Wednesday, December 26, 2007

நவராத்திரி விழா(விரதம்) - கரு(த்து)

நவராத்திரி விழா(விரதம்) - கரு(த்து)
***********************************************
பக்தி நிலை ஒழுகுவார்க்கு, அவர்தம் பாங்கிலே விளக்கினோம். அந்நிலை கடந்து அடுத்த நிலையிலுள்ளார்க்கு இப்பொழுதே இயம்புவாம்.
"எங்கெங்கு காணிணும் சக்தியடா", என்றான் பாரதி.
நவராத்திரி வழா(விரதம்) இருப்பதன் தத்துவம் என்ன?
முதலில் (விந்து, அண்ட)சக்தியால் தோன்றிய உயிர், தன்னைப் உண்டாக்கிய(படைத்த) சக்தியை வணங்குதலாம். அப்பொழுது விரதம் இருந்து விந்து சக்தியடக்கி, சக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

திருமந்திரம்:
"பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே."

குறப்பெண்ணாம், குவிமுலை கோமளவல்லியாம் ஆதி பராசக்தி, சிறப்பொடு பூசை செய்தவர்களுக்கு, பிறப்பையறுத்து, பெருந் தவத்தைக் கொடுத்து, இறைவனை மறக்கும் மறப்பையும் அறுத்துத் தன்னையும் தலைவனையும் வழிபட வைப்பாள்.

பக்தி நிலையிலுள்ளார்க்கு, அம்மையின் குணநலன்களை உருவகித்து உருவமாக்கி அதை அலங்கரித்து, பூசை செய்யும் வழிகளையும் சொன்னோம். அம்மையை எந்நிலையில் வேண்டுமானாலும் அலங்கரித்து எந்த நாளிலும் பூசை செய்யலாம். மூலசக்தி ஒன்றே; உருவில் வேறுபட்டாலும் கருவில் ஒன்றே! எந்தப் படையலை வேண்டுமாகிலும் இடலாம்; ஏனெனில் "ஆவி உனக்கு - அமுது எனக்கு" என்றுதான் படையல் இடுகிறோம். எந்த இராகத்தில் வேண்டுமாகிலும் இறைசக்தியைத் துதிக்கலாம். ஏனெனில் இசைக் கலை இறைவன் தந்தது.

அந்நிலை கடந்தோர் சக்திகெட்டு சாயம் வெளுத்துப் போய்விடாமல் இருக்கத் தங்கள் நிலையில் நின்று சக்தியடக்கித் தவம் செய்து பலனடையுங்கள்.

சக்திகெட்ட மனிதனுக்குத் தரணி வாழ்வு ஏதடா?

வராகி - படங்கள்(விட்டுப்போனவை)

வராகி - படங்கள்(விட்டுப்போனவை)


வச்சிர வராகிகள்:

அருள்மிகு வராகி - சுவாமிமலை

நவராத்திரி - ஒன்பதாம் நாள்

நவராத்திரி - ஒன்பதாம் நாள்
*************************************

பராசக்தியை ஒன்பதாம் நாள் பிரமி(பெருமி - ப்ரம்மி)யாகக் கருதி வழிபாடு செய்யவேண்டும். பிரமி பிரமனின்(படைப்புக் கடவுள்) சக்தி. சரசுவதியும் (சரசு=குளம்; வதி=வசிப்பவள்) இவளே. அன்னமிழுக்கும் விமானத்தில் பயணிக்கும் இவள் வெள்ளைத் தாமரைப்பூவில் ஞானத்தின் உருவமாக இருப்பவள். இவளுக்குப் பிடித்த ஆசனம் தர்ப்பைப் புல்.


பவுத்த மதத்தில் சரசுவதிக்கு சிம்ம வாகனம். வேதாரண்யத்தில் "யாழைப் பழித்த மொழியாள்" என்னும் பெயருடன் அம்மை வீற்றுள்ளாள்.

"கல்விக்கதிபதியான சரசுவதியை முறையுடன் மனமாற வேண்டுபவருக்கு, தேன்,பால்,திராட்சை போன்ற இனிய சொற்கள் சித்தியாகும்; காவியம் போற்றும் நாயகனாகத் திகழ்வார்;" என சவுந்தரிய லகரி 15ம் செய்யுள் கூறும்.

தஞ்சை மாவட்டம் கூத்தனூரில் இவ்வம்மைக்குத் தனிக் கோயில் உண்டு.

படையல்: கொண்டைக் கடலை சுண்டல்
துதிக்கவேண்டிய இராகம்: வசந்தா


நவராத்திரி தொடர் முற்றிற்று.

நவராத்திரி - எட்டாம் நாள்

நவராத்திரி - எட்டாம் நாள்
***********************************

எட்டாம் நாளில் அம்மையை நரசிம்மியாக அலங்காரம் செய்து பூசிக்கவேண்டும். அன்னை மகாலட்சுமிதான் நரசிம்மி. இரணியனை வதைத்த நரசிம்மத்தின் சக்திதான் நரசிம்மி. அவருக்குண்டான சக்திகளும், ஆயுதங்களும் அம்மைக்கு உண்டு. எதிரிகளை வெல்ல இவ்வம்மையை வணங்குவர். தமரையும், சிங்கமும் இருக்கைகளாம்.

(படங்கள்: வலையிலிருந்து எடுக்கப்பட்டவை)
படையல்: சர்க்கரைப் பொங்கல்
துதிக்கவேண்டிய இராகம்: புன்னாக வராளி

நவராத்திரி - ஏழாம் நாள்

நவராத்திரி - ஏழாம் நாள்
*********************************

ஏழாம் நாளில் அம்மையை சாம்பவியாக அலங்கரித்து வழிபடவேண்டுமென சிலரும், மகாலக்குமியாக வழிபடவேண்டுமென்று பெரும்பான்மையினரும் கூறுவர். தாமரை மலரைக் கரத்தில் ஏந்தியவள்; செல்வத்தை அருள்பவள், மகாலக்குமி. தாமரை இருக்கையில் வீற்றிருந்து, இறையருள் பெற்றோரை ஏற்றுவித்து, அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டுபவளும் அவளே.
செபமாலை, கோடரி, கதை, வில், அம்பு, தாமரை, வச்சிராயுதம், கமண்டலம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், சங்கு, சக்கரம், மணி,மதுக்கலயம், கத்தி, கேடயம், பாசம், சூலம் ஆகியவைகளைத் தன் கரங்களில் ஏந்தியிருப்பவள். பவளம் போன்ற நிறமுடையாள்; திருமாலின் சக்தி.


படையல்: பாசிப்பயறு சுண்டல்
துதிக்கவேண்டிய இராகம்: பிலகரி

நவராத்திரி - ஆறாம் நாள்

நவராத்திரி - ஆறாம் நாள்
**********************************

ஆறாம் நாளில் அம்மையை நாக இருக்கையில் வீற்றுள்ள சண்டிகையாகப் பூசிக்கவேண்டும். தூம்ரலோசனன் வதத்துக்குறிய தோற்றம் என்பார்கள்.

இன்னும் சிலர் இன்று கெளமாரியையைத் துதிக்கவேண்டுமென்பார்கள். ஆண்மை சக்தியும் ஞானசக்தியும் கலந்த உருவமாகிய இவள் மயில் இருக்கையும் சேவல் கொடியும் உடையவள்; வீரத்துக்கு ஆதாரமானவள். ஓங்கார சக்தியின் ஒட்டுமொத்த உருவமான இவளைப் பூசிக்க எல்லாப் பாவங்களும் தொலையும்.

படையல்: தேங்காய் சாதம்
துதிக்கவேண்டிய இராகம்: நீலாம்பரி

நவராத்திரி - ஐந்தாம் நாள்

நவராத்திரி - ஐந்தாம் நாள்
**********************************

ஐந்தாம் நாள் பராசக்தியை மகேசுவரியாக அலங்கரித்து வழிபடவேண்டும். ரிடப வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் தருமத்தின் திருவுருவமாம் இச் சிவ சக்தி அளவற்ற பெரும் உடலைக் கொண்டதால் "மகதீ" என அழைக்கப்படுகிறாள். அனைத்து மங்களங்களையும் தருபவள். உழைப்பவருக்கு அருள்பவள்.

இவளை கெளரியாகவும், சிம்ம வாகினியாகவும் பூசிப்போரும் உண்டு.
சும்ப நிசும்ப அவுணர்களை அழித்து அகிலஉலகையும் உய்வித்தவள்.

படையல்: புளியோதரை
துதிக்கவேண்டிய இராகம்: பந்துவராளி

நவராத்திரி - நான்காம் நாள்

நவராத்திரி - நான்காம் நாள்
***********************************

இன்று பராசக்தியை வைணவியாக அலங்கரித்து வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி நிற்பவள்; கருவாகனத்தில் இருப்பவள். அம்பிகைதான் திருமால்; திருமால்தான் அம்பிகை. குருவாயூரில் நவராத்திரி விழாவில் அப்பனை, அம்மையாக அலங்கரித்து வழிபாடு இன்றளவும் செய்து வருகிறார்கள். அதற்குண்டான பட்டுச் சேலைகள் மைசூர் அரசன் தந்தாம்.


படையல்: எலுமிச்சை(எழும்+இச்சை) சாதம்
துதிக்கவேண்டிய இராகம்: பைரவி

நவராத்திரி - மூன்றாம் நாள்

நவராத்திரி - மூன்றாம் நாள்
************************************
மகிடனை அழித்த அம்மையை சூலமும் கையுமாக எருமைத் தலையின்மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடுபவர் சிலர். இத்துர்க்கையைக் கல்யாணி என்பர்.

இன்னும் சிலர் பராசக்தியை இந்திராணியாகக் கருதி வழிபடவேண்டும் என்பர். ஆயிரம் கண்ணுடைய இவள் இந்திரனின் முடி, சக்தி ஆகியவைகளைத் தரித்து கையில் வச்சிராயுதம் ஏந்தி இருப்பவள். வெள்ளை யானையாம் ஐராவதத்தின் மேலமர்ந்து விருத்திராசுரன் என்னும் அவுணனை(அரக்கன்) அழித்தவள். பதவி உயர்வுக்காக இவளை வேண்டுவோர் பலர்.

படையல்: வெண்பொங்கல்
துதிக்கவேண்டிய இராகம்: காம்போதி

நவராத்திரி - மூன்றாம் நாள்

நவராத்திரி - மூன்றாம் நாள்
************************************
மகிடனை அழித்த அம்மையை சூலமும் கையுமாக எருமைத் தலையின்மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடுபவர் சிலர். இத்துர்க்கையைக் கல்யாணி என்பர்.

இன்னும் சிலர் பராசக்தியை இந்திராணியாகக் கருதி வழிபடவேண்டும் என்பர். ஆயிரம் கண்ணுடைய இவள் இந்திரனின் முடி, சக்தி ஆகியவைகளைத் தரித்து கையில் வச்சிராயுதம் ஏந்தி இருப்பவள். வெள்ளை யானையாம் ஐராவதத்தின் மேலமர்ந்து விருத்திராசுரன் என்னும் அவுணனை(அரக்கன்) அழித்தவள். பதவி உயர்வுக்காக இவளை வேண்டுவோர் பலர்.

படையல்: வெண்பொங்கல்
துதிக்கவேண்டிய இராகம்: காம்போதி

நவராத்திரி - இரண்டாம் நாள்

நவராத்திரி - இரண்டாம் நாள்
*************************************

மயிடத்தின்(எருமை) தலையுடனும், மனித உடலுடனும் இருந்த மகிடன்(மகிஷாசுரன்) எனும் அரக்கனை வதைத்த மகாலக்குமியின் அவதாரமான வராகியை(தேவியின் சேனைத் தலைவி) வழிபடல்வேண்டும். தேவி அவதாரத்தில் அவளின் தோற்றம்: சிவப்பு நிறத்தில் செந்தாமரையில் வீற்றிருக்கும் அம்மைக்கு 18 கைகள். அவைகளில், செபமாலை, கோடரி, கதை, அம்பு,வச்சிராயுதம், தாமரை, வில், கமண்டலம்,தண்டாயுதம், சக்தி ஆயுதம், கத்தி, கேடயம், சங்கு, மணி, மதுக்கலயம், சீலம், பாசம், சக்கரம் தாங்கியவள்.

இவளை,"இராச இராசேசுவரி"யாகத் துர்க்கயின் வடிவத்தில் பூசித்தல் நலம்; கரும்புவில், மலரம்பு, பாசாங்குசம் தாங்கிய வடிவத்தில் அலங்கரித்து வணங்குதல் நலமென்பார் சிலர்.

படையல்:வெண்பொங்கல், இனிப்புத் தீனி வகைகள்.
துதிக்கவேண்டிய இராகம்: கல்யாணி

நவராத்திரி - முதல் நாள்

நவராத்திரி - முதல் நாள்
********************************

மது - கைடபர் எனும் இரு அரக்கர்கள் செய்த அட்டூழியங்கள் தாங்காது வழக்கம்போல் இருடிகளும், தேவர்களும் திருமாலிடம் முறையிட, அவர் தூங்காமல் தூங்கும்போது துர்க்கையை வழிபட்டார். துர்க்கையும், 10 தலைகள், 10 கால்களுடன் நீலநிற ஒளிவீசும் சினம் நிறைந்த கண்களுடன் கோர உருக்கொண்டு, அவதரித்து அரக்கர் இருவரையும் அழித்தாள். அவள் தன் கைகளில் ஏந்தி இருப்பவை:கத்தி,சக்கரம்,கதாயுதம்,அம்பு, வில், கேடயம்,சூலம்,குத்தீட்டி, மண்டைஓடு,சங்கு ஆகியன.


தேவியை அபயம்,வரதம்,புத்தகம்,அக்கரமாலை ஆகியவற்றுடன் கூடிய "குமரி" வடிவில் அலங்கரித்து வழிபடுதல் மரபு என்பார் சிலர். இன்னும் சிலர், சாமுண்டியாகவும், வராகியாகவும் வழிபடல் நன்று என்பார்.



படையல்: தயிர்சாதம்,சக்கரைப் பொங்கல்.

துதிக்கவேண்டிய இராகம்: தோடி



படங்கள் காண: வையம் பதிவில் புன்னை நல்லூர் இடுகைகளைக் காண்க; (அருள்கூர்ந்து அம்மையின் கைகள் குறைகின்றன என முறையிடவேண்டாம். ஏதோ கிட்டியவற்றை இட்டுள்ளேன்)

நவராத்திரி - 1

நவராத்திரி
*************
முன்னுரை
************
இக்கட்டுரை சாதாரணமான, பாமர மக்களுக்கும், பக்தி மார்க்கம் மட்டுமே அறிந்தவர்க்கும் எழுதப்படுகின்றது. இது யோகிகளுக்கும், ஞானிகளுக்கும், பகுத்தறிவாளர்களுக்குமல்ல. இதன் பிண்ணணிக் கதைகள் பலவுண்டு. "நம்பினால் நடராசா; இல்லையேல் எமராசா."

பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவைகள் ஒருவரின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவதாகும். இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும், இந்தியர்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும், மற்றும் ஈழத்திலும் இத்திருவிழா மகிழ்வுடன் கொண்டாடப் படுகிறது. இதுவே 10நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இடத்துக்கு இடம் கொண்டாடும் முறைகளில் வேறுபாடுகள் இருப்பினும் வேண்டுவது அன்னை சக்தியைத்தான். கல்வி, செல்வம், வீரம் ஆகிய குண நலன்களைத் தருபவள் சக்தி.

சக்தி யார்?

அண்டம் வெடித்துச் சிதறியபோது ஒளிப்பிழம்பாய் வெளிவந்தவளே அன்னை பராசக்தி. அகிலத்தையும்(உலகையும்) இயக்குவது அச்சக்தியே. அன்னையும் அவளே; அன்னையாகும் சக்தியும் அவளே. இல்லத்தில் அன்னையைப் பூசிப்பதுபோல் அகிலத்தில் பராசக்தியைப் பூசித்தல் வேண்டும்.

அவளே மூம்மூர்த்திகளையும் படைத்து முத்தொழிலையும் கொடுத்து, மூவிடத்தையும் கொடுத்து, அவர்கட்கு இச்சா சக்தி, கிரியா சக்தி(செயல் திறன்), ஞான சக்தி ஆகிய முத்தேவியரையும் படைத்து அவர்கட்கு அளித்தாள்.

இச்சா சக்தி - மலைமகள்
கிரியா சக்தி(செயல் திறன்)- அலைமகள்
ஞான சக்தி - கலைமகள்

இம்மூன்று சக்திகளும் ஒன்றுபட்ட நிலையே சண்டிகாதேவி.
மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரையும் 9 நாட்களில் 9 உருக்களில் வணங்கும் திருவிழாவே நவராத்திரி.

சாற்றிறங்கள் 4 நவராத்திரிகள் கொண்டாடப்படல்வேண்டும் எனக் கூறுகிறது.
அவைகள் - சித்திரை, ஐப்பசி, ஆடி, மாசி மாதங்களில் கொண்டாட வேண்டும். அதில் இப்பொழுது புழக்கத்தில் இருப்பவை சித்திரையிலும், புரட்டாசியிலும்(ஐப்பசி) வரும் நவராத்திரிகள்தான். அதிலும் புரட்டாசி(ஐப்பசி) யில் வரும் திருவிழாதான் அதிகமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சூரியனது கதிர் வீச்சில் கோடை காலத்தின் ஆரம்பமும் குளிர் காலத்தின் ஆரம்பமும் இரண்டு முக்கிய கால கட்டங்கள். இந்த இரண்டு காலப் பகுதிகளிலும் மனிதருக்கு நோய்கள் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் அந்தக் காலங்களில் எதிர்ப்பு சக்தியை வேண்டி சக்தியை வழிபட்டு வந்தார்கள்.

இதையே, "பங்குனியும் புரட்டாசியும் யமனின் இரு தாடைகள் போன்றவை. அவற்றில் அகப்படாமல் தப்பவேண்டுமானால் இந்த இரு காலங்களிலும் சக்தியை வழிபடவேண்டும்" என்று கூறுகிறது அக்கினி புராணம். தேவி பாகவதமும் இக்கருத்தையே கூறுகிறது. இதனாலேயே வருடத்தில் இரு தடவைகள் நவராத்திரி கொண்டாடப் படுகின்றது. ஒன்று சித்திரையில் அதாவது வசந்த நவராத்திரி. மற்றது குளிர் காலத்தில் அதாவது புரட்டாசி ஐப்பசியில் கொண்டாடப்படும் சாரத நவராத்திரி.

சோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது:
சூரியன் கோட்சாரத்தில் புரட்டாசி மாதத்தில் கன்னி இராசிக்கு வருகிறான். மிதுனமும் கன்னியும் புதனின் வீடுகள். புதன் அறிவை வளர்ப்பவன். ஆகையால் புஅரட்டாசியில் வளர்பிறையில் அறிவோடு சேர்ந்து ஆதவனின் மூலமாக மாயையாகிய பராசக்தியை வழிபடுவது சிறந்தது.

முப்பெரும் தேவிரை 9 சக்தி உருக்களாக உருவகித்துள்ளனர் பெரியோர்.
1.மகேசுவரி
2.கெளமாரி
3.வராகி
4.மகாலட்சுமி
5.வைணவி
6.இந்திராணி
7.மகாசரசுவதி
8.நரசிம்மி
9.சாமுண்டி.

சக்தி தத்துவங்கள் திருமந்திரத்தில் 400 பாடல்களில் சொல்லப் பட்டுள்ளன. அவைகளை எழுத ஆரம்பி்த்தால் அடுத்த நவராத்திரி வந்துவிடும்.

முதல் மூன்று நாட்களில் மகாகாளி எனும் உருத்திர துர்க்கையையும், அடுத்த 3 தினங்களில் இலட்சுமி துர்க்கையையும், இறுதி 3 தினங்களில் சரசுவதி துர்க்கையையும் பூசித்தல் மரபு.

தொடரும்...

அம்மை ஆயிரம் - 13

அம்மை ஆயிரம் - 13
**********************
ஓம் மின்னனையாளம்மையே போற்றி

ஓம் மீனாட்சியே போற்றி

ஓம் முக்கண்ணியே போற்றி

ஓம் முத்தியே போற்றி

ஓம் முத்தாம்பிகையே போற்றி

ஓம் முத்தி தருபவளே போற்றி

ஓம் முத்து மாரியே போற்றி

ஓம் முதல்வியே போற்றி

ஓம் முதலாகி நடுவாகி முடிவானவளே போற்றி

ஓம் முதுகுன்றம் அமர்ந்தவளே போற்றி

ஓம் மும்மலம் அறுப்பவளே போற்றி

ஓம் முருவல் பூத்த முகத்தழகியே போற்றி

ஓம் முல்லைவன நாயகியே போற்றி

ஓம் முழுமுதற் சோதியே போற்றி

ஓம் முளையே போற்றி

ஓம் முன்னவளே போற்றி

ஓம் மூகாம்பிகையே போற்றி

ஓம் மூர்க்கையே போற்றி

ஓம் மூவிலை வேல்கொண்டவளே போற்றி

ஓம் மூலமே போற்றி

ஓம் மூலத்தின் மோனமே போற்றி

ஓம் மேக நாயகியே போற்றி

ஓம் மேகலாம்பிகையே போற்றி

ஓம் மேன்மை தருபவளே போற்றி

ஓம் மைமேவு கண்ணியே போற்றி

ஓம் மோகம் தீர்ப்பவளே போற்றி

ஓம் மோகினியே போற்றி

ஓம் மோனமே போற்றி

ஓம் மோனத்தே ஒளி காட்டுபவளே போற்றி

ஓம் யாக்கை துறக்க அருளுவோளே போற்றி

ஓம் யாமளையே போற்றி

ஓம் யாழின் மென்மொழியம்மையே போற்றி

ஓம் யோக நாயகியே போற்றி

ஓம் யோகினியே போற்றி

ஓம் வச்சிரத்தம்ப நாயகியே போற்றி

ஓம் வஞ்சியே போற்றி

ஓம் வஞ்சம் நீக்குபவளே போற்றி

ஓம் வஞ்சவமே போற்றி

ஓம் வஞ்சனியே போற்றி

ஓம் வடதளிச் செல்வியே போற்றி

ஓம் வடிவுடை அம்மையே போற்றி

ஓம் வடுவகிர்க் கண்ணம்மையே போற்றி

ஓம் வடுகன் தாயே போற்றி

ஓம் வடுகியே போற்றி

ஓம் வண்டமர் பூங்குழலியே போற்றி

ஓம் வயப்புலி ஆசனத்தாளே போற்றி

ஓம் வயிரவியே போற்றி

ஓம் வரதையே போற்றி

ஓம் வரலக்குமியே போற்றி

ஓம் வரம் அளிப்பவளே போற்றி

ஓம் வராலிகையே போற்றி

ஓம் வராளமே போற்றி

ஓம் வல்லணங்கே போற்றி

ஓம் வல்வினை தீர்ப்பவளே போற்றி

ஓம் வல்லபியே போற்றி

ஓம் வலவையே போற்றி

ஓம் வழித்துணையே போற்றி

ஓம் வள்ளலே போற்றி

ஓம் வளர்தலும் தேய்தலும் இல்லாதவளே போற்றி

ஓம் வளமெலாம் தருபவளே போற்றி

ஓம் வளியே போற்றி

ஓம் வறுமை ஒழிப்பவளே போற்றி

ஓம் வனப்பே போற்றி

ஓம் வனமாலினியே போற்றி

ஓம் வனமுலைநாயகி அம்மையே போற்றி

ஓம் வாக்கால் மறைவிரித்தவளே போற்றி

ஓம் வாக்கில் துலங்குபவளே போற்றி

ஓம் வாசியே போற்றி

ஓம் வாடா மலர்மங்கையே போற்றி

ஓம் வாணெடுங்கண்ணியம்மையே போற்றி

ஓம் வாமதேவியே போற்றி

ஓம் வாய்மூர் நாயகியே போற்றி

ஓம் வார்வினை தீர்ப்பவளே போற்றி

ஓம் வாரணியே போற்றி

ஓம் வாலையே போற்றி

ஓம் வாழவந்த நாயகியே போற்றி

ஓம் வாளேந்தியே போற்றி

ஓம் வானவர் தாயே போற்றி

ஓம் வானில் ஒலியே போற்றி

ஓம் வானில் எழுத்தே போற்றி

ஓம் விகிர்தேசுவரியே போற்றி

ஓம் விசயவல்லியே போற்றி

ஓம் விசாலாட்சியே போற்றி

ஓம் விசுத்தியின் நாயகியே போற்றி

ஓம் விடமியே போற்றி

ஓம் விடாமுயற்சி தருபவளே போற்றி

ஓம் விடியா விளக்கே போற்றி

ஓம் விடையுடையாளே போற்றி

ஓம் விண்ணரசியே போற்றி

ஓம் வித்தே போற்றி

ஓம் விந்தே போற்றி

ஓம் விந்தையே போற்றி

ஓம் விமலனின் நாயகியே போற்றி

ஓம் விமலையே போற்றி

ஓம் விரிசடையாளே போற்றி

ஓம் விருத்தாம்பிகையே போற்றி

ஓம் வில்லம்பு ஏந்தியவளே போற்றி

ஓம் வினை அழிப்பவளே போற்றி

ஓம் வீடுபேறின் எல்லையே போற்றி

ஓம் வீதிவிடங்கியே போற்றி

ஓம் வீர சக்தியே போற்றி

ஓம் வீரச் செல்வியே போற்றி

ஓம் வீர மாகாளியே போற்றி

ஓம் வீரட்டேசுவரியே போற்றி

ஓம் வீர லக்குமியே போற்றி

ஓம் வீரியே போற்றி

ஓம் வெகுளி அறுப்பவளே போற்றி

ஓம் வெங்கதிர் நாயகியே போற்றி

ஓம் வெஞ்சினம் நீக்குபவளே போற்றி

ஓம் வெம்பவம் நீக்குபவளே போற்றி

ஓம் வெம்மை தவிர்ப்பவளே போற்றி

ஓம் வெற்றி தருபவளே போற்றி

ஓம் வேத நாயகியே போற்றி

ஓம் வேதமே போற்றி

ஓம் வேதபுரி ஈசுவரியே போற்றி

ஓம் வேத முடிவே போற்றி

ஓம் வேத வல்லியே போற்றி

ஓம் வேதனை தீர்ப்பவளே போற்றி

ஓம் வேதாளியே போற்றி

ஓம் வேம்பே போற்றி

ஓம் வேயுறுதோளி அம்மையே போற்றி

ஓம் வேள்வியே போற்றி

ஓம் வேள்வியின் பயனே போற்றி

ஓம் வேற்கண்ணி நாயகியே போற்றி

ஓம் வேலனின் தாயே போற்றி

****************

ஆதியே துணை

****************

அம்மை ஆயிரம் - 12

அம்மை ஆயிரம் - 12
**********************
ஓம் பாசம் உடையவளே போற்றி

ஓம் பாடலையே போற்றி

ஓம் பார் முழுதும் ஆகினவளே போற்றி

ஓம் பார்வதி அம்மையே போற்றி

ஓம் பாலாம்பிகையே போற்றி

ஓம் பாலின் நன்மொழியாளே போற்றி

ஓம் பாலின் நெய்யே போற்றி

ஓம் பாலைக் கிழத்தியே போற்றி

ஓம் பாவம் தீர்ப்பவளே போற்றி

ஓம் பிங்கலையே போற்றி

ஓம் பிஞ்ஞகன் பிராட்டியே போற்றி

ஓம் பிணிதீர்க்கும் மருந்தே போற்றி

ஓம் பிணி தீர்ப்பவளே போற்றி

ஓம் பிணியிலா வழ்வு தருபவளேபோற்றி

ஓம் பித்தன் மணாட்டியே போற்றி

ஓம் பிரகேசுவரியே போற்றி

ஓம் பிரமபுரியாளே போற்றி

ஓம் பிராட்டியே போற்றி

ஓம் பிரியா ஈசுவரியே போற்றி

ஓம் பிருகந்நாயகியே போற்றி

ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தருபவளே போற்றி

ஓம் பிறப்பு இறப்பு இல்லாதவளே போற்றி

ஓம் பிறப்பு இறப்பு அறுப்பவளே போற்றி

ஓம் புகலிடம் நீயே போற்றி

ஓம் புங்கவியே போற்றி

ஓம் புண்ணியம் தருபவளே போற்றி

ஓம் புத்தியே போற்றி

ஓம் புத்தீயின் அரவே போற்றி

ஓம் புந்தியுள் புகுந்தவளே போற்றி

ஓம் புரிகுழலாம்பிகையே போற்றி

ஓம் புராசத்தியே போற்றி

ஓம் புராந்தகியே போற்றி

ஓம் புராண சிந்தாமணியே போற்றி

ஓம் புராதனியே போற்றி

ஓம் புலன் ஒடுக்க அருள்பவளே போற்றி

ஓம் புலி ஆசனத்தாளே போற்றி

ஓம் புவன நாயகியே போற்றி

ஓம் புவனிவிடங்கியே போற்றி

ஓம் புற்றிடங் கொண்டவளே போற்றி

ஓம் புனிதவதியே போற்றி

ஓம் பூவே போற்றி

ஓம் பூங்கொடி நாயகியே போற்றி

ஓம் பூங்கோதையே போற்றி

ஓம் பூதநாயகியே போற்றி

ஓம் பூந்துருத்திப் பூவையே போற்றி

ஓம் பூரணமே போற்றி

ஓம் பூவனூர்ப் புனிதவல்லியே போற்றி

ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி

ஓம் பெண்ணின்நல்லாளே போற்றி

ஓம் பெரியவளே போற்றி

ஓம் பெரியநாயகியே போற்றி

ஓம் பெருங்கருணை நாயகியே போற்றி

ஓம் பெரும்பற்றப் புலியூராளே போற்றி

ஓம் பெருநெறியே போற்றி

ஓம் பெருநெறி உய்க்கும் பேரரசியே போற்றி

ஓம் பெருவெளியே போற்றி

ஓம் பேரண்டமே போற்றி

ஓம் பேரருளே போற்றி

ஓம் பேராற்றலே போற்றி

ஓம் பைரவியே போற்றி

ஓம் பொறுமைக் கடலே போற்றி

ஓம் போதமே போற்றி

ஓம் போரூர் நாயகியே போற்றி

ஓம் மகத்தில் உதித்தவளே போற்றி

ஓம் மகமாயியே போற்றி

ஓம் மகதியே போற்றி

ஓம் மகாலக்குமியே போற்றி

ஓம் மகாமாயையே போற்றி

ஓம் மங்கல நாயகியே போற்றி

ஓம் மங்களாம்பிகையே போற்றி

ஓம் மங்கையர்க்கரசியே போற்றி

ஓம் மங்கை நாயகியே போற்றி

ஓம் மட்டுவார் குழலம்மையே போற்றி

ஓம் மடங்கல் ஆசனத்தாளே போற்றி

ஓம் மண்துலங்க ஆடி மகிழ்ந்தவளேபோற்றி

ஓம் மண்டல ஈசுவரியே போற்றி

ஓம் மணியே போற்றி

ஓம் மணியின் ஒளியே போற்றி

ஓம் மதம் நீக்கி அருள்பவளே போற்றி

ஓம் மதங்கியே போற்றி

ஓம் மதியே போற்றி

ஓம் மதிநலம் தருபவளே போற்றி

ஓம் மதிக்கு விருந்தே போற்றி

ஓம் மதுபதியே போற்றி

ஓம் மதுர காளியே போற்றி

ஓம் மந்திரம் உரைக்கும் பொருளே போற்றி

ஓம் மந்திரமும் தந்திரமும் ஆன மலரடியாளே போற்றி

ஓம் மயக்கம் தீர்ப்பவளே போற்றி

ஓம் மயேசுவரியே போற்றி

ஓம் மரகத வல்லியே போற்றி

ஓம் மருத்துண்ணியே போற்றி

ஓம் மலைமகளே போற்றி

ஓம் மருள் நீக்குபவளே போற்றி

ஓம் மருவார் குழலியம்மையே போற்றி

ஓம் மலர்குழல் நாயகியே போற்றி

ஓம் மலர்மங்கை நாயகியே போற்றி

ஓம் மறவா நினைவைத் தருபவளே போற்றி

ஓம் மறைக்காட்டுறை மாதே போற்றி

ஓம் மறைப்பே போற்றி

ஓம் மறையே போற்றி

ஓம் மறையின் வேரே போற்றி

ஓம் மறைப் பொருளே போற்றி

ஓம் மறையாப் பொருளே போற்றி

ஓம் மனமணி விளக்கே போற்றி

ஓம் மனமே போற்றி

ஓம் மனக் குகை உறைபவளே போற்றி

ஓம் மனத்திற்கு விருந்தானவளே போற்றி

ஓம் மனத்துணை நாயகியே போற்றி

ஓம் மன நலம் அருள்பவளே போற்றி

ஓம் மனமருட்சி நீக்குபவளே போற்றி

ஓம் மனோன்மணியே போற்றி

ஓம் மாசில்லாத் தாயே போற்றி

ஓம் மாண்புடைய நெறிதருபவளே போற்றி

ஓம் மாணிக்கமே போற்றி

ஓம் மாணிக்க வல்லியே போற்றி

ஓம் மாதங்கியே போற்றி

ஓம் மாதரியே போற்றி

ஓம் மாதவன் தங்கையே போற்றி

ஓம் மாதுமை அம்மையே போற்றி

ஓம் மாதேவியே போற்றி

ஓம் மாமணிச் சோதியே போற்றி

ஓம் மாமருந்தே போற்றி

ஓம் மாயாவதியே போற்றி

ஓம் மாயையே போற்றி

ஓம் மாயூரவாணியே போற்றி

ஓம் மாலினியே போற்றி

ஓம் மாவினையாளருக்கு முத்தியே போற்றி

ஓம் மாழையங் கண்ணியே போற்றி

ஓம் மானே போற்றி

அம்மை ஆயிரம் - 11

அம்மை ஆயிரம் - 11
**********************
ஓம் தீமையும் பாவமும் களைபவளே போற்றி

ஓம் தீயிடை ஒளியே போற்றி

ஓம் தீயிடை வெம்மையே போற்றி

ஓம் தீரா வினை தீர்ப்பவளே போற்றி

ஓம் துணைமாலை நாயகியே போற்றி

ஓம் துணைவியே போற்றி

ஓம் துதிப்போர்க்கு அருள்பவளே போற்றி

ஓம் துயர் எல்லாம் துடைப்பவளே போற்றி

ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி

ஓம் தூயவளே போற்றி

ஓம் தூய நெறியே போற்றி

ஓம் தூய்மையும் அறிவும் தருபவளே போற்றி

ஓம் தெய்வமே போற்றி

ஓம் தெளிவே போற்றி

ஓம் தெளிவினில் சீலமே போற்றி

ஓம் தென்பாண்டி நாட்டாளே போற்றி

ஓம் தேவியே போற்றி

ஓம் தேன்மொழியாளே போற்றி

ஓம் தேனார் அமுதே போற்றி

ஓம் தையல்நாயகியே போற்றி

ஓம் தொழுதகை துன்பம் துடைப்பவளே போற்றி

ஓம் தொலையாச் செல்வம் தருபவளே போற்றி

ஓம் தொல்லை போக்குபவளே போற்றி

ஓம் தோகையாம்பிகையே போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோணியப்பன் நாயகியே போற்றி

ஓம் தோன்றாத் துணையே போற்றி

ஓம் நக்கன் நாயகியே போற்றி

ஓம் நம்பன் நாயகியே போற்றி

ஓம் நல் அரவே போற்றி

ஓம் நல்லநாயகியே போற்றி

ஓம் நல்லன தருபவளே போற்றி

ஓம் நல்லூர்வாழ் நங்கையே போற்றி

ஓம் நலமெலாம் நல்குபவளே போற்றி

ஓம் நலிந்தோர்க்கு அருள்பவளே போற்றி

ஓம் நற்கனிச் சுவையே போற்றி

ஓம் நற்கதி தருபவளே போற்றி

ஓம் நறுங்குழல் நாயகியே போற்றி

ஓம் நறுமலர் அடியாளே போற்றி

ஓம் நாகமே போற்றி

ஓம் நாகக் குடையாளே போற்றி

ஓம் நாகேசுவரத்தில் உள்ளவளே போற்றி

ஓம் நாதமே போற்றி

ஓம் நாத ஞானம் அருள்பவளே போற்றி

ஓம் நாத விந்துவே போற்றி

ஓம் நாயகியே போற்றி

ஓம் நாரணியே போற்றி

ஓம் நாரியே போற்றி

ஓம் நாவில் சுவையே போற்றி

ஓம் நாவில் நடமிடுபவளே போற்றி

ஓம் நித்திய கல்யாணியே போற்றி

ஓம் நித்தியப் பொருளே போற்றி

ஓம் நித்திரை நீக்குபவளே போற்றி

ஓம் நிதி தந்து அருள்பவளே போற்றி

ஓம் நிம்மதி தந்து அருள்பவளே போற்றி

ஓம் நிமலையே போற்றி

ஓம் நிரஞ்சனியே போற்றி

ஓம் நிரந்தரியே போற்றி

ஓம் நிருத்தன் நாயகியே போற்றி

ஓம் நிறைவே போற்றி

ஓம் நினைவே போற்றி

ஓம் நீதியே போற்றி

ஓம் நீலகண்டன் நாயகியே போற்றி

ஓம் நீலாம்பிகையே போற்றி

ஓம் நீலியே போற்றி

ஓம் நீலாங்கமேனியாளே போற்றி

ஓம் நீள் உலகு எங்கும் நிறைந்தவளே போற்றி

ஓம் நுண்ணுணர்வே போற்றி

ஓம் நுண்பொருளே போற்றி

ஓம் நுதனாட்டியே போற்றி

ஓம் நெற்றிக் கண்ணன் நாயகியே போற்றி

ஓம் நெறியே போற்றி

ஓம் நெறிகாட்டும் நாயகியே போற்றி

ஓம் நோக்கரிய நோக்கே போற்றி

ஓம் பகவதியே போற்றி

ஓம் பகுந்துண்பாளே போற்றி

ஓம் பகை போக்குபவளே போற்றி

ஓம் பசுபதி மணாட்டியே போற்றி

ஓம் பசும்பொன் மயிலாம்பாளே போற்றி

ஓம் பஞ்சின் மெல்லடியாளே போற்றி

ஓம் பட்டாடை உடுத்துபவளே போற்றி

ஓம் பட்டீசுரத்து பாவையே போற்றி

ஓம் படவெட்டி மாரியே போற்றி

ஓம் பண்மொழியம்மையே போற்றி

ஓம் பண்ணாரி அம்மையே போற்றி

ஓம் பண்ணுறு கேள்வியே போற்றி

ஓம் பணிந்தவர் பாவங்கள் தீர்ப்பவளே போற்றி

ஓம் பணிந்தோர்க்கு அருள்பவளே போற்றி

ஓம் பத்திரகாளியே போற்றி

ஓம் பந்த பாசம் அறுப்பவளே போற்றி

ஓம் பந்தாடு நாயகியே போற்றி

ஓம் பம்பை உடுக்கை கொண்டவளே போற்றி

ஓம் பயங்கரியே போற்றி

ஓம் பரகதி தருபவளே போற்றி

ஓம் பரங்கருணை நாயகியே போற்றி

ஓம் பரமயோகியே போற்றி

ஓம் பரம சுந்தரியே போற்றி

ஓம் பரிபுரையே போற்றி

ஓம் பராசக்தியே போற்றி

ஓம் பராயத்துறை நாயகியே போற்றி

ஓம் பரையே போற்றி

ஓம் பல்கோடி குணமுள்ளவளே போற்றி

ஓம் பல்லூழி படைத்தவளே போற்றி

ஓம் பவளக்கொடி அம்மையே போற்றி

ஓம் பவானியே போற்றி

ஓம் பழம்பதிப் பாவையே போற்றி

ஓம் பழமலைப் பிராட்டியே போற்றி

ஓம் பழனத்து அம்மையே போற்றி

ஓம் பழி தீர்ப்பவளே போற்றி

ஓம் பழியிலாதவளே போற்றி

ஓம் பழையாற்றுப் பதுமையே போற்றி

ஓம் பற்றிய வினைகள் போக்குபவளே போற்றி

ஓம் பற்றிலா நெஞ்சம் அருள்பவளே போற்றி

ஓம் பனசையே போற்றி

அம்மை ஆயிரம் - 10

அம்மை ஆயிரம் - 10
**********************
ஓம் செகமாயையே போற்றி

ஓம் செங்கண்ணன் நாயகியே போற்றி

ஓம் செஞ்சடையோன் மணாட்டியே போற்றி

ஓம் செந்தாளே போற்றி

ஓம் செம்மலர் அணிந்தவளே போற்றி

ஓம் செய்வினை அழிப்பவளே போற்றி

ஓம் செருக்கு அறுப்பவளே போற்றி

ஓம் செல்வம் தருபவளே போற்றி

ஓம் செல்வநாயகியே போற்றி

ஓம் செவ்விய ஞானம் தருபவளே போற்றி

ஓம் செழுஞ்சுடரே போற்றி

ஓம் செறிவே போற்றி

ஓம் செறிகின்ற ஞானமே போற்றி

ஓம் செறுபகை வெல்பவளே போற்றி

ஓம் சேய் பிழை பொறுப்பவளே போற்றி

ஓம் சேவடி சிந்தையில் வைத்தவளே போற்றி

ஓம் சொக்கியே போற்றி

ஓம் சொர்ணபுரி நாயகியே போற்றி

ஓம் சோகம் அழிப்பவளே போற்றி

ஓம் சோதி மின்னம்மையே போற்றி

ஓம் சோதிக்கும் சோதியே போற்றி

ஓம் சோதியுள் சுடரே போற்றி

ஓம் சோம்பல் நீக்குபவளே போற்றி

ஓம் சோம கலாநாயகியே போற்றி

ஓம் சோமேசுவரியே போற்றி

ஓம் சோர்வு அகற்றுபவளே போற்றி

ஓம் சௌந்தர வல்லியே போற்றி

ஓம் ஞாலத்து அரசியே போற்றி

ஓம் ஞானக் கண்ணே போற்றி

ஓம் ஞானக் கனலே போற்றி

ஓம் ஞானத்தின் ஒண்சுடரே போற்றி

ஓம் ஞானத்தை நாவில் வைப்பவளே போற்றி

ஓம் ஞானப் பெருங் கடலே போற்றி

ஓம் ஞானாம்பிகையே போற்றி

ஓம் ஞான வல்லியம்மையே போற்றி

ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

ஓம் ஞான முத்திரையே போற்றி

ஓம் ஞானம் தருபவளே போற்றி

ஓம் தக்கன் மகளே போற்றி

ஓம் தடுத்தாட்கொண்டவளே போற்றி

ஓம் தண்டினியே போற்றி

ஓம் தத்துவமே போற்றி

ஓம் தத்துவ உரையே போற்றி

ஓம் தத்துவ ஞானமே போற்றி

ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி

ஓம் தந்திரமே போற்றி

ஓம் தர்ப்பாரணியேசுவரியே போற்றி

ஓம் தரணி காப்பவளே போற்றி

ஓம் தராசத்தியே போற்றி

ஓம் தருமமே போற்றி

ஓம் தருமபுரி ஈசுவரியே போற்றி

ஓம் தருமத்தின் செல்வியே போற்றி

ஓம் தலைவியே போற்றி

ஓம் தவமே போற்றி

ஓம் தவ நெறியே போற்றி

ஓம் தவ நெறி தருபவளே போற்றி

ஓம் தவப் பயனே போற்றி

ஓம் தவளவெண்ணகை அம்மையே போற்றி

ஓம் தவசியே போற்றி

ஓம் தழலே போற்றி

ஓம் தளரா மனம் தருபவளே போற்றி

ஓம் தற்பரையே போற்றி

ஓம் தன்விதி மீறாத் தலைவியே போற்றி

ஓம் தன்னையறிய வழிகாட்டுபவளே போற்றி

ஓம் தன்னை வெல்லும் திறனளிப்பவளே போற்றி

ஓம் தனக்குவமை இல்லாளே போற்றி

ஓம் தனமும் கல்வியும் தருபவளே போற்றி

ஓம் தனியெழுத்தே போற்றி

ஓம் தாண்டவியே போற்றி

ஓம் தாண்டவத்தின் இலக்கணமே போற்றி

ஓம் தாங்கொணா வறுமை அகற்றுபவளே போற்றி

ஓம் தார்மாலை அணிந்தவளே போற்றி

ஓம் தாயே போற்றி

ஓம் தாயினும் சிறந்தவளே போற்றி

ஓம் தாழ்சடையோன் நாயகியே போற்றி

ஓம் தாழ்வு வராது காப்பவளே போற்றி

ஓம் தான்தோன்றியே போற்றி

ஓம் தானமே போற்றி

ஓம் தானே அனைத்தும் ஆனவளே போற்றி

ஓம் திகழ்பதி எங்கும் உள்ளவளே போற்றி

ஓம் திகம்பரியே போற்றி

ஓம் திசைமுகியே போற்றி

ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

ஓம் திருவடிப் பேறு அருள்பவளே போற்றி

ஓம் திருவே உருவே போற்றி

ஓம் திருக்குழல் நாயகியம்மையே போற்றி

ஓம் திருநிலை நாயகியே போற்றி

ஓம் திருமடந்தை அம்மையே போற்றி

ஓம் திருப்பயற்று ஈசுவரியே போற்றி

ஓம் திருமுண்டீச்சுவரியே போற்றி

ஓம் தில்லைக் காளியே போற்றி

அம்மை ஆயிரம் - 9

அம்மை ஆயிரம் - 9
*********************
ஓம் சக்தியே போற்றி

ஓம் சக்கரம் ஏந்தியவளே போற்றி

ஓம் சங்கரியே போற்றி

ஓம் சங்கு ஏந்தியவளே போற்றி

ஓம் சங்கொலியே போற்றி

ஓம் சசிகண்டன் நாயகியே போற்றி

ஓம் சட்டைநாதன் நாயகியே போற்றி

ஓம் சடாமகுடன் மணாட்டியே போற்றி

ஓம் சடைச்சியே போற்றி

ஓம் சண்டிகையே போற்றி

ஓம் சண்பக வனக் குயிலே போற்றி

ஓம் சத்தானவளே போற்றி

ஓம் சத்திய வடிவே போற்றி

ஓம் சத்தியவாகீசன் சத்தியே போற்றி

ஓம் சத்தியம் காத்தருள்பவளே போற்றி

ஓம் சந்தன மாரியே போற்றி

ஓம் சம்புநாதன் மணாட்டியே போற்றி

ஓம் சமரியே போற்றி

ஓம் சமயபுரத்தாளே போற்றி

ஓம் சர்வாங்க நாயகியே போற்றி

ஓம் சற்குண வல்லியே போற்றி

ஓம் சாத்தவியே போற்றி

ஓம் சாதகையே போற்றி

ஓம் சாதனை செய்வோருக்கு அருள்பவளே போற்றி

ஓம் சாந்த நாயகியே போற்றி

ஓம் சாம்பவியே போற்றி

ஓம் சாம கண்டன் நாயகியே போற்றி

ஓம் சாமுண்டியே போற்றி

ஓம் சாயா தேவியே போற்றி

ஓம் சிக்கல் தீர்ப்பவளே போற்றி

ஓம் சிகண்டியே போற்றி

ஓம் சிங்கார வல்லியே போற்றி

ஓம் சித்தமே போற்றி

ஓம் சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி

ஓம் சித்தத்துள் நடனம் ஆடுபவளே போற்றி

ஓம் சித்தியே போற்றி

ஓம் சித்தியின் உத்தியே போற்றி

ஓம் சித்தி தருபவளே போற்றி

ஓம் சித்துக்கள் செய்பவளே போற்றி

ஓம் சிந்துரப் பரிபுரையே போற்றி

ஓம் சிந்தை தெளிய வைப்பவளே போற்றி

ஓம் சிந்தை ஒழித்துணையே போற்றி

ஓம் சிந்தையில் நின்ற சிவாம்பிகையே போற்றி

ஓம் சிந்ததையைச் சிவமாக்குபவளே போற்றி

ஓம் சிந்தையுள் தெளிவே போற்றி

ஓம் சிந்தனைக்கு அரியவளே போற்றி

ஓம் சிம்ம வாகனத்தாளே போற்றி

ஓம் சிலம்பு அணிந்தவளே போற்றி

ஓம் சிவகதி தருபவளே போற்றி

ஓம் சிவகாமியே போற்றி

ஓம் சிவசக்தியே போற்றி

ஓம் சிவநெறி நடத்துபவளே போற்றி

ஓம் சிவயோக நாயகியே போற்றி

ஓம் சிவலோக வல்லியே போற்றி

ஓம் சிவவல்லபையே போற்றி

ஓம் சிவானந்த வல்லியே போற்றி

ஓம் சிவையே போற்றி

ஓம் சிற்றம்பலவாணி போற்றி

ஓம் சிற்றிடை நாயகியே போற்றி

ஓம் சிற்பரையே போற்றி

ஓம் சிற்சத்தியே போற்றி

ஓம் சிறப்பே போற்றி

ஓம் சிறுமை ஒழிப்பவளே போற்றி

ஓம் சினம் அறுப்பவளே போற்றி

ஓம் சீர் தருபவளே போற்றி

ஓம் சீர்மல்கு பாடலுகந்தவளே போற்றி

ஓம் சீரெழுத்தானவளே போற்றி

ஓம் சீலமே போற்றி

ஓம் சீவ சக்தியே போற்றி

ஓம் சுடர்க்கொழுந்தீசுவரியே போற்றி

ஓம் சுடர் நயனச் சோதியே போற்றி

ஓம் சுடலையாடி மணாட்டியே போற்றி

ஓம் சுந்தரியே போற்றி

ஓம் சுந்தராம்பிகையே போற்றி

ஓம் சுந்தர விடங்கன் நாயகியே போற்றி

ஓம் சுருதி நாயகியே போற்றி

ஓம் சுருதிக்கண் தூக்கமே போற்றி

ஓம் சுருதி முடிந்த இடமே போற்றி

ஓம் சுழல் கண்ணாளே போற்றி

ஓம் சுற்றம் காப்பவளே போற்றி

ஓம் சூது ஒழிப்பவளே போற்றி

ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி

ஓம் சூலியே போற்றி

ஓம் சூலை தீர்ப்பவளே போற்றி

ஓம் சூரியே போற்றி

அம்மை ஆயிரம் - 8

அம்மை ஆயிரம் - 8
*********************
ஓம் காட்சிப் பொருளே போற்றி

ஓம் காடமர் செல்வியே போற்றி

ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி

ஓம் காண இலிங்கியே போற்றி

ஓம் காதோலையாளே போற்றி

ஓம் காந்திமதியே போற்றி

ஓம் காந்தேசுவரியே போற்றி

ஓம் காம்பன தோளியம்மையே போற்றி

ஓம் காமம் களைபவளே போற்றி

ஓம் காமாட்சியே போற்றி

ஓம் காயத்திரியே போற்றி

ஓம் காரணியே போற்றி

ஓம் காரண காரிய வித்தே போற்றி

ஓம் காரண காரியம் வகுத்தவளே போற்றி

ஓம் காரண காரியம் கடந்தவளே போற்றி

ஓம் காரோணத்து அம்பிகையே போற்றி

ஓம் காலமே போற்றி

ஓம் காலத்தின் தலைவியே போற்றி

ஓம் காலத்தை வென்றவளே போற்றி

ஓம் காலத்தை வகுத்தவளே போற்றி

ஓம் கால நாயகியே போற்றி

ஓம் காலாந்தகியே போற்றி

ஓம் காவதேசுவரியே போற்றி

ஓம் காவியங் கண்ணியம்மையே போற்றி

ஓம் காவியமே போற்றி

ஓம் காவியச் சுவையே போற்றி

ஓம் காளகந்திரியே போற்றி

ஓம் காளத்தி நாயகியே போற்றி

ஓம் காற்றே போற்றி

ஓம் கானார் குழலியம்மையே போற்றி

ஓம் கிரிகுசாம்பிகையே போற்றி

ஓம் கிளியாடும் தோளுடையவளே போற்றி

ஓம் கீழ்வேளூர் ஆளும் அம்மையே போற்றி

ஓம் குங்கும வல்லியே போற்றி

ஓம் குடந்தைக்கு அரசியே போற்றி

ஓம் குடிலையே போற்றி

ஓம் குடோரியே போற்றி

ஓம் குண்டலியே போற்றி

ஓம் குண்டலக் காதுடையாளே போற்றி

ஓம் குணமே போற்றி

ஓம் குணக்குன்றே போற்றி

ஓம் குந்தமேந்தியே போற்றி

ஓம் குந்தள நாயகியே போற்றி

ஓம் குமரன் அம்மையே போற்றி

ஓம் குமரியே போற்றி

ஓம் குயிலினு நன்மொழியம்மையே போற்றி

ஓம் குருத்து வாள் கொண்டவளே போற்றி

ஓம் குரோதம் ஒழிப்பவளே போற்றி

ஓம் குலம் காப்பவளே போற்றி

ஓம் குவளைத் திருவாயே போற்றி

ஓம் குவித்த கரத்துள் வளரும் கருத்தே போற்றி

ஓம் குழவியாம் எமைக் காப்பவளே போற்றி

ஓம் குற்றமில் குணத்தாளே போற்றி

ஓம் குற்றம் பொறுக்கும் கோதையே போற்றி

ஓம் குறளை களைபவளே போற்றி

ஓம் குறிகுணம் கடந்தவளே போற்றி

ஓம் குறியற்ற இடமே போற்றி

ஓம் குறுக்கை வாகனத்தாளே போற்றி

ஓம் குறைவிலா நிறையே போற்றி

ஓம் குறைகள் களைபவளே போற்றி

ஓம் குன்றலில் மோகினியே போற்றி

ஓம் கூத்தின் தலைவியே போற்றி

ஓம் கூற்றமே போற்றி

ஓம் கூற்றுக்குக் கூற்றானவளே போற்றி

ஓம் கூறிலாப் பொருளே போற்றி

ஓம் கேசரியாளே போற்றி

ஓம் கேடிலியப்பன் நாயகியே போற்றி

ஓம் கேடுகள் களைபவளே போற்றி

ஓம் கேதாரநாதன் மணாட்டியே போற்றி

ஓம் கொடுமுடி வாழ் அம்பிகையே போற்றி

ஓம் கொடுமை அழிப்பவளே போற்றி

ஓம் கொடையுள்ளம் கொண்டவளே போற்றி

ஓம் கொற்றவையே போற்றி

ஓம் கோகிலேசுவரியே போற்றி

ஓம் கோடைக் கனலே போற்றி

ஓம் கோட்டை மாரியே போற்றி

ஓம் கோடரிக் கரத்தாளே போற்றி

ஓம் கோடிநாதன் நாயகியே போற்றி

ஓம் கோடிக்கா வாழ் குழலியே போற்றி

ஓம் கோடியாம் அந்தமே போற்றி

ஓம் கோணப்பிரான் கோதையே போற்றி

ஓம் கோதிலா அமுதே போற்றி

ஓம் கோதிலாத் தவமே போற்றி

ஓம் கோமகளே போற்றி

ஓம் கோல்வளை நாயகியே போற்றி

ஓம் கோழம்பத்து வாழ் கூத்தாம்பிகையே போற்றி

ஓம் கோளரவே போற்றி

ஓம் கௌரியே போற்றி

ஓம் கௌமாரியே போற்றி

அம்மை ஆயிரம் - 7

அம்மை ஆயிரம் - 7
*********************
ஓம் ஐங்கரன் தாயே போற்றி

ஓம் ஐந்தும் வென்றவளே போற்றி

ஓம் ஐந்தொழில் புரிபவளே போற்றி

ஓம் ஐம்புலன் அடக்க அருள்பவளே போற்றி

ஓம் ஐம்முகன் மணாட்டியே போற்றி

ஓம் ஐயம் தீர்ப்பவளே போற்றி

ஓம் ஐயையே போற்றி

ஓம் ஒத்த சங்கரியே போற்றி

ஓம் ஒப்பிலா மணியே போற்றி

ஓம் ஒப்பிலாவம்மையே போற்றி

ஓம் ஒப்புயர்வற்ற ஒளியே போற்றி

ஓம் ஒலியே போற்றி

ஓம் ஒலிக்கும் நாதமே போற்றி

ஓம் ஒலி அடங்கும் தூமாயையே போற்றி

ஓம் ஒழிவற நின்றவளே போற்றி

ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி

ஓம் ஒளிக்கு முதலே போற்றி

ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

ஓம் ஒளியாம் விந்துவே போற்றி

ஓம் ஒளியின் சுடரே போற்றி

ஓம் ஒற்றைக் காலில் தவம் புரிந்தவளே போற்றி

ஓம் ஒன்றுமிலா பெருவெளியே போற்றி

ஓம் ஒன்றா நெஞ்சில் உறைபவளே போற்றி

ஓம் ஓங்காரியே போற்றி

ஓம் ஓங்கார நாதமே போற்றி

ஓம் ஓங்கொளி வண்ணமுடையாளே போற்றி

ஓம் ஓசையாம் நாதமே போற்றி

ஓம் ஓசைகொடுத்த நாயகியே போற்றி

ஓம் ஓணேசுவரனின் நாயகியே போற்றி

ஓம் ஓதரிய பொருளே போற்றி

ஓம் ஓதா வேதமே போற்றி

ஓம் ஓர் எழுத்தே போற்றி

ஓம் ஓவாப்பிணி ஒழிப்பவளே போற்றி

ஓம் கங்கமே போற்றி

ஓம் கங்காளியே போற்றி

ஓம் கச்சி ஏகம்பனின் நாயகியே போற்றி

ஓம் கஞ்சனூர் ஆண்டவளே போற்றி

ஓம் கடந்தை நாயகியே போற்றி

ஓம் கடம்பவனக் குயிலே போற்றி

ஓம் கண்கவர்தேவியே போற்றி

ஓம் கண்ணபுரத்தாளே போற்றி

ஓம் கணக்கு வழக்கைக் கடந்தவளே போற்றி

ஓம் கணபதியை ஈன்றவளே போற்றி

ஓம் கண்ணிற் பாவையே போற்றி

ஓம் கண்ணார் அமுதே போற்றி

ஓம் கண்ணுடை நாயகியே போற்றி

ஓம் கதிரவனும் தொழும் ஒளிப்பிழம்பே போற்றி

ஓம் கதிரின் ஒளியே போற்றி

ஓம் கதியே விதியே போற்றி

ஓம் கதி விதி அமைத்தவளே போற்றி

ஓம் கதிர் மண்டல நடுவே போற்றி

ஓம் கதை ஏந்தியவளே போற்றி

ஓம் கபாலினியே போற்றி

ஓம் கமலம் ஏந்தியவளே போற்றி

ஓம் கமலாம்பிகையே போற்றி

ஓம் கயிலை மலையாளே போற்றி

ஓம் கரி இலக்குமியே போற்றி

ஓம் கருந்தார்க் குழலியே போற்றி

ஓம் கரும்பன்ன சொல்லியம்மையே போற்றி

ஓம் கருவே போற்றி

ஓம் கருவில் உயிரே போற்றி

ஓம் கருணாகரியே போற்றி

ஓம் கருணைக் கடலே போற்றி

ஓம் கரும்பனையாளம்மையே போற்றி

ஓம் கரும வினை தீர்ப்பவளே போற்றி

ஓம் கருமையே போற்றி

ஓம் கருமையின் வெளியே போற்றி

ஓம் கருமணியே போற்றி

ஓம் கருமாரியே போற்றி

ஓம் கருதுவார் கருதும் உருவே போற்றி

ஓம் கருத்தே போற்றி

ஓம் கருத்தின் அருத்தமே போற்றி

ஓம் கருத்தில் நினைவே போற்றி

ஓம் கருத்தாழ் குழலியம்மையே போற்றி

ஓம் கருத்தறிந்து அருள்பவளே போற்றி

ஓம் கருத்துறு செம்பொன்னே போற்றி

ஓம் கருவழிப் பிறப்பு அறுப்பவளே போற்றி

ஓம் கருவியின் காரியமே போற்றி

ஓம் கரரைகாணாப் பேரொளியே போற்றி

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

ஓம் கலகம் தவிர்ப்பவளே போற்றி

ஓம் கலி நீக்க வல்லவளே போற்றி

ஓம் கலையூர்தியே போற்றி

ஓம் கலையே போற்றி

ஓம் கலையின் ஒளியே போற்றி

ஓம் கலையானத்தியே போற்றி

ஓம் கவலை, பிணி தீர்ப்பவளே போற்றி

ஓம் கழல் பணிந்தோரைக் காப்பவளே போற்றி

ஓம் கழுமலத்தாளே போற்றி

ஓம் கற்குழி தூர்க்க வல்லவளே போற்றி

ஓம் கற்பக வல்லியே போற்றி

ஓம் கற்பனை கடந்த சோதியே போற்றி

ஓம் கற்றோர் உள்ளத்து உறைபவளே போற்றி

ஓம் கற்றோர் ஏத்தும் கழலே போற்றி

ஓம் கனங்குழையாளே போற்றி

ஓம் கனலே போற்றி

ஓம் கனியே போற்றி

ஓம் கனியினில் இனிமையே போற்றி

ஓம் கனிந்த முக அழகே போற்றி

ஓம் கனிவாய்மொழி அம்மையே போற்றி