி
வார்த்தை *** சொல்
மாஸ *** மாதம்
ராதாரோஹணம் *** தேர் ஏற்றம்
பாதாதிகேசபரியந்தம் *** அடிமுதல் முடிவரை
மாதிரி *** போலிகை
பாதரசம் *** இதள்
பாரிவேட்டை *** பரிமேட்டை
மாமிசம் *** இறைச்சி
மாயவரம்,மாயூரம் *** மயிலாடுதுறை
பாவம் *** கரிசு
லாபம் *** ஊதியம்
பாவம் *** தீவினை
பானம் *** குடிப்பு, குடிநீர்
ராஜலங்காரம் *** அரசக்கோலம், அரசப்புனைவு
பாக்கி *** நிலுவை
பாங்கு, வங்கி *** காசுக்கடை, வட்டிக்கடை
வாயு *** வளி
ராசி *** ஒப்புறவு, ஓரை
வாய்தா *** கெடு
யாத்திரீகர் *** திருவழிப் போக்கர்
வாத்தியம் *** இயம்
பாத்திரம் *** ஏனம், தகுதி
மாலுமி *** மீகாமன், நீகாமன்
பாஸ்போர்ட் *** கிள்ளாக்கு
வாஸ்தவம் *** வாய்மை
பூஜை *** வழிபாடு, பூசை
பகிரங்கம் *** வெளிப்படை
பகிரண்ட *** பேரண்ட
ரகஸ்யம் *** மறைபொருள், மருமம்
பர்வாயில்லை *** தா(விலை), தேவலை
பூர்வீகம் *** பழைமை
வர்க்கம் *** இனம்
மூர்க்கன் *** முரடன்
வர்த்தகம் *** வணிகம்
பூர்த்தி *** நிறைவு
விகடம் *** பகடி
விஷம் *** நஞ்சு
விநோதம் *** புதுமை
விஷேசம் *** சிறப்பு
விரோதம் *** பகை
பிரேதம் *** பிணம்
பிதிரார்ஜிதம் *** முதுசொம்
விவாகம், பரிணயம் *** திருமணம்
பிராயோபவேசம் *** வடக்கிறுத்தல்
பிராணி *** உயிரி, உயிர்மெய்
பிராணன் *** உயிர்
வியாதி *** நோய்
வியாபாரம் *** பண்டமாற்று
பிராயச்சித்தம் *** கழுவாய்
வியாஜம் *** தலைக்கீடு
பிரஜை *** குடிமகன்
பிரஜைகள் *** குடிகள்
பிரகாரம் *** திருச்சுற்று, சுற்றுமதில்
பிரகாசம் *** பேரொளி
பிரககாரம் *** படி
பிரகதீஸ்வரர் *** பெருவுடையார்
பிரியம் *** விருப்பம்
பிரதோஷம் *** மசண்டை
பிரயோகம் *** எடுத்தாட்சி, வழங்கல்
பிரயோஜனம் *** பயன்
பிரதிக்ஞை *** உறுதி, மேற்கோள்
பிரதக்ஷ¢ணம் *** வலஞ்செய்தல்
விரதம் *** நோன்பு
பிரயாசை, பிரயத்தனம் *** முயற்சி
பிரயாணி *** வழிப்போக்கன்
பிரயாணம் *** வழிப்போக்கு
பிரயாசம் *** முயற்ச்சி
வியவகாரம் *** வழக்கு
விபக்தி *** வேற்றுமை
பிரசுரம் *** வெளியீடு
பிரசாதம் *** அருட்கொடை, திருசோறு
விவசாயம் *** உழவு, பயிர்த்தொழில்
பிரத்தியக்ஷம் *** கண்கூடு
பிரசவம் *** பிள்ளைப்பேறு
பிரசங்கம் *** சொற்பொழிவு
பியூன் *** ஏவலன்
மிதுனம் *** ஆடவை
விஜயதசமி *** வெற்றிப் பதமி
பிச்சை *** இரப்பு,ஐயம்
பிச்சைக்காரன் *** இரப்போன்
விசுவாசம் *** நம்பிக்கை
விசாலாட்சி *** தடங்கண்ணி
விசாரணை *** கேள்வி
விசாரி *** வினவு, உசாவு
பிசாசு *** பேய்
மிருகம் *** விலங்கு
விருக்ஷம் *** மரம்
வித்தியாசம் *** வேறுபாடு
பிருதிவி *** நிலம்
விசனம் *** வாட்டம்
விருச்சிகம் *** நளி
விருத்தாசலம் *** பழமலை, முதுகுன்றம்
விஸ்தீரணம் *** பரப்பு
வீரன் *** வயவன், விடலை
மீனாட்சிசுந்தரம் *** கயற்கண்ணியழகன்
பீஜம் *** விதை
ரதோத்சவம் *** தேரோட்டம்
மஹாபிஷேகம் *** பெருமுழுக்கு
மஹாசிவராத்திரி *** சிவனார் பேரிரவு
பக்ஷ *** பக்கம்
லக்ஷார்ச்சனை *** இலக்க வழிபாடு
பக்ஷி *** பறவை, புள்
பக்ஷிதீர்த்தம் *** திருக்கழுக் குன்றம்
ரஸம் *** சாறு, மிளகுசாறு
வஸந்தோற்சவத்வஜ ஆரோஹணம் *** இளவேனில்விழாக்கொடியேற்றம்
ரணம் *** புண்
பூத(bh) *** பூதம்
யதார்த்தம் *** உண்மை
பதார்த்தம் *** பண்டம், கறி
பதிவிரதை *** குலமகள்
ரதம் *** தேர்
பல(b) *** வலம்
மயானம் *** சுடுகாடு, சுடலை
பவஒளஷதீஸ்வரர் *** பிறவிமருந்திறைவர்
பரகாயப்பிரவேசம் *** கூடுவிட்டுக் கூடு பாய்தல்
பூமி *** ஞாலம், நிலம்
பரிகாசம் *** நகையாடல்
மரியாதை *** மதிப்பு
பரியந்தம் *** வரை
வமிசம் *** மரபு
தூமகேது *** வால்வெள்ளி
பரணிதீபம் *** முக்கூட்டு விளக்கு
பூரணசந்திரன் *** முழுமதி, மதியம்
வலய *** வளையம்
வயசு *** அகவை
தூரம் *** சேய்மை
பரம்பரை *** தலைமுறை
பரஸ்பரம் *** இருதலை
யமன் *** கூற்றுவன்,மறலி
ரஜா *** விடுமுறை
யஜமான் *** தலைவன், ஆண்டான்
பசு *** ஆ, ஆவு, ஆன்
ரங்க *** அரங்கம்
மங்கல *** மங்கலம்
பஞ்சேந்திரியம் *** ஐம்புலன்
பக்தி *** தேவடிமை
பக்தவத்ஸலம் *** அடியார்க்கருளி
பக்தன் *** அடியான்
லக்னம் *** ஓரை
பஞ்சாமிர்தம் *** ஐயமுது
பஞ்சாங்கம் *** ஐந்திறம்
பஞ்சநதீஸ்வரர் *** ஐயாற்றார்
லஞ்சம் *** கையூட்டு
மண்டப *** மண்டபம்
மண்டல *** மண்டலம்
மசாலை *** உசில்
வருஷாபிஷேகம் *** ஆட்டைத் திருமுழுக்கு
வருஷம் *** ஆண்டு
வருடம் *** ஆண்டு
மத்தி *** நடு
மத்தியானம் *** நண்பகல், உச்சிவேளை
பத்திரிக்கை *** தாளிகை
பத்திரம் *** தாள், இதழ்
பத்தினி *** கற்புடையாள்
ரத்தினம் *** மணி
பசலி *** பயிராண்டு
பந்து *** இனம்
லக்ஷ்மி *** திருமகள்
வசனம் *** உரைநடை
வசந்தோற்சவம் *** இளவேனில் விழாக்கட்டு
வன்மீகநாதர் *** பற்றிடங்கொண்டார்
வசூல் *** தண்டல்
துர்லபம் *** அரிது
துரோகம் *** இரண்டகம்
துஷ்டன் *** தீயவன்
துரியம், துரியாதீதம் *** அயர்வொடுக்கம்
துக்கம் *** துயரம்
டிக்கட்டு *** சீட்டு
ஜாதகம் *** பிறப்பியம்
ஜாதி *** குலம்
ஜாதிஜனம் *** குலங்குடும்பம்
ஜாக்கிரதை *** விழிப்பு
ஜாஸ்தி *** நிறைய
ஜீவியம் *** வாழ்க்கை
ஜீரணோத்தாரணம் *** பழுதுபார்ப்பு
ஜீரணம் *** செரிமானம்
ஜீவனம் *** பிழைப்பு
ஜீவன் *** உயிர்
ஜயாபஜயம் *** வெற்றி தோல்வி
ஜலதோஷம் *** நீர்க்கோர்வை, தடுமம்
ஜயம் *** வெற்றி
ஜலம், தீர்த்தம் *** தண்ணீர்
ஜனனமரணம் *** பிறப்பிறப்பு
ஜனம் *** நரல், நருள்
ஜனசங்கியை *** குடிமதிப்பு
ஜம்புத்தீவு *** நாவலம்பொழில்
ஜன்மம் *** பிறவி
ஜன்னி *** இசிவு
சுகம் *** உடல்நலம், இன்பம்
சுலோகம் *** சொலவம்
குஷ்டம் *** குட்டம்
சுதி *** கேள்வி
சுதந்தரம் *** உரிமை
சுவாஸம் *** மூச்சு, உயிர்ப்பு
சுவாமி *** இறை, ஆண்டான், கடவுள்
சுவாமிகள் *** அடிகள்
சுபாவம் *** இயல்பு
குமாஸ்தா *** கணக்கன்
சுரணை *** உணர்ச்சி
குதூகலம் *** களிப்பு
சுபர்ண *** சுவணம், உவணம்
க்ரியை *** வினை
சுபீட்சம் *** செழிப்பு
சுயராஜியம் *** தன்னரசு, தன்னாட்சி
சுயமாய் *** தானாய்
சுபம் *** மங்கலம்
சுந்தரன் *** சொக்கன்
சுத்தம் *** துப்புரவு
கும்பாபிஷேகம் *** குடநீராட்டு, கும்பநீராட்டு
சுழுத்தி *** துயில்
சாகரம் *** கடல்
சாக்ஷ¢ *** கண்டோன், கரி
சாதாரணம் *** பொதுவகை
சாதம் *** சோறு
சாமான் *** பண்டம்
சாயரட்சை *** மாலைப் பூசை
சாக்கிரம் *** நனவு
சாந்தி *** சமந்தி
சாஸ்திரம் *** கலை, நூல்
சாஸ்வதம் *** நிலைப்பு
முக(kh) *** முகம்
யுகாதி *** தெலுங்கு ஆண்டுப் பிறப்பு
சகலர் *** எல்லோரும்
சகலம் *** எல்லாம்
சகலன்,சட்டகன் *** ஓர்ப்புடையான், ஓரகத்தான்
சகஜம் *** வழக்கம்
சகசிரமலர் *** பூவகம்(ஆயிரம் இதழ்த் தாமரை)
சகஸ்ரநாமம் *** ஆயிரம் பெயர்
முகஸ்துதி *** முகமன்
சர்வமானியம் *** முற்றூட்டு
சிகிச்சை *** பண்டுவம்
சிநேகம், சினேகிதம் *** நட்பு
சிவ *** சிவன்
சிரஞ்சீவி *** நீடுவாழி
சிசு *** குழந்தை
சிங்காசனம் *** அரியணை
சிசுரு¨க்ஷ *** பணிவிடை
சிருஷ்டிதிதிசங்காரம் *** படைப்பு காப்பு அழிப்பு
சித்திரை *** மேழம்
சீத *** சீலம்
சீதகும்பம் *** குளிர்கும்பம், தண்குடம்
சீக்கிரம் *** சுருக்கு, சுருக்காய்,சடுதியில்
சகோதரன் *** உடன் பிறந்தான்
த்ரோண *** தோணி
புஷ்பவதியாதல் *** முதுக்குறைதல், பூப்படைதல்
புஷ்பம் *** பூ, மலர்
முஷ்டி *** முட்டி
புஷ்டி *** தடிப்பு, தசைப்பிடிப்பு
புதன் *** அறிவன்
சமாச்சாரம் *** செய்தி
சவால் *** அறைகூவல்
சரீரம் *** உடம்பு
சமீபம் *** அண்மை
சரணம் *** அடைக்கலம்
ப்ரதிமா *** வடிவம்
சபதம் *** வஞ்சினம், சினமொழி
ப்ரவாள *** பவளம்
த்வஜ அவரோஹணம் *** கொடிஇறக்கம்
சரஸ்வதி *** கலலைமகள், நாமகள்
சதுர்த்தசி *** நலமி
சனிக்கிழமை *** காரி
சனிப்பிரதோஷம் *** காரிமசண்டை
சங்கீதம் *** இசை, இன்னிசை
சங்கமேஸ்வரர் *** கூடுதுறையார்
சங்கடம் *** இடர்ப்பாடு
சங்கராந்தி *** பொங்கல்
சங்கரி *** அழி
சக்கரவர்த்தி *** மாவேந்தன்
சங்கம் *** கழகம்
சக்தி *** ஆற்றல்
யுக்தி *** உத்தி
முக்தி *** விடுதலை
சகுனம் *** குறி, புள்
புண்ணியம் *** நல்வினை, அறப்பயன்
சமுகம் *** மன்பதை
சந்நிதி *** திருமுன், முன்னிலை
சந்நியாசி *** துறவி
புருஷன் *** ஆடவன்
ருசி *** சுவை
சந்தோஷம் *** மகிழ்ச்சி
சந்தேகம் *** ஐயம், ஐயுறவு
சந்தி *** தலைக்கூடு
புத்தி *** மதி
புத்திமதி *** மதியுரை
சத்தியம் *** உண்மை
சந்திரன் *** மதி, நிலா
சந்ததி *** எச்சம்
சப்தபரிசகந்தரூபரஸம் *** சுவையொளியூறோசை நாற்றம்
சத்தம் *** ஓசை
சம்பாஷணை *** உரையாட்டு
சம்பாஷி *** உரையாடு
சம்பிரதம் *** மறவுரை, நெடுமொழி
சம்பூரணம் *** முழுநிறைவு
சம்பந்தம் *** தொடர்பு
ம்ருது *** மெது
சத்துரு, விரோதி *** பகைவன்
சமுச்சயம் *** அயிர்ப்பு
சமுசாரி *** குடும்பி
சம்புரோக்ஷணம் *** தூய்நிலைப்படுத்தம்
ந்ருத்த *** நடம், நட்டம்
சமுத்திரம் *** வாரி
முகூர்த்தம் *** முழுத்தம்
சன்மார்கம் *** நன்னெறி, நல்வழி
ஸ்கந்தன் *** கந்தன்
ஸ்நானம் *** குளிப்பு
ஸ்தோத்திரி *** பராவு
ஸ்தாபனம் *** நிறுவனம்
ஸ்திரீ *** பெண்டு
ஸ்மரணை *** உணர்ச்சி
ஸ்த்ரீ புருஷர் *** ஆண்பெண்
இஷ்டஜனபந்துமித்ரர் *** உற்றார் உறவினர்
இஷ்டம் *** விருப்பம்
இந்திரன் *** வேந்தன்
இருதயம் *** நெஞ்சம், நெஞ்சாங்குலை
வ்ருத்த *** வட்டம்
சூல *** சூலம்
சூரியகாந்தி *** பொழுதுவணங்கி
சூரியன் *** கதிரவன்