Friday, February 05, 2010

கந்தர் கலிவெண்பா - 22

ஈறு முதலும்அகன் றெங்குநிறைந்(து) ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினாற் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ
பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துட் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலு மோவாதளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாதமணி முரசும் -சந்ததமும்

குரகதம் = குதிரை
ஏறுமதம் = உயர்ந்த சமயம்
களித்தோர் = மகிழ்ந்தவர்கள்
துதிக்கையினால் = வாழ்த்துவதால்
பஞ்ச மலம் = ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்)

காய்ந்த = ஒழித்த
சுடாக் களிறு = மதயானை

பூரணமாம் = முற்றறிவாகிய
மலரா = பூவாக
நார் = அன்பு
தொடை = மாலை
காரணத்துள் = காரியப்படுவதற்கு முற்பட்ட நிலையில்
வான்கொடி = பெரியகொடி, பரமாகாயமாகிய கொடி

நவ நாத = புது ஒலியுள்ள, புதுமை பயக்கும் நாத தத்துவம்
மணி = அழகிய
முரசும் = நாத தத்துவமாகிய முரசும்

முதலும் முடிவும் இல்லாது, எங்கும் நிறைந்த இறைவன் ஐந்தெழுத்து மந்திரமாகிய சொல்லால் செலுத்தக்கூடிய
குதிரையும், உயர்ந்த சமய நெறியில் ஒழுகி மகிழ்ச்சியடைந்த அன்பர்களுடைய வாழ்த்துக்களாம் தும்பிக்கையினால் ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்) ஆகிய ஐந்து பாசங்களையும் தொலைத்த சிவஞானமாகிய மத யானையும், எல்லாம் அறியும் அறிவுக்கும் அறிவாகிய புது மலரை உள்ள அன்பென்னும் நாரினால் கட்டிய பூமாலையும் (வெளிப்படையான பஞ்ச கிருத்தியத்திற்குக்) காரணமான ஐந்தொழிலையும் எப்போதும் செய்வதற்கு ஏதுவாகிய சத்தியாகிய பெரிய கொடியும், எப்போதும் புதுமையாயுள்ள ஓங்காரமாகிய அழகிய முரசும் .......

6 Comments:

kshetrayatraa said...

i have read ur explanation for agasthiyar's panchapatchi..
is that text is available in book format and if available, where can i get it...please inform me

tks n rgds
kshetrayatraa

ஞானவெட்டியான் said...

I have taken the original text from palm leaves and written in a diary and that too only the moolam. You can get it in all big book shops.

kshetrayatraa said...

Thanks sir.

cld u refer any bookshop in madras or madurai so that i can pick up the text whenever i visit this places.
Also i am looking for good old jyotish texts in tamil, can u guide me which one is good and its availability
thanks once again
kshetrayatraa

ஞானவெட்டியான் said...

My dear,
good old jyotish text- "Saathaka AlangAram"
You can pick up any Panchapatchi book and learn, if God's will is there. @ Madurai "Sarvodaya Ilakkiyap PaNNai" is prefereable.

Pl be careful while you practise PanvhaPatchi.

kshetrayatraa said...

Dear Sir,
Thank you. will try at madurai. Why you are saying be careful while practising panchapatchi..any reason or other experience.
if you dont mind, can i have your phone number so that i can call you..

thanks once again for all your help.

kshetrayatraa

ஞானவெட்டியான் said...

தகவிலர் யாரேனும் இதை அரைகுறையாகப் புரிந்துகொண்டு பாவித்தால், இதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தபின் உரையின்றித் தந்தோம்.

நேர்வழியில் பாவிக்க வாழ்வு வளமாகும்.
***********************************************

“பட்சி அறிந்தவனைப் பன்னிப் பகைத்து நிதம்
கட்சி புரிவோர் கருத்தழிவர் – குட்சி
எறியக் குலைத்துக் கெடுவர்காண் மண்ணில்
வறியராய் நொந்தலைவர் மற்று.”

“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.”

Cell:9789695988